என் மலர்
நீங்கள் தேடியது "கொடுக்க"
- சேலம் மாவட்டம் முழுவதும் நிதி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கடைக்காரர்களிடம் கட்டாயமாக ரூ.500 தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.
சேலம்:
சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வரும் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக அந்த கட்சி யினர் சேலம் மாவட்டம் முழுவதும் நிதி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அருணாச்சல ஆசாரி தெரு பகுதியில் உள்ள வட மாநிலத்தவர்களின் மொத்த வியாபார கடைகளுக்கு அந்த கட்சி நிர்வாகிகள் சிலர் சென்றனர், அவர்கள் கடைக்காரர்களிடம் கட்டாயமாக ரூ.500 தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.
இதில், மகாவீரர் என்ற வடமாநிலத்தவர் நடத்தி வரும் துணிக்கடையில் பணம் கேட்டபோது, தற்போது வியாபாரம் சரிவர நடைபெறவில்லை எனக் கூறி 100 ரூபாயும், 200 ரூபாயும் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திராவிடர் விடுதலைக் கழகத்தினர், தமிழர்கள் மூலம் வியா பாரம் நடத்திக் கொண்டு எங்களுக்கு மாநாட்டுக்கு நிதி தர மறுப்பதா என கூறி கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்க முயற்சித்துள்ளனர்.
இதனால் அவர்களுக்கி டையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் நிதி வசூலிக்க வந்தவர்கள் வியாபாரி மகாவீரரை ஒருமையில் பேசி தாக்க முயன்றதோடு மிரட்டி சென்றதாக தெரி கிறது. உடனே மகாவீரர் தொலைபேசி மூலம் போலீசாரை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறினார். பின்பு அவர், அருணாச்சலஆசாரி தெரு சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த சேலம் நகர போலீசார் அவரை சமாதானப்படுத்தினர்.
இதனிடையே சேலம் மில் ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பாக திராவிட விடுதலைக் கழகத்தை சேர்ந்தவர்கள் மீது சேலம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.