search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை
    X

    ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை

    • ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை என்று விருதுநகர் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
    • ஒரு பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் ஆகும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டம் உதக மண்டலத்தில் உள்ள தேசிய வன காப்பகத்தில் கடந்த வாரம் 19 காட்டுப்பன்றிகள் இறப்பு ஏற்பட்டு அதன் உடல்களை பரிசோனை செய்து ஆய்வுக்கு அனுப்பி யதில் அவை அனைத்தும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் மூலம் இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்ட வனத்துறையினரிடம் இது தொடர்பாக தொடர்பு கொள்ளப்பட்டு வனக்காப்பக எல்கைப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் பயிர்களை சாப்பிட வரும் காட்டு பன்றிகளை கண்கா ணிக்கவும், ஏதேனும் இறப்பு நேர்ந்தால் தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை எவ்வித காட்டுப் பன்றிகளும் நோய் தாக்கப்பட்டு இறந்ததாக தகவல் இல்லை. அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கேரள மாநில எல்லையில் ஏதேனும் நோய் தாக்கம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டதில் விருதுநகர் மாவட்டத்தில் எவ்வித தாக்கமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

    மேலும் விருதுநகர் மாவட்டத்தின் வழியாக பன்றிகள் வாகனங்களில் ஏற்றிச் செல்லும்பொழுது அதுகுறித்து தீவிர விசாரணை செய்யவும், நடவடிக்கை மேற்கொ ள்ளவும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோயானது பன்றிகளில் இருந்து பன்றி களுக்கும், நோய் தாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், தீவன சாக்குப்பைகள் மூலம் பிற பன்றிகளுக்கும் மட்டுமே பரவக்கூடியதாகும். இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோயாதலால் தகுந்த உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளான சுத்தமாக பண்ணையை பராமரித்தல், ரசாயன கலவை கொண்ட நடை பாதை அமைத்தல், நீர் மற்றும் கழிவுகள் தேங்காமல் பராமரித்தல், ஓட்டல் மற்றும் விடுதிகளில் இருந்து பெறப்படும் கழிவுகளை பன்றிக்கு தீவனமாக வழங்காமல் இருப்பது மற்றும் அந்நி யர்கள் பண்ணையில் நுழைவது தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.

    இந்த நோயானது பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கோ, மாடு, ஆடு போன்ற வளர்ப்பு கால்நடைகளுக்கோ பரவாது. ஒரு பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் ஆகும்.

    எனவே விவசாயிகள் பண்ணையாளர்கள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து எவ்வித பீதியும் அடையத் தேவையில்லை. சுகாதாரமான முறையில் கிடைக்கப்பெறும் பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்து சாப்பிடுவது அவசியம். கால்நடை பராமரிப்புத்துறையினர் பன்றி ப்பண்ணை யாளர்களுக்கு தொடர்ந்து தகுந்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கு வதோடு பண்ணைகளை ஆய்வு செய்தும் வருகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×