search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பம்"

    • 85 வயது கடந்த முதியவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
    • பணிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் 85 வயது முதல் 99 வயது வரையிலான முதியவர்கள் 23 ஆயிரத்து 100 பேரும், 100 வயதை கடந்தவர்கள் 795 பேரும் உள்ளனர்.

    இதில் 85 வயது கடந்த முதியவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    அதனடிப்படையில் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் வீடுகளிலேயே இருந்தவாறு வாக்களிக்கும் வகையிலான 12டி விண்ணப்பம் வாக்குச்சாவடி அலுவலர்களால் முதியவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மேலப் பாளையம் சிவராஜபுரம் பகுதியில் வசிக்கும் 90 வயது மூதாட்டியான வள்ளியம்மாளிடம் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அனந்த ராமகிருஷ்ணன், வீட்டில் இருந்து வாக்களிக்கும் வகையிலான விண்ணப்பத்தை வழங்கி உள்ளார்.

    அப்போது ஓட்டு கேட்டு வேட்பாளர்கள் தான் யாரோ வந்திருக்கிறார்கள் என்று நினைத்த மூதாட்டி வள்ளியம்மாள், அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு என் ஓட்டு உனக்குதான் பா, உனக்குத்தான் என் ஓட்டு என்று கூறியுள்ளார். உடனே கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலகலவென சிரித்து விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக, அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற உரிமையில்லை என மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மனு பொதுப்படையாக உள்ளது. முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது.

    • ஹஜ் புனித பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதாக கருதப்படுகிறது.
    • வருகிற மே மாதம் 26-ந்தேதி முதல் ஜூன் மாதம் 9-ந் தேதி வரை ஹஜ் பயண முகாம் நடக்க உள்ளது.

    திருவனந்தபுரம்:

    ஹஜ் பயணம் என்பது முஸ்லிம்கள் ஆண்டுதோறும் சவூதிஅரேபியா நாட்டில் உள்ள மெக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனித பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

    ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது இறைவனை வணங்குவதற்கான ஒரு தனி முறையாகும். உடல் நலமும், பணவசதியும் உள்ள இஸ்லாமியர் ஒவ்வொரு வரும் தனது ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ் புனித செய்ய வேண்டும்.

    ஹஜ் புனித பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் அர்ப்பணிப்பதாக கருதப்படுகிறது. இதனால் முஸ்லிம்கள் அனைவருமே ஹஜ் பயணம் செய்ய வேண்டும் என்றே விரும்புவார்கள். ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு நமது நாட்டில் அரசே மானியமும் வணங்குகிறது. அதனை பயன்படுத்தி ஆண்டுதோறும் பலர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர்.

    கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு 11,556பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டு அதைவிட அதிகமானவர்கள் ஹஜ் புனித பயணத்திற்கு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 18,337 பேரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. அவர்களில் 1,250 பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். 3,584 பேர் பெண்கள்.

    ஹஜ் பயணம் செய்வதற்கு கேரளாவிலிருந்து முதல் விமானம் வருகிற மே மாதம் 26-ந்தேதி புறப்படுகிறது. ஆனால் முதல் ஹஜ் விமானம் புறப்படும் இடம் மற்றும் நேரம் இன்னும் திட்டமிடப்படவில்லை. விமானங்களின் அட்டவணை வெளியிட்ட பின்னரே அனைத்து விவரங்களும் வெளியாகும் என கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஹஜ் பயண முகாம் கேரளாவில் 20 முதல் 22 நாட்கள் வரை நடந்தது. ஆனால் இந்த ஆண்டு 15 நாட்கள் மட்டுமே நடக்க உள்ளது. அதாவது வருகிற மே மாதம் 26-ந்தேதி முதல் ஜூன் மாதம் 9-ந் தேதி வரை ஹஜ் பயண முகாம் நடக்க உள்ளது. இந்த நாட்களில் கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் இருந்து ஹஜ் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

    கரிப்பூர், கண்ணூர் மற்றும் கொச்சி விமான நிலையங்கள் ஹஜ் யாத்ரீகர்களுக்கான போர்டிங் மையங்களாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து அதிகமாக விமானங்கள் இயக்கப்படும் என தெரிகிறது.

    பெரிய விமானங்களுக்கு அனுமதி இல்லாததால் ஏர் எக்ஸ்பிரஸ் விமானங்கள் 145 பயணிகளுடன் செல்லும் என தெரிகிறது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து மெக்காவிற்கு விமானத்தில் பறக்க உள்ளனர்.

