பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்கு

பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் கூறினார்.காதலன் மறுப்பு தெரிவித்ததால் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்கு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை ஜெபமாலை புரத்தை சேர்ந்த 25 வயது பெண்.

இவரும் ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்த லெனின் (29) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த பெண் நாம் உடனே திருமணம் செய்து கொள்வோம் என லெனினிடம்கூறினார்.

அதற்கு அவர் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படு கிறது. தொடர்ந்து அந்த பெண் கேட்டபோது, லெனின் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இது குறித்து அந்த பெண் தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com