என் மலர்
நீங்கள் தேடியது "மறுப்பு"
- வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.
- 'தனி மனித கண்ணியத்துக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படுவதை அரசு பொறுத்துக்கொண்டிருக்காது'
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள GT ஷாப்பிங் மாலுக்கு கடந்த செய்வாய்க்கிழமை இரவு வேட்டி கட்டி வந்த முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது.
வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.மாலுக்குள் நுழையும் போது வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை,பேன்ட் மாற்றிக்கொண்டு வந்தால் அனுமாகிக்கிறோம் என மால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
முதியவரிடம் ப்ரீ புக்கிங் செய்யப்பட்ட பட டிக்கெட் இருந்தும், வேட்டியை அனுமதிக்கக்கூடாது என்பது தங்களது மாலின் கொள்கைகளில் ஒன்று என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த முதியவர் விவசாயி என பின்னர் தெரியவந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில் GT ஷாப்பிங் மாலுக்கு 7 நாட்களுக்கு மூடி சீல் வைக்க கர்நாடக அரசு நேற்று [ஜூலை 18] உத்தரவிட்டுள்ளது. விவசாயிக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதையை வன்மையாக கண்டிப்பதாகவும் தனி மனித கண்ணியத்துக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கு ஏற்படுவதை அரசு பொறுத்துக்கொண்டிருக்காது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்துக்கு அம்மாநில அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
- பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு.
- அமைச்சர் ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை என கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளேன்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதில் மத்திய அமைச்சராக நடிகரும், திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பியுமான சுரேஷ் கோபியும் பதவியேற்றுக்கொண்டார்.
அப்போது கேரளா மாநிலத்தின் திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
அப்போது அவர் "பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றவே விரும்புகிறேன். அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை. அமைச்சர் ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை என கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் என்னை விடுவிப்பார்கள் என்று நினைக்கிறேன்."
"திருச்சூர் தொகுதி மக்கள் என்னை நன்கு அறிவர். பாராளுமன்ற உறுப்பினராக நான் சிறப்பாக செயல்படுவேன். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். கட்சியே முடிவை எடுக்கட்டும்," என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியதாக வெளியான தகவலுக்கு நடிகர் சுரேஷ் கோபி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர்," அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தவறான செய்திகள் பரவி வருகின்றன. மத்திய இணை அமைச்சராக தொடருவேன்.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றதை பெருமையாக கருதுகிறேன். கேரள மாநிலத்தின் வளர்ச்சி, மேம்பாட்டிற்கு மோடி தலைமையில் பாடுபடுவேன்" என குறிப்பிட்டுள்ளார்.
A few media platforms are spreading the incorrect news that I am going to resign from the Council of Ministers of the Modi Government. This is grossly incorrect. Under the leadership of PM @narendramodi Ji we are committed to the development and prosperity of Kerala ❤️ pic.twitter.com/HTmyCYY50H
— Suressh Gopi (@TheSureshGopi) June 10, 2024
- 100 படகுகளுடன் கடல் தாமரை யாத்திரையை கடலில் நடத்த முடிவு செய்திருந்தனர்.
- நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வெட்டியாக கடற்கரை வெயிலில் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் சென்று வருகிறார்.
200-வது தொகுதியாக துறைமுகம் தொகுதியில் கடந்த 11-ந்தேதி அண்ணாமலை நடை பயணம் செய்வதாக இருந்தது. அதைத் தொடர்ந்து மற்ற தொகுதிகளிலும் நடை பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால் சென்னையில் எந்த பகுதியிலும் நடை பயணம் செல்வதற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. இதனால் அரங்க கூட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
தரைப்பகுதியில் சென்றால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் போலீசார் அனுமதி மறுக்கிறார்கள். தண்ணீரில் சென்றால் யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படாதே என்று நினைத்து பா.ஜனதா மீனவர் அணி சார்பில் இன்று நீலாங்கரையில் இருந்து பாலவாக்கம் வரை கடலில் படகுகளில் கடல் தாமரை யாத்திரை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
இதற்கு எப்படி அனுமதி மறுக்க முடியும் என்ற எண்ணத்தோடு போலீஸ் அனுமதிக்காக அணுகி இருக்கிறார்கள். உடனே போலீஸ் தரப்பில் எத்தனை படகுகள் கலந்து கொள்கிறது என்று கேட்டுள்ளார்கள்.
