என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குயின்வென் ஜெங்"

    • ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஜனவரி 18 முதல் மெல்போர்னில் நடக்க உள்ளது.
    • ஒலிம்பிக் சாம்பியனான குயின்வென் ஜெங் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    சிட்னி:

    டென்னிஸ் போட்டியின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஜனவரி 18-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை மெல்போர்னில் நடக்க உள்ளது.

    இந்தத் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிங்கிள்ஸ், டபுள்ஸ், மிக்ஸ்ட் டபுள்ஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். இதில் டாப் 100 வீரர்களில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஒலிம்பிக் சாம்பியனும், சீன வீராங்கனையுமான குயின்வென் ஜெங் விலகியுள்ளார்.

    இவர் கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் தொடரில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின், போட்டிகளில் இருந்து விலகியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் சீன வீராங்கனை வென்றார்.
    • குரோசியா வீராங்கனை வெகிக் தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனா வீரங்கனை குயின்வென் ஜெங், குரோசியா வீராங்கனை வெகிக்குடன் மோதினார்.

    இதில் ஜெங் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். குரோசிய வீராங்கனை வெகிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்றது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் தோல்வி அடைந்தார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் மோதினார்.

    இதில் குயின்வென் ஜெங் 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    ஏற்கனவே இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×