என் மலர்
டென்னிஸ்

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மெத்வதேவ்
- பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்செல்சன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமா 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான அலெக்சாண்டர் கோவாசெவிக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மெத்வதேவ், பிரண்டன் நகஷிமாவை சந்திக்கிறார்.
Next Story






