search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்றி காய்ச்சல்"

    • தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
    • சீதோசன நிலை மாறி இருப்பதால் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். உடனே அவர் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அசோக்கெலாட்டுக்கு கொரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

    அவரது உடல்நிலை சீராக தற்போது சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாவும் மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக அசோக் கெலாட் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டாக்டர்கள் மருத்துவ பரிசோதனையில் எனக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்ததால் அடுத்த 7 நாட்கள் யாரையும் சந்திக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். சீதோசன நிலை மாறி இருப்பதால் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

    • 2020-ல் கொரோனா வைரஸ் பரவும்போது ஆல்பா வைரசாக பரவியது.
    • கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வகை வைரஸ் வெளிநாட்டில் உருவானது.

    சென்னை:

    கொரோனா தொற்றுக்கு பிறகு உருமாறி உருமாறி பல வைரஸ்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் ஒமைக்ரானில் இருந்து உருமாறிய ஜே.என்-1 என்ற வைரஸ் பரவி வருவது பற்றி உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை உஷார்படுத்தி உள்ளது.

    இந்த வைரஸ் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-

    ஒரு காலத்தில் இன்புளுயன்சா பரவியது. அதன் பிறகு அது மறைந்து விட்டதா? இல்லை. சீசன் காய்ச்சலாக குளிர்காலத்தில் பரவுகிறது. அப்படியே கட்டுப்பட்டும் விடுகிறது.

    அது மட்டுமல்ல இன்புளுயன்சாவில் இருந்து ஏ மற்றும் பி என்ற இரு உருமாறிய வைரஸ்களும் வந்தன.

    இதன் மூலம் சாதாரண வைரஸ் காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவையும் வருகின்றன. ஆனால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

    அதே போல்தான் கொரோனா வைரசும். அது முற்றிலுமாக ஒழிந்து விடாது. இருந்துகொண்டேதான் இருக்கும்.

    2020-ல் கொரோனா வைரஸ் பரவும்போது ஆல்பா வைரசாக பரவியது. அந்த ஆண்டு இறுதியில் 'டெல்டா' வகை வைரசாக உருமாறி பரவியபோதுதான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. நேரடியாக நுரையீரலை தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

    அப்போது நம்மிடம் தடுப்பு மருந்துகளும் இல்லை. அதன் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் செலுத்தப்பட்டது. பெரும்பாலும் எல்லோரும் 3 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார்கள்.

    இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவானது. அதேபோல் கொரோனா தாக்கியதாலும் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. இதனால் படிப்படியாக பாதிப்பு குறைந்தது.

    கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வகை வைரஸ் வெளிநாட்டில் உருவானது. நம் நாட்டில் நைஜீரியாவில் இருந்து வந்தவரிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு எக்ஸ்.பி.பி. என்ற வகை உருமாறி வந்தது. அதுவும் மறைந்து இப்போது உருமாறிய ஜே.என்-1 என்ற வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இது 26 பேரிடம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் யாருக்கும் பரவவில்லை. பரிசோதனையை அதிகரிக்க அதிகரிக்க கூடுதலாக கண்டுபிடிக்க முடியும்.

    இதில் நாம் பார்க்க வேண்டியது பாதிக்கப்பட்டவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான். யாரும் படுத்த படுக்கையாகவில்லை. எனவே இதன் தாக்கம் ஆபத்தை ஏற்படுத்தாது.

    மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது புதுவகை வைரஸ் இல்லை. மிக தீவிரமாகி நுரையீரலை பாதிப்பது இல்லை. மேலும் ஏற்கனவே தடுப்பூசி எடுத்து கொண்டிருப்பதால் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியால் வைரசின் வீரியம் குறைக்கப்படும். எனவே கொரோனாவை நினைத்து பீதி அடைய வேண்டியது இல்லை.

    • சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தி வருகின்றனர்
    • திருப்பத்தூர் கலெக்டர் தகவல்

    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் யாருக்கும் பன்றி காய்ச்சல் இல்லை என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பன்றி காய்ச்சல்

    வாணியம்பாடியில் ஒருவர் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப் பட்டு இறந்ததை தொடர்ந்து வாணியம்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகு திகளில் உள்ள பொதுமக்க ளுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் பன்றிக்காய்ச்சல் இல்லை.

    இந்த பரிசோதனை வாலாஜாவில் உள்ள பொது சுகாதாரத்துறை பரிசோ தனை கூடத்தில் செய்யப்பட் டது. வாணியம்பாடியில் உயிர் இழந்த நபர் கடந்த சில வாரங்களாக கல்லீரல் சுருக் கம் நோய் உள்ளிட்ட பல் வேறு நோய்களுக்கு சென் னையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    மேலும் அவர் பல்வேறு கோவில்கள், நகரங் களுக்கு சென்றது தெரியவந் தது. ஆகவே அவருக்கு பய ணத்தினால் வெளியூர்களில் வைத்து தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்புகள் அதிகம். பன்றிக்காய்ச்சல் குறித்து வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்த பொதுமக் கள் அச்சப்பட தேவை யில்லை. அங்கு சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தி வருகின்றனர்.

    நியூடவுன் பகுதி முழுவதும் பிளிச்சிங் பவுடர், கிருமிநா சினி தெளிக்க நகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பன்றிக்காய்ச்சலுக்கு வழங் கப்படும் மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு உள்ளது. தேவைப்படுபவர்க ளுக்கு மாத்திரை வினியோ கம் செய்யப்படும்.

    பொதுமக்களும் வெளியே வரும்போது முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடு வதை தவிர்த்தல் உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    • வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் ரவிக்குமார் மளிகை கடை நடத்தி வந்தார்.
    • வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள கடைகளை 5 நாட்களுக்கு மூட நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் ரவிக்குமார் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்தார். அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பன்றி காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள கடைகளை 5 நாட்களுக்கு மூட நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். அப்பகுதி முழுவதும் தூய்மை பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • கேரளாவில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்ததால் தமிழக எல்லைகளில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், அங்கு டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவ தொடங்கியது. பல்வேறு வித காய்ச்சல் பாதிப்புக்குள்ளான ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கேரளாவில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்ததால் தமிழக எல்லைகளில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கிருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

    இந்நிலையில் கேரளாவில் பன்றி காய்ச்சலுக்கு பெண் ஒருவர் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள தாளப்புழா பகுதியைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மானந்தவாடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    பின்பு மேல் சிகிச்சைக்காக மேப்பாடி விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை நடத்தியதில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிர் இழந்தார்.

    கேரளாவில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவி வரும் நிலையில், தற்போது பன்றி காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மலையோர மாவட்டங்களில் பறவை காய்ச்சலும், பன்றி காய்ச்சலும் பரவி வருவது சுகாதாரத்துறையினர் நடத்திய சோதனையில் தெரிய வந்தது.
    • மலப்புரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பலியானான்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின்பு பொதுமக்கள் பலருக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர். இது தவிர ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதற்கிடையே மலையோர மாவட்டங்களில் பறவை காய்ச்சலும், பன்றி காய்ச்சலும் பரவி வருவது சுகாதாரத்துறையினர் நடத்திய சோதனையில் தெரிய வந்தது. அந்த பகுதியில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மலப்புரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பலியானான். அவனது ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது அந்த சிறுவனுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கும் மருத்துவ குழுவினர் விரைந்து சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கேரளாவில் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் அடுத்த 5 நாட்களுக்கு அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை என்று விருதுநகர் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
    • ஒரு பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் ஆகும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டம் உதக மண்டலத்தில் உள்ள தேசிய வன காப்பகத்தில் கடந்த வாரம் 19 காட்டுப்பன்றிகள் இறப்பு ஏற்பட்டு அதன் உடல்களை பரிசோனை செய்து ஆய்வுக்கு அனுப்பி யதில் அவை அனைத்தும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் மூலம் இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்ட வனத்துறையினரிடம் இது தொடர்பாக தொடர்பு கொள்ளப்பட்டு வனக்காப்பக எல்கைப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் பயிர்களை சாப்பிட வரும் காட்டு பன்றிகளை கண்கா ணிக்கவும், ஏதேனும் இறப்பு நேர்ந்தால் தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை எவ்வித காட்டுப் பன்றிகளும் நோய் தாக்கப்பட்டு இறந்ததாக தகவல் இல்லை. அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கேரள மாநில எல்லையில் ஏதேனும் நோய் தாக்கம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டதில் விருதுநகர் மாவட்டத்தில் எவ்வித தாக்கமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

