search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rejection"

    • கள்ளக்காதலன் குடும்பத்தினரும் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டனர்
    • ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கோவை,

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் 26 வயது இளம் பெண். இவருக்கு திருமண மாகி 9 ஆண்டுகள் ஆகிறது. கணவர் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    இந்தநிலையில் இளம் பெண் கடந்த 9 மாதங்களாக கோவை அய்யம்பாளையத்தில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அதே மில்லில் வேலை பார்த்து வரும் ஆனைமலை அருகே உள்ள தாத்தூரை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவரு டன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் வாலிபருடன் நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்ட இளம்பெண் கணவர் மற்றும் மகனை தவிக்க விட்டு தனது கள்ளக்கா தலனை தேடி தாத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். ஆனால் வாலிபரின் பெற்றோர் இளம் பெண்ணை ஏற்க மறுத்து விட்டனர்.

    இதனையடுத்து இளம்பெண் தனது காதலனுடன் சேர்த்து வைக்குமாறு ஆனைமலை போலீசில் தஞ்சம் அடைந்தார். போலீ சார் இளம்பெண்ணின் கணவரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர் தனது மனைவி தனக்கு வேண்டாம் என கூறி விட்டு சென்று விட்டார். வாலிபரின் பெற்றோரும் கணவரை பிரிந்து மகனை தேடி வந்த இளம்பெண்ணை ஏற்க மறுத்து விட்டனர். இதுகுறித்து ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி மக்களால் நிராகரிக்கப்பட்டவை.
    • மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் தொகுதிக்குட்பட்ட மேல உப்பிலிக்குண்டு, கூடக்கோவில், டி.கொக் குளம், தும்பக்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    நூறுநாள் வேலை திட்டம் கிராம மக்களுக்கு முக்கியமான திட்டமாகும். மத்திய அரசு ஆண்டுதோறும் இந்த திட்டத்திற்கு நிதியை குறைத்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப் படுவார்கள். கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அ.தி.முக.-பா.ஜ.க. கூட்டணி கட்டாயத்திற்கான கூட்டணி ஆகும். இந்த கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டது. தரம் தாழ்ந்த அரசியலை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்து வருகிறார். ராகுல் காந்தி பதவி நீக்கம் தொடர்பான வழக்கில் நிச்சயம் நீதி வெல்லும், நியாயம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், மகளுக்கு கல்வி கடன் வழங்க வங்கி மறுத்தது சரிதான் என சென்னை ஐகோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தது.
    சென்னை:

    நாகை மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் மாணவி ஏ.தீபிகா. இவர், வேதாரண்யம் பாரத ஸ்டேட் வங்கியில், கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கி நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.ஆர்.சுமதி, ‘தீபிகாவின் தந்தை வாங்கிய கடனுக்கு தவணையை முறையாக செலுத்தவில்லை. வழக்குதாரர் கல்லூரி நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் நர்சிங் படிப்பில் சேர்ந்துள்ளார். இந்த நர்சிங் படிப்பு, கல்விக்கடன் வாங்கும் திட்டத்தில் இடம் பெறவில்லை. அதனால் அவருக்கு கல்விக் கடன் வழங்க முடியாது’ என்று வாதிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவி தரப்பில் ஆஜரான வக்கீல் விஜேந்திரன், ‘வழக்குதாரர் தந்தை தவணை செலுத்தவில்லை என்ற காரணத்துக்கு கல்விக்கடனை வழங்க மறுப்பது சரியானது இல்லை. வாங்கிய கடனுக்கு தவணையை வழக்குதாரர் தான் செலுத்த போகிறாரே தவிர, அவரது தந்தை இல்லை’ என்று வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசியல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில், பல பெரும் புள்ளிகளுக்கு பெரும் தொகையை வங்கிகள் கடன் வழங்குகின்றன. அவ்வாறு கடன் வாங்குபவர்கள், கடனை திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிடுகின்றனர். இதனால், கடன் வழங்க கையெழுத்திட்ட வங்கி ஊழியர்கள் தான் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமல்ல, இவ்வாறு கடன் வழங்குவதால், பொதுமக்களின் பணம் முறைகேடு செய்யப்படுகிறது.

    கடன் தொகை சிறியதோ, பெரியதோ பிரச்சினை இல்லை. கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திரும்ப வசூலிக்க வேண்டும். இதற்காக கடன் கொடுத்து விட்டு அதை வசூலிக்க, கடன் வாங்கியவர்களின் பின்னால் வங்கி அதிகாரிகள் ஓடுவதைவிட, கடன் வழங்காமல் இருப்பதே நல்லது.

    எனவே, வழக்குதாரரின் தந்தை தவணை தொகையை திருப்பிச் செலுத்தாததால், இவருக்கு கடன் வழங்க முடியாது என்று வங்கி நிர்வாகம் சரியாக முடிவு எடுத்துள்ளது. நர்சிங் படிப்பு, கல்விக்கடன் திட்டத்தில் இடம்பெறாததால், வழக்குதாரர் கல்விக்கடன் பெறமுடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

    இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார். 
    ×