    ஆரம்ப கட்டத்தில் ஹஜ் பயணத்திற்கு அனுமதி பெற்ற 16,776 பயணிகளின் 9,750 பேர் கரிப்பூர் விமான நிலையத்தை புறப்படும் இடமாக தேர்வு செய்துள்ளனர். மேலும் 1,500 பேர் இங்கிருந்து பறக்க வாய்ப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது.

    இதனால் கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து ஹஜ்ஜிற்கு 70-க்கும் மேற்பட்ட விமானங்கள் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வரலாறு காணாத வகையில் 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டவை 114 ஆகும்.
    • இனி வரும் காலங்களில் அனைத்தும் இணையவழி மூலம் செயல்படும்.

    சென்னை:

    சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவரும் மற்றும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இணையவழியில் திட்ட அனுமதி வழங்கப்படுவதால் விண்ணப்பங்கள் விரைவாக முடிக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு, வரலாறு காணாத வகையில் 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டவை 114 ஆகும்.

    இது திட்ட அனுமதி வழங்கப்பட்ட விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். திட்ட அனுமதி விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழி மூலமே பெறப்பட்டு கூர்ந்தாய்வு செய்து ஒப்புதல் வழங்கும் முறை செயல்பாட்டிற்கு வந்தபின், விண்ணப்பங்களின் எண்ணிக்கை 27 சதவீதமாக உயர்ந்துள்ளது மற்றும் இணையவழி ஒப்புதல் வழங்கியது 22 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் உயரமான கட்டடங்களுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதி பொறுத்தவரையில் சராசரியாக ஒரு வருடத்திற்கு 65 விண்ணப்பங்கள் பெறப்படும். இணையவழி திட்ட அனுமதி மென்பொருள் செயல்பாட்டிற்கு வந்த பிறகு, 135 விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக முன்பு எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் 100-க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும ஆன்லைன் போர்ட்டல் விண்ணப்பதாரர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இனி வரும் காலங்களில் அனைத்தும் இணையவழி மூலம் செயல்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெலுங்கானாவில் 17 எம்.பி. தொகுதிகள் உள்ளன.
    • காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.பி. சீட் கேட்டு வருகின்றனர்.

    தெலுங்கானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது.

    இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி அல்லது பிரியங்கா காந்தி ஆகியோர் மேடக் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியினர் விரும்புகின்றனர்.

    மேலும் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் தேர்தலில் சீட் பெற போட்டி போட்டு வருகின்றனர். தெலுங்கானாவில் 17 எம்.பி. தொகுதிகள் உள்ளன.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட 309 பேர் விருப்பம் தெரிவித்து மனு அளித்து உள்ளனர்.

    ஒரு சில கட்சி நிர்வாகிகள் தங்களுடைய பலத்தை காண்பிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி ஊர்வலமாக சென்று விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

    இதேபோல் சந்திரசேகர ராவ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.பி. சீட் கேட்டு வருகின்றனர்.

    இதனால் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சி மேல் இடத்திற்கு அனுப்பி வைத்து அதில் வெற்றி வாய்ப்பு உள்ள ஒருவரை தேர்ந்தெடுத்து சீட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    தெலுங்கானா மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் கடும் போட்டி நிலவி வருவதால் பரபரப்பாக உள்ளது.

    • விமான பயணசீட்டு போன்றவை ஓமன் நாட்டில் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.
    • விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

    சென்னை:

    அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சி.என். மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓமன் நாட்டில்கேஸ்டிங் இன்ஸ்பெக்சன், மெஷின் ஆபரேட்டர் பணிக்கு 2 வருடம் பணி அனுபவமுள்ள 22 முதல் 26 வயதிற்குட்பட்ட 60 கிலோ உடல் உடை மேல் உள்வர்கள் மற்றும் 165 செமீக்கு மேல் உயரமுள்ள டிப்ளமோ எலக்டிரிகல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி எலக்ட்ரீசியன் படித்த ஆண் பணியாளர்கள், தேவைப்படுகிறார்கள். மாத ஊதியமாக ரூ.35,000 முதல் 39,000 மற்றும் விசா, உணவு, இருப்பிடம் விமான பயணசீட்டு போன்றவை ஓமன் நாட்டில் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.

    விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுபவிவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலினை 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களை www.omcmanpower.tn.gov.in வலைதளம், தொலைபேசி எண்கள் (044-22505886/22502267 மற்றும் வாட்ஸ்ஆப் எண்.(9566239685) வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இணைய வழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வருகிற 3-ந்தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023-24-ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணைய வழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வருகிற 3-ந்தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளதால் இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி வருகிற 7-ந்தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் வருகிற 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் 1.24 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது
    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7,158 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் சர்க்கரை ஆலை நேரு தொடக்கப்பள்ளி மற்றும் மங்களமேடு டி.இ.எல்.சி பள்ளிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கற்பகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்த தாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும், குறிப்பாக 1.1.2024-இல் 18 வயது பூர்த்தியடையும் இளம் வாக்காளர்கள் விடுமுறை நாள்களில் நடைபெறும் இம் முகாம்களை பயன் படுத்திக்கொள்ளலாம்.மாவட்டம் முழுவதும் கடந்த 25-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற்ற முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,554 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 89 விண்ணப்பங்களும், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய 863 விண்ணப்பங்களும் வழங்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில், இதுவரை நடைபெற்ற முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7,158 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 588 விண்ணப்பங்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய 5,247 விண்ணப்பங்களும் என மொத்தம் 1,23,993 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைத்திட மானி யத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
    • இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைத்திட மானி யத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் ரூ.2 லட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும் மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

    18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிரா விடர்கள் மற்றும் பழங்கு டியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுப் பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு வருகிற 1-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை மதுரை மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, கூட்டுறவு அச்சகம் மற்றும் கூட்டுறவு ஒன்றியம் ஆகிய சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக மதுரை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந்தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இத்தேர்வுக்கு தகு பெற்ற விண்ணப்பதாரர்க ளிடம் இருந்து விண்ணப்பங்கள் drbmadurai.net இணையதளம் வழியாக வருகிற 1-ந்தேதி மாலை 5.45 மணி வரை சமர்பிக்கலாம்.

    இதற்கான எழுத்துத் தேர்வு டிச.24-ந்தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மதுரை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும்.

    வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீ கரிக்கப் பட்ட ஏதேனும் ஒரு பல் கலைக்கழகத்தால் வழங்கப் படும் கூட்டுறவில் முது நிலை பட்டப்படிப்பு படித்த வர்களும் இதற்கு விண்ணப் பிக்கலாம்.

    மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்ப வர்களும், தமிழ்நாடு கூட்டு றவு ஒன்றியத்தால் நடத்தப் படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24ம் ஆண்டு நேரடி பயிற்சி, அஞ்சல்வழி, பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்டணம் செலுத்திய தற்கான ரசீதினை மதுரை மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    முற்பட்ட வகுப்பின ருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. எழுத்துத்தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நி மற்றும் வங்கியியல், கூட்டு றவு கணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கி யதாகவும் இருக்கும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் 200 வினாக்களுடன், 170 மதிப்பெண்க ளுக்கானதாகவும் தேர்வுக்கான காலஅளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும் இருக்கும்.

    வினாத்தாள் ஆங்கிலம், தமிழில் அச்சடிக்கப்பட்டி ருக்கும். எழுத்து தேர்வுக் கான மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுக்கான மதிப் பெண் முறையே 85:15 என்ற விகிதத்தில் இருக்கும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்விலும் நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப் பெண் அடிப்படையில் அரசாணைப்படியான இட ஒதுக்கீடு, இன சுழற்சி முறை, தெரிவித்த முன்னுரிமை விருப்ப சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உரிய சங்கத்திற்கு ஒது க்கீடு செ ய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விண்ணப்ப கட்டணமாக ரூ.100/-இணையவழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
    • தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான காஞ்சிபுரத்தில் செயல்படும் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024 ஆம் ஆண்டு 23 வது கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர புதிய பாடத்தின்படி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே 30:11.2023 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100/-இணையவழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி தொடர்பான விவரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரிலோ அல்லது 044-27237699 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.,) அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத், கன்னடம், மலையாளம், மராத்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடக்கவுள்ளது.

    திருப்பூர்:

    உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.,) அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்தாண்டுக்கான நுழைவுத்தேர்வு வருகிற 2024 - 25 கல்வியாண்டுக்கு, ஜே.இ.இ., முதன்மை மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ் என இரண்டு தேர்வுகளாக நடைபெற உள்ளது. ஜனவரி 24 -ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை, ஜே.இ.இ., முதன்மை தேர்வு நடக்கிறது.

    முதன்மை தேர்வு முடிவுகள் பிப்ரவரி 12-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத், கன்னடம், மலையாளம், மராத்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடக்கவுள்ளது.

    இதற்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வெழுத தகுதியான மாணவர்கள் https://jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் வருகிற 30-ந்தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்கள், சந்தேகங்கள் இருப்பின் அதனை 011 - 40759000 அல்லது 011 - 69227700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

    ×