    மேலும் விருதுநகர் மாவட்டத்தின் வழியாக பன்றிகள் வாகனங்களில் ஏற்றிச் செல்லும்பொழுது அதுகுறித்து தீவிர விசாரணை செய்யவும், நடவடிக்கை மேற்கொ ள்ளவும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோயானது பன்றிகளில் இருந்து பன்றி களுக்கும், நோய் தாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், தீவன சாக்குப்பைகள் மூலம் பிற பன்றிகளுக்கும் மட்டுமே பரவக்கூடியதாகும். இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோயாதலால் தகுந்த உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளான சுத்தமாக பண்ணையை பராமரித்தல், ரசாயன கலவை கொண்ட நடை பாதை அமைத்தல், நீர் மற்றும் கழிவுகள் தேங்காமல் பராமரித்தல், ஓட்டல் மற்றும் விடுதிகளில் இருந்து பெறப்படும் கழிவுகளை பன்றிக்கு தீவனமாக வழங்காமல் இருப்பது மற்றும் அந்நி யர்கள் பண்ணையில் நுழைவது தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.

    இந்த நோயானது பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கோ, மாடு, ஆடு போன்ற வளர்ப்பு கால்நடைகளுக்கோ பரவாது. ஒரு பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் ஆகும்.

    எனவே விவசாயிகள் பண்ணையாளர்கள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து எவ்வித பீதியும் அடையத் தேவையில்லை. சுகாதாரமான முறையில் கிடைக்கப்பெறும் பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்து சாப்பிடுவது அவசியம். கால்நடை பராமரிப்புத்துறையினர் பன்றி ப்பண்ணை யாளர்களுக்கு தொடர்ந்து தகுந்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கு வதோடு பண்ணைகளை ஆய்வு செய்தும் வருகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் ஆப்ரிக்கன் புளூ எனப்படும் பன்றி காய்ச்சல் பரவியது தெரியவந்தது.
    • நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்ட பன்றிகளை உடனடியாக அழிக்க முடிவு செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து கேரள சுகாதாரத்துறை மற்றும் கால்நடை துறையினர் இணைந்து அந்த பகுதியில் சோதனை நடத்தினர். இதில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிகள் மற்றும் வாத்துக்கள் அழிக்கப்பட்டன.

    மேலும் அங்கு உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து பண்ணைகள் உள்ள பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் ஆப்ரிக்கன் புளூ எனப்படும் பன்றி காய்ச்சல் பரவியது தெரியவந்தது.

    இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த பகுதியில் உள்ள பண்ணைகளில் ஆய்வு செய்தனர். இதில் ஒரு பண்ணையில் இருந்த 70 பன்றிகள் நோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

    இதுபற்றி தெரியவந்ததும் மாவட்ட நிர்வாகம் அவசர ஆலோசனை நடத்தியது. பின்னர் நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்ட பன்றிகளை உடனடியாக அழிக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த பண்ணைகளில் தற்போது 532 பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை இன்று அழிக்கும் பணி தொடங்கியது. இதனை சுகாதாரத்துறையினரும், கால்நடை துறையினரும் இணைந்து மேற்கொண்டனர். மேலும் இந்த பகுதிகளில் அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • கிளாரா மேரிக்கு கடந்த 4-ந்தேதி சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
    • கிளாரா மேரியை பரிசோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் கோரிமேடு ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கப்ரியல் (வயது 55). அரசு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி கிளாரா மேரி (51).