300 என்றதும், 100 ஆக குறைத்து கொள்ளுங்கள் என்று போலீஸ் தரப்பில் கூறியிருக்கிறார்கள். அதனால் பரவாயில்லை. இனி பிரச்சினை இல்லை என்று கருதி 100 படகுகளுடன் கடல் தாமரை யாத்திரையை கடலில் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் போலீஸ் தரப்பில் இருந்து 8 கேள்விகள் கேட்டு அவர்களை திணற வைத்தனர்.
* எத்தனை படகுகள் யாத்திரையில் கலந்து கொள்கின்றன?
* யாத்திரையில் பங்கெடுக்கும் படகுகள் அனைத்தும் மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்டதா? பதிவு எண் என்ன?
* யாத்திரையில் கலந்து கொள்வதற்கு மீன்வளத் துறை அனுமதித்துள்ளதா?
* கடற்கரையில் கூடுவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி பெறப்பட்டு உள்ளதா?
* கடலில் செல்வதால் கடற்படை, கடலோர காவல் படையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?
* யாத்திரையில் கலந்து கொள்ளும் மீனவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு நீச்சல் தெரியுமா?
* பொதுமக்கள் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள்?
* விபத்தை தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன?
கேள்விகளை பார்த்து மீனவர்கள் மயங்கி விழாத குறைதான். மீனவர்களிடம் நீந்த தெரியுமா? என்று கேட்டால் யாரிடம் போய் சான்றிதழ் வாங்க முடியும். படகுகளின் பதிவு எண்ணை கொடுத்தால் மானியம் ரத்தாகி விடுமோ என்ற பயம். மொத்தத்தில் தரையிலோ? தண்ணீரிலோ? எங்கும் யாத்திரை நடத்த தடைதான் போங்கள் என்று சொல்லாமல் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
இதையடுத்து இன்று நடைபெற இருந்த கடல் தாமரை யாத்திரை ரத்து செய்யப்பட்டது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வெட்டியாக கடற்கரை வெயிலில் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.
- கல்பாடி ஊராட்சி பகுதிகளில் கல்குவாரி அமைக்க அனுமதி கிடையாது
- கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே கல்பாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். துணை தலைவர் கலைமகள் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் காமராஜ் ஊராட்சியின் செயல்பாடு கள் குறித்து அறிக்கை வாசித்தார். பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டார்.
இதில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள, மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும், நிறை வேற்றப்படவேண்டிய திட்டப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அரசின் நலத்திட்டங்கள், அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.கூட்டத்தில் கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதியதாக எந்தவொரு கல் குவாரி மற்றும் புதிய கிரஷர் மற்றும் தார் பிளான்ட் போன்ற வற்றிக்கு அனுமதி அளிக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என க.எறையூர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதனை ஏற்று தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
- கள்ளக்காதலன் குடும்பத்தினரும் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டனர்
- ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
கோவை,
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் 26 வயது இளம் பெண். இவருக்கு திருமண மாகி 9 ஆண்டுகள் ஆகிறது. கணவர் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்தநிலையில் இளம் பெண் கடந்த 9 மாதங்களாக கோவை அய்யம்பாளையத்தில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே மில்லில் வேலை பார்த்து வரும் ஆனைமலை அருகே உள்ள தாத்தூரை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவரு டன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் வாலிபருடன் நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்ட இளம்பெண் கணவர் மற்றும் மகனை தவிக்க விட்டு தனது கள்ளக்கா தலனை தேடி தாத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். ஆனால் வாலிபரின் பெற்றோர் இளம் பெண்ணை ஏற்க மறுத்து விட்டனர்.
