ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாக அறிவிப்பு

கடந்த மாதம் 21-ந்தேதி சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.கத்தாருடன் ரகசியமாக பேசியதாக தகவல்.
ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாக அறிவிப்பு
Published on

ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே கடந்த மாதம் 21-ந்தேதி இஸ்ரேல் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதை உறுதி செய்யும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில் யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாகவும், அவர் கத்தாருடன் ரகசியமாக பேசியதாவும் இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்து இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com