என் மலர்
டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இருந்து ஒலிம்பிக் சாம்பியன் விலகல்
- ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஜனவரி 18 முதல் மெல்போர்னில் நடக்க உள்ளது.
- ஒலிம்பிக் சாம்பியனான குயின்வென் ஜெங் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.
சிட்னி:
டென்னிஸ் போட்டியின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஜனவரி 18-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை மெல்போர்னில் நடக்க உள்ளது.
இந்தத் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிங்கிள்ஸ், டபுள்ஸ், மிக்ஸ்ட் டபுள்ஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். இதில் டாப் 100 வீரர்களில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஒலிம்பிக் சாம்பியனும், சீன வீராங்கனையுமான குயின்வென் ஜெங் விலகியுள்ளார்.
இவர் கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் தொடரில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின், போட்டிகளில் இருந்து விலகியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