இதனையடுத்து இளம்பெண் தனது காதலனுடன் சேர்த்து வைக்குமாறு ஆனைமலை போலீசில் தஞ்சம் அடைந்தார். போலீ சார் இளம்பெண்ணின் கணவரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர் தனது மனைவி தனக்கு வேண்டாம் என கூறி விட்டு சென்று விட்டார். வாலிபரின் பெற்றோரும் கணவரை பிரிந்து மகனை தேடி வந்த இளம்பெண்ணை ஏற்க மறுத்து விட்டனர். இதுகுறித்து ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உழவர் சந்தை அருகே வந்தனர்.
- பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடத்திக் கொள்கிறோம் எனக்கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கடலூர்:
தேச பிரிவினையின் சோக வரலாற்று நினைவு தின பேரணி நடத்த பா.ஜ.க. கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உழவர் சந்தை அருகே வந்தனர். மாநகரத் தலைவர் வேலு வெங்கடேசன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேரணி செல்வதற்கு அனுமதி கிடையாது. மேலும், பேரணியில் தேசிய கொடி ஏந்தி செல்லக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அப்போது பா.ஜ.க. நிர்வாகிகள் நாங்கள் பேரணியாக செல்வதற்கு ஏன் அனுமதி அளிக்க மாட்டீர்கள்? அதற்கு மாறாக பல்வேறு கட்சிக்கு அனுமதி வழங்கி கொண்டிருக்கிறீர்கள்? என கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று பேரணியாக செல்ல வேண்டுமானால் முறைப்படி அனுமதி பெற்று செல்ல வேண்டுமென போலீசார் தெரிவித்தனர். தற்போது பேரணிக்கு அனுமதி வழங்க இயலாது. அதற்கு மாறாக நீங்கள் கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர். அதன்படி பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடத்திக் கொள்கிறோம் எனக்கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பந்தல் அகற்றப்பட்டதால் பரபரப்பு
- நாகர்கோவில் வடசேரி பகுதியில் செயல்பட்டு வரும் கனகமூலம் சந்தை பழமை வாய்ந்த சந்தையாகும்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் வடசேரி பகுதியில் செயல்பட்டு வரும் கனகமூலம் சந்தை பழமை வாய்ந்த சந்தையாகும். இந்த சந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு புதிதாக 250-க்கு மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டது.
தற்போது சந்தையில் உள்ள 125-க்கும் மேற்பட்ட கடைகளில் மட்டுமே வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள். 120-க்கும் மேற்பட்ட கடைகள் காலியாகவே இருந்து வருகிறது. டெபாசிட் உயர்வு மற்றும் வாடகை அதிகமாக உள்ளதால் கடைகள் முழுமையாக செல்ல வில்லை என்று வியாபாரி கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. காலியாக கிடக்கும் கடைகளை மாநகராட்சி சார்பில் ஏலம் இடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் பலமுறை நடவடிக்கை மேற்கொண்டும் ஏலம் செல்லவில்லை. இந்த நிலையில் வடசேரியில் ரூ.55 கோடி செலவில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மூன்று மாடியில் வணிக வளாகமும் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து வடசேரி கனகமூலம் சந்தை பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் வடசேரி கனகமூலம் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். மாநகராட்சி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதால் வியாபாரம் பாதிக்கப்படும். எனவே அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் மாநகராட்சி மேயர் மகேசை சந்தித்து கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு பஸ் நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ததால் தற்போது எதுவும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் வியா பாரிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து வடசேரி அண்ணா சிலையையொட்டியுள்ள சந்தையின் ஓரத்தில் பந்தல் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
பந்தல் போடப்பட்ட நிலையில் போலீசார் உண்ணா விரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பந்தல் அமைக்க கூடாது என்று தெரிவித்தனர். இதையடுத்து போடப்பட்ட பந்தல் அகற்றப்பட்டது. இந்த நிலையில் வியாபாரிகள் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மொத்த சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சந்திரன், குமரி கனகமூலம் சந்தை வியாபாரிகள் சங்கத் தின் தலைவர் கண்ணன், குமரி மாவட்ட வணிகர் சங்கத்தின் தலைவர் நாகராஜன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கி னர்.
ஆர்ப்பாட்டத்தில் காய்கறி வியாபாரிகள் ஏராள மானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சந்தை மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து வியாபாரிகள் அனைவரும் சந்தையில் உள்புறத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வடசேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- டி.என்.ஏ.பரிசோதனைக்கு 8 பேர் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
- வேங்கைவயல் விவகாரத்தில்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதல் கட்டமாக 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த கடந்த ஏப்ரல் மாதம் முடிவு செய்ததில் 3 பேர் மட்டும் பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். அவர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
வேங்கைவயல் பகுதியை சோ்ந்த 8 பேர் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வர மறுத்தனர். அவர்கள் தரப்பில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் குற்றவாளிகளை அடையாளம் காண அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க டி.என்.ஏ. பரிசோதனை அவசியம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் புதுக்கோட்டை கோர்ட்டு மூலம் நடவடிக்கை மேற்கொள்ள ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து டி.என்.ஏ. பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதில் வேங்கைவயல் பகுதியை சேர்ந்த 8 பேரும் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பாக அவர்களது கருத்தை தெரிவிக்க அறிவுறுத்தி, மறுநாள் மதியத்திற்குள் பதில் அளிக்க நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.
இதைத்தொடா்ந்து 8 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது அவர்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தனர். ஒவ்வொருவரும் எழுத்து பூர்வமாக தங்களது கருத்தை வக்கீல் மலர்மன்னன் மூலம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். மேலும் எதற்காக மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்பது குறித்து தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் நீதிபதி விசாரித்தார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, அரசு தரப்பு வக்கீல் குமார் ஆகியோர் இந்த வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனை முக்கியத்துவம் குறித்தும், இவர்களிடம் மட்டுமில்லாமல் 119-க்கும் மேற்பட்டவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உள்ளதாகவும், இந்த பரிசோதனை மேற்கொள்வதால் இவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள் என்றனர். பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக சித்தரிக்க போலீசார் முயல்வதாகவும், குடிநீர் தொட்டியில் அசுத்தத்தை கலந்தது யார்? என்பதை போலீசார் கண்டுபிடிக்காமல், அந்த அசுத்தம் யாருடையது என்பதற்காக டி.என்.ஏ. பரிசோதனை நடத்துகின்றனர் எனவும், அதன்மூலம் குற்றம் சாட்ட முயல்வதாகவும், சம்பவம் நடந்து 6 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுப்பு தெரிவிப்பதாக அந்த 8 பேரின் தரப்பில் வக்கீல் வாதத்தை முன்வைத்தார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை வருகிற 4-ந் தேதிக்கு நீதிபதி ஜெயந்தி தள்ளிவைத்தார். அன்றைய தினம் டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும். டி.என்.ஏ. பரிசோதனைக்கு 8 பேர் ஏற்கனவே வர மறுத்தனர். தற்போது மீண்டும் மறுப்பு தெரிவித்த நிலையில், பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து 4-ந் தேதி தெரிந்துவிடும்.
- சேலம் மாவட்டம் முழுவதும் நிதி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கடைக்காரர்களிடம் கட்டாயமாக ரூ.500 தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.
சேலம்:
சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வரும் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக அந்த கட்சி யினர் சேலம் மாவட்டம் முழுவதும் நிதி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அருணாச்சல ஆசாரி தெரு பகுதியில் உள்ள வட மாநிலத்தவர்களின் மொத்த வியாபார கடைகளுக்கு அந்த கட்சி நிர்வாகிகள் சிலர் சென்றனர், அவர்கள் கடைக்காரர்களிடம் கட்டாயமாக ரூ.500 தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.
இதில், மகாவீரர் என்ற வடமாநிலத்தவர் நடத்தி வரும் துணிக்கடையில் பணம் கேட்டபோது, தற்போது வியாபாரம் சரிவர நடைபெறவில்லை எனக் கூறி 100 ரூபாயும், 200 ரூபாயும் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திராவிடர் விடுதலைக் கழகத்தினர், தமிழர்கள் மூலம் வியா பாரம் நடத்திக் கொண்டு எங்களுக்கு மாநாட்டுக்கு நிதி தர மறுப்பதா என கூறி கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்க முயற்சித்துள்ளனர்.
இதனால் அவர்களுக்கி டையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் நிதி வசூலிக்க வந்தவர்கள் வியாபாரி மகாவீரரை ஒருமையில் பேசி தாக்க முயன்றதோடு மிரட்டி சென்றதாக தெரி கிறது. உடனே மகாவீரர் தொலைபேசி மூலம் போலீசாரை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறினார். பின்பு அவர், அருணாச்சலஆசாரி தெரு சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த சேலம் நகர போலீசார் அவரை சமாதானப்படுத்தினர்.
இதனிடையே சேலம் மில் ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பாக திராவிட விடுதலைக் கழகத்தை சேர்ந்தவர்கள் மீது சேலம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
- கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட் சுமி. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரண மாக நாகலட்சுமி 100 நாள் வேலை திட்ட மேற்பார்வை யாளராக பணியாற்றி வந் தார்.
பணி தொடர்பாக நாக லட்சுமிக்கும், பஞ்சாயத்து நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக நாகலட்சுமி கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசாரும் நட வடிக்கை எடுக்காமல் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த நாகலட்சுமி அரசு பஸ்சில் செல்லும் போது கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர் பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்வதற்கு முன்பு நாகலட்சுமி எழுதிய கடிடத்தில், தனது தற் கொலைக்கு காரணம் மையிட்டான்பட்டி பஞ்சா யத்து துணைத்தலைவர் முருகன், உறுப்பினர் வீரக்குமார், கிளார்க் முத்து என குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அவர்கள் தலைமறைவானார்கள். இந்த நிலையில் பிரேத பரி சோதனைக்காக நாகலட்சுமி யின் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிந்த பின்பு உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து விட்டனர். தற்கொலைக்கு தூண்டிய 3 பேரை கைது செய்ய வேண்டும், நாகலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
5 பெண் குழந்தை களையும் அரசு காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
கடந்த 2 நாட்களாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. 3-வது நாளாக இன்றும் நாகலட்சுமியின் உடலை வாங்காமல் உற வினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- 8-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.பள்ளிக்கு பக்கத்திலேயே பட்டாபிராமர் கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இத
- கோவிலின் கல்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விடுவதாக நேற்று முடிவு செய்தனர்.
விழுப்புரம்:
செஞ்சி வட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த குறிஞ்சிப்பை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. 8-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு பக்கத்திலேயே பட்டாபிராமர் கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பள்ளியின் மூன்று வகுப்பறை கட்டிடம் மூடப்பட்டது. பக்கத்தில் உள்ள கட்டிடத்தில் வகுப்புகள் நடந்து வருகின்றன. கோவிலின் கல்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விடுவதாக நேற்று முடிவு செய்தனர். தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி செல்வராஜ் நேரில் வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பள்ளி நடைபெற்றது. இந்நிலையில் வல்லம் ஒன்றிய குழு தலைவர் அமுதா ரவிக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்ததாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கிராம மக்கள் ஒன்றிய குழு தலைவரிடம் பள்ளி அருகில் உள்ள கோவில் சுவர் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை இல்லாததால் நாங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர் நேரில் பார்வையிட்டு விசாரணை செய்த ஒன்றிய குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்களை சமாதானம் செய்தனர். இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர்.
கோவில் என்பது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும். பள்ளிக்கூடம் என்பது கல்வித்துறை கட்டுப்பாட்டில் வரும். இதனால் இருதரப்பு அதிகாரிகளும் ஒன்றி ணைந்து செயல்பட்டால் தான் இப்பிரச்சனை முடிவுக்கு வரும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகி ன்றனர்.
- பெண்களை பஸ்சில் ஏற்ற மறுப்பு தெரிவிக்கின்றனர்.
- இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் பழைய விராலிப்பட்டி கிராமத்தில் இருந்து நூறுநாள் வேலை செய்யும் பெண்கள் புது விராலிப்பட்டி குப்புசாமி கோவில் வரை கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இந்த நிலையில் அவர்கள் அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்ய வேண்டும் என்றால், அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பெண்களை பஸ்சில் ஏற்ற மறுக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.