என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜப்பான் ஓபன்"

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்றது.
    • சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் இறுதிப்போட்டியில் வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்றது.

    மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் இறுதிச்சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய பென்சிக் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்கிக் அரையிறுதியில் வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் அரையிறுதி சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக், அமெரிக்காவின் சோபியா கெனின் உடன் மோதினார்.

    இதில் 7-6 என பென்கிக் முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக சோபியா கெனின் 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பென்கிக் 6-2 என வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெலிண்டா பென்கிக், செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவை சந்திக்கிறார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • கஜகஜஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா அரையிறுதியில் இருந்து விலகினார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் அரையிறுதி சுற்றில் கஜகஸ்தான் எலினா ரிபாகினா, செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா உடன் மோத இருந்தார்.

    ஆனால் காயம் காரணமாக அவதிப்பட்டதால் போட்டியில் இருந்து விலகுவதாக ரிபாகினா அறிவித்தார். இதன்மூலம் செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • கஜகஜஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா காலிறுதியில் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் காலிறுதி சுற்றில் கஜகஸ்தான் எலினா ரிபாகினா, கனடாவின் விக்டோரியா போகோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதியில் ரிபாகினா, செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவை சந்திக்கிறார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • கஜகஜஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா காலிறுதிக்கு முன்னேறினார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் 3வது சுற்றில் கஜகஸ்தான் எலினா ரிபாகினா,கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ரிபாகினா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • செக் நாட்டு வீராங்கனை கரோலினா முசோவா காலிறுதிக்கு முன்னேறினார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் 3வது சுற்றில் செக் நாட்டின் கரோலினா முசோவா, ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயிண்ட் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய கரோலினா முசோவா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • 2வது சுற்றில் கனடா வீராங்கனை வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் 2வது சுற்றில் கனடா நாட்டின் லெய்லா பெர்னாண்டஸ், கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியுடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய லெய்லா பெர்னாண்டஸ் 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • ஜப்பானின் நவோமி ஒசாகா காயம் காரணமாக காலிறுதியில் விலகினார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ரொமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டின் உடன் மோத இருந்தார்.

    ஆனால் இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் ரொமேனியா வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • ஜப்பானின் நவோமி ஒசாகா 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, நெதர்லாந்தின் சூசன் லாமென்ஸ் உடன் மோதினார்.

    காலில் காயத்தால் அவதிப்பட்ட போதும் சிறப்பாக ஆடிய ஒசாகா 7-6 (8-6), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • ஜப்பானின் நவோமி ஒசாகா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஜப்பானின் நவோமி ஒசாகா, சக நாட்டு வீராங்கனையான சோனோபே வாக்னா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஒசாகா 6-0, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • இதில் ரோகன் போபண்ணா ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஜப்பானின் டகேரு யுசுகே ஜோடி, மொனாக்கோவின் ஹியூகோ நைஸ்-பிரான்சின் ரோஜர் வாஸ்லின் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய ஹியூகோ நைஸ்-ரோஜர் வாஸ்லின் ஜோடி 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது. போபண்ணா ஜோடி தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது.

    ×