search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hamas organization"

    • காசாவில் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • பெற்றோர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போர் காரணமாக காசாவில் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அங்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டது. காசாவில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த போரை தற்காலிமாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. சபை, உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தின. இதற்கு இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு ஒத்துக் கொண்டன.

    இதையடுத்து காசாவில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் காசாவின் வடக்கு பகுதியில் உள்ள காசாசிட்டி, தெற்கு பகுதியில் உள்ள ரபா நகரில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

    இதனால் மத்திய காசா பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.


    முகாம்கள் நடக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்படவில்லை என்றாலும் மற்ற பகுதிகளில் நடத்தப்படும் தொடர் தாக்குதலால் முகாம்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    இதுகுறித்து பாலஸ்தீன சுகாதார அமைச்சர் மஜித் அபு ரமதான் கூறும்போது, போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்ந்து நடத்த, தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

    • இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
    • ஏற்றுமதியை தொடரலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே லட்சக்க ணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காசாவின் ரபா நகரம் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக உள்ளது. ரபா நகருக்குள் இஸ்ரேல் டாங்கிகள் நுழைந்துள்ளன. எகிப்து உடனான ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல் கொண்டு வந்துள்ளது.

    இதற்கிடையே லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள ரபா நகரம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதை இஸ்ரேல் ஏற்கவில்லை. ரபா நகரம் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் தொடங்கும் சூழல் உள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாக தெற்கு காசா நகரமான ரபா மீது முழு அளவிலான தாக்குதலை நடத்தும் முடிவை இஸ்ரேல் எடுத்துள்ளதால் குண்டுகள் அனுப்புவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

    ஆயுத ஏற்றுமதியை இடைநிறுத்துவதற்கான முடிவு கடந்த வாரம் எடுக்கப்பட்டது. ஏற்றுமதியைத் தொடரலாமா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார்.

    • போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
    • ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என நேட்டன் யாகு தெரிவித்தார்.

    காசா:

    காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    மேலும் அவர்கள் நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாகவும் கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போர் 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதில் பாலஸ்தீனம் தரப்பில் இதுவரை சுமார் 34 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மேலும் காசாவுக்குள் செல்லும் எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் முடக்கி உள்ளது. எனவே வெளிநாட்டு நிவாரண பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.

    இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு அங்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கிடையே இந்த போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.

    அதன்படி காசா போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது.

    இதன்மூலம் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர். மேலும் 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காசாவின் ரபா பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு குழந்தை உள்பட 19 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு நிராகரித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், இப்போது படைகளை பின்வாங்கினால் பதுங்கி இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவார்கள். எனவே அவர்களை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என நேட்டன் யாகு தெரிவித்தார்.

    மேலும் ரபா பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார். இதனால் ரபா நகருக்குள் ராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

    அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதால் அங்கு பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது.

    ×