    இவருக்கு கடந்த 4-ந்தேதி சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் கிளாரா மேரிக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த கிளாரா மேரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் உயரிழந்த கிளாரா மேரி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியில் சென்று வந்ததால் அங்கிருந்து அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.

    • பன்றி பண்ணைகளை தீவிரமாக கண்காணிக்க கால்நடை உதவி டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
    • பன்றிகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் பண்ணைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த சூழலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்கோத்தகிரி, குன்னூர், உதகை, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள காட்டுப்பன்றிகள் கடந்த ஒரு வார காலமாக அடுத்தடுத்து உயிரிழந்தன.

    இதையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தாக்கி உள்ளது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக- கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒன்பதாறு சோதனைச் சாவடியில் வெளிமாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்து வளர்ப்புக்காகவோ இறைச்சிக்காகவோ பன்றிகள் கொண்டு வரவும் இங்கிருந்து கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பன்றி பண்ணைகளை தீவிரமாக கண்காணிக்க கால்நடை உதவி டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. பன்றிகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் பண்ணைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். வெளி நபர்களை பண்ணைக்குள் அனுமதிக்க கூடாது. உணவக கழிவுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • கொடைக்கானல் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவு விலங்குகள் உள்ளன.
    • கர்நாடகா, கேரள மாநிலங்களிலும் இவ்வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவு விலங்குகள் உள்ளன. குறிப்பாக யானை, காட்டு பன்றி, மான் போன்றவை மக்கள் வசிப்பிடத்துக்கு அருகே அடிக்கடி வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

    அதிலும் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களை சேதப்படுத்தி செல்வதும், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களை மிரட்டி வருவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பல்வேறு இடங்களில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் ஏராளமான காட்டு பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இவ்வாறு உயிரிழந்த பன்றிகளை வனத்துறையினர் தீ வைத்து எரித்து வருகின்றனர். மேலும் மற்ற விலங்குகளுக்கும் இந்த நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக எல்லைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வெளி மாவட்டங்களில் இருந்து பன்றிகளை வாகனங்களில் கொண்டு வர தடை விதித்துள்ளனர். இந்த நோய் மனிதர்களுக்கு பரவாது என்று கால்நடைத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தபோதிலும் பொதுமக்கள் அச்சத்துடனே உள்ளனர்.

    இந்நிலையில் கர்நாடகா, கேரள மாநிலங்களிலும் இவ்வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே கொடைக்கானலில் உள்ள காட்டுப்பன்றிகளுக்கு நோய் பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கொடைக்கானலில் காட்டுப்பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் வகை காய்ச்சல் இல்லை. அவ்வாறு இருந்தால் வனப்பகுதியில் பன்றிகள் உயிரிழந்த நிலையில் இருக்கும். அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது வரை திண்டுக்கல் மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் இல்லை. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றனர்.

    • 2 மாதங்களாக நுரையீரல் பாதிப்பால் அவதியடைந்த சரோஜா கடந்த 19-ந் தேதி சிகிச்சைக்காக கோவை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில் சரோஜாவிற்கு பன்றி காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் வெங்கடேச புரியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவருடைய மனைவி சரோஜா (வயது 53). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக நுரையீரல் பாதிப்பால் அவதியடைந்த சரோஜா கடந்த 19-ந் தேதி சிகிச்சைக்காக கோவை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில் சரோஜாவிற்கு பன்றி காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சரோஜா நேற்று பரிதாபமாக இறந்தார். பன்றி காய்ச்சலுக்கு பெண் பலியான தகவல் மல்லசமுத்திரம் பகுதியில் வேகமாக பரவியது.

    இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வெங்கடேசபுரி, ஏரிக்காடு பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் மருந்து தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் அச்சம் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் மல்லசமுத்திரம் பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×