search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வணிகம்"

    • ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து விலகி, வணிக வாழ்க்கையை தொடர இருக்கிறார்.
    • புதிய பொறுப்புகளை ஏற்கவும், தனது குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவழிக்கவும் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்

    ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் அரசியலில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் கூறியதாவது, "ஆஸ்திரேலியாவை மேலும் வலுவான பாதுகாப்புமிக்க செழிப்பான ஒரு நாடாக மாற்ற, நாட்டின் உயரிய நிலையில் சேவையாற்றும் ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக குடும்பத்தினர், நண்பர்கள், வாக்காளர்கள் ஆகியோருக்கு நன்றி. அனைத்துலக பெருநிறுவத்துறையில் புதிய பொறுப்புகளை ஏற்கவும், தனது குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவழிக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளேன். மேலும், உலகளாவிய கார்ப்ரேட் துறையில் புதிய சவால்களை எடுப்பேன்" எனத் தெரிவித்தார்.

    கொரோனா பெருந்தொற்று காலங்களின் போது, அமைச்சரவைக்கோ, பதவியில் இருப்பவர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தெரிவிக்காமல், இரகசியமாக பல அமைச்சர்களின் பதவிகளில் தன்னை நியமித்துக் கொண்டவர் ஸ்காட் மோரிசன் என்பது குறிப்பிடதக்கது.  

    • பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்
    • திருமணம் மற்றும் கோவில் விசேஷங்கள் இல்லாததால் விலை சரிந்தது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம், நொய்யல் மரவா பாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம் , ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை, ரோஜா, செவ்வந்தி, சம்பங்கி சம்பங்கி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை பயிர் செய்துள்ளனர். இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் கோவிலுக்கு வரும் விவசாயிகளுக்கும் அருகாமையில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வேலாயுதம்பாளையம் ,நொய்யல், புன்னம் சத்திரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, என். புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.650- க்கும், சம்பங்கி கