search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. நிர்வாகிகள் பேரணியாக செல்ல அனுமதி மறுப்பு: போலீசாருடன் வாக்குவாதம்
    X

    போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை படத்தில் காணாலம்.

    பா.ஜ.க. நிர்வாகிகள் பேரணியாக செல்ல அனுமதி மறுப்பு: போலீசாருடன் வாக்குவாதம்

    • கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உழவர் சந்தை அருகே வந்தனர்.
    • பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடத்திக் கொள்கிறோம் எனக்கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    கடலூர்:

    தேச பிரிவினையின் சோக வரலாற்று நினைவு தின பேரணி நடத்த பா.ஜ.க. கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உழவர் சந்தை அருகே வந்தனர். மாநகரத் தலைவர் வேலு வெங்கடேசன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேரணி செல்வதற்கு அனுமதி கிடையாது. மேலும், பேரணியில் தேசிய கொடி ஏந்தி செல்லக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    அப்போது பா.ஜ.க. நிர்வாகிகள் நாங்கள் பேரணியாக செல்வதற்கு ஏன் அனுமதி அளிக்க மாட்டீர்கள்? அதற்கு மாறாக பல்வேறு கட்சிக்கு அனுமதி வழங்கி கொண்டிருக்கிறீர்கள்? என கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று பேரணியாக செல்ல வேண்டுமானால் முறைப்படி அனுமதி பெற்று செல்ல வேண்டுமென போலீசார் தெரிவித்தனர். தற்போது பேரணிக்கு அனுமதி வழங்க இயலாது. அதற்கு மாறாக நீங்கள் கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர். அதன்படி பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடத்திக் கொள்கிறோம் எனக்கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×