ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொள்ளாத அக்ஷய் குமார் - ஏன் தெரியுமா?

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.ஆனந்த் அம்பானி அக்ஷய் குமாரை நேரில் சந்தித்து திருமண அழைப்பு விடுத்தார்.
ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொள்ளாத அக்ஷய் குமார் - ஏன் தெரியுமா?
Published on

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தற்போது இந்தியில் 'சர்ஃபிரா' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தை தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இயக்கியுள்ளார். இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்த அக்ஷய் குமாருக்கு திடீரென உடல்நல குறைவு செற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். படம் வெளியான அன்று அவரால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை.

மேலும், முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆனந்த் அம்பானி அக்ஷய் குமாரை நேரில் சந்தித்து திருமண அழைப்பு விடுத்தார். ஆனால், தற்போது கரோனா பாதிப்பு காரணமாக அக்ஷய் குமாரால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com