search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "denial"

    • கல்பாடி ஊராட்சி பகுதிகளில் கல்குவாரி அமைக்க அனுமதி கிடையாது
    • கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே கல்பாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். துணை தலைவர் கலைமகள் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் காமராஜ் ஊராட்சியின் செயல்பாடு கள் குறித்து அறிக்கை வாசித்தார். பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டார்.

    இதில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள, மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும், நிறை வேற்றப்படவேண்டிய திட்டப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அரசின் நலத்திட்டங்கள், அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.கூட்டத்தில் கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதியதாக எந்தவொரு கல் குவாரி மற்றும் புதிய கிரஷர் மற்றும் தார் பிளான்ட் போன்ற வற்றிக்கு அனுமதி அளிக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என க.எறையூர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதனை ஏற்று தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

    • பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
    • கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட் சுமி. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரண மாக நாகலட்சுமி 100 நாள் வேலை திட்ட மேற்பார்வை யாளராக பணியாற்றி வந் தார்.

    பணி தொடர்பாக நாக லட்சுமிக்கும், பஞ்சாயத்து நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக நாகலட்சுமி கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசாரும் நட வடிக்கை எடுக்காமல் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தி அடைந்த நாகலட்சுமி அரசு பஸ்சில் செல்லும் போது கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் தொடர் பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்வதற்கு முன்பு நாகலட்சுமி எழுதிய கடிடத்தில், தனது தற் கொலைக்கு காரணம் மையிட்டான்பட்டி பஞ்சா யத்து துணைத்தலைவர் முருகன், உறுப்பினர் வீரக்குமார், கிளார்க் முத்து என குறிப்பிட்டிருந்தார்.

    இதன் அடிப்படையில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அவர்கள் தலைமறைவானார்கள். இந்த நிலையில் பிரேத பரி சோதனைக்காக நாகலட்சுமி யின் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

    பிரேத பரிசோதனை முடிந்த பின்பு உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து விட்டனர். தற்கொலைக்கு தூண்டிய 3 பேரை கைது செய்ய வேண்டும், நாகலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    5 பெண் குழந்தை களையும் அரசு காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

    கடந்த 2 நாட்களாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. 3-வது நாளாக இன்றும் நாகலட்சுமியின் உடலை வாங்காமல் உற வினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தோப்பு உற்சவத்துக்கு சாமி தூக்குவதற்கு மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பாடலீஸ்வரர் கோவில் முன்பு உள்ள கடைகளுக்கு தற்போது ஏலம் விடக்கூடாது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பவுர்ணமி அன்று பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் ஊர்வலமாக காராமணிக்குப்பம் விநாயகர் கோவில் அருகே தோப்பு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இன்று காலை வழக்கம் போல் பாடலீஸ்வரர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது கோவில் வளாகத்தில், கோவில் முன்பு உள்ள சிறு வியாபாரிகள் திடீரென்று திரண்டு வந்தனர். அவர்களுடன் சாமி தூக்குபவர்களும் வந்தனர். பின்னர் சாமி தூக்குபவர்கள் திடீரென்று நாங்கள் தோப்பு உற்சவத்திற்கு சாமி தூக்க மாட்டோம் என தெரிவித்ததால் கோவில் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் சிறு வியாபாரிகள் கூறுகையில், பாடலீஸ்வரர் கோவில் முன்பு உள்ள கடைகளுக்கு தற்போது ஏலம் விடக்கூடாது. அதற்கு மாறாக முன்பு யார் கடை வைத்திருந்தார்களோ அவர்களே மீண்டும் கடை வைத்திருக்க அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு ஆதரவாக தான் சாமி தூக்குபவர்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக சிறு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று பேசி முடிவு செய்வோம். 

    தற்போது தோப்பு உற்சவம் என்பது மிக முக்கியமான உற்சவம் ஆகும். ஆகையால் இதற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது. மேலும் சாமி தூக்குபவர்கள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். ஆகையால் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசி நடவடிக்கை மேற்கொள்வோம். ஆகையால் தோப்பு உற்சவத்திற்கு சாமி தூக்கிக்கொண்டு காராமணிக்குப்பத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து சிறு வியாபாரிகள் அங்கிருந்து கலந்து சென்றனர். மேலும் சாமி தூக்குபவர்கள் தோப்பு உற்சவத்திற்கு செல்வதற்காக பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனை தூக்கிக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் அண்ணன்-தம்பி 2 பேரும் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மேலக்காவிரி வடக்கு குடியானத் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 40) டிரைவர். இவரது மனைவி சீத்தாலட்சுமி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூத்த மகன் ஆகாஷ் 8-ம் வகுப்பும், ஹரீஸ் 6-ம் வகுப்பும், ரித்தீஸ் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். அண்ணன்-தம்பியான ஆகாஷ், ஹரீஸ் அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளனர். இதனை பெற்றோர் கண்டிப்பது வழக்கம்.

    இதேபோல் இன்றும் சகோதரர்கள் இருவரும் பள்ளிக்கு செல்லவில்லையாம். ஆனால் 3-வது மகன் ரீத்தீஸ் பள்ளிக்கு சென்று விட்டார். மற்ற இருவரும் பள்ளிக்கு செல்லாததால் ஆத்திரம் அடைந்த தாய் சீத்தாலட்சுமி மகன்கள் 2 பேரையும் கடுமையாக திட்டி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆகாஷ், ஹரீஸ் ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

    அவர்கள் இருவரும் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்ததை கண்ட தாய் சீத்தாலட்சுமி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுபற்றி கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம் அருகே இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    வேலூர்:

    குடியாத்தம் தாலுகா நல்லாகவணியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு 22 வயது இளம்பெண்ணை தூக்கிச்சென்று அங்குள்ள மலையடிவாரத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி தொடர்ந்து 5 மாதம் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்தபெண் கர்ப்பிணியானார். உடனே தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மோகனிடம் அந்த பெண் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து மிரட்டி உள்ளார்.

    இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 28.8.2013 அன்று இளம்பெண் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்த நிலையில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து இறந்துள்ளது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார். அதில் இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய மோகனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    மேலும் ரூ.5 ஆயிரம் அபராதத்தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும், இந்த தொகை போதாது என்பதால் உரிய இழப்பீடு வழங்க வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் டெல்லிக்கு வர வேண்டாம் என்று ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #RahulGandhi #CongressLeaders
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மந்திரி பதவியை யாருக்கெல்லாம் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக குமாரசாமி இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு சோனியா காந்தி, ராகுல்காந்தியை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் டெல்லிக்கு வர வேண்டாம் என்று ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். டெல்லிக்கு வரும் தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு மந்திரி பதவி கேட்டு வற்புறுத்தலாம் என்பதாலும், பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ.க்களை வருகிற 24-ந் தேதி வரை பாதுகாக்க வேண்டி இருப்பதாலும், டெல்லிக்கு வர காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல்காந்தி அனுமதி மறுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வர், சாமனூர் சிவசங்கரப்பா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே துணை முதல்-மந்திரி பதவிக்காக கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் 2 பேருக்கு துணை முதல்-மந்திரி வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களில் பரமேஸ்வருக்கு மட்டும் துணை முதல்-மந்திரி பதவி உறுதியாகி இருப்பதாக தெரிகிறது. 
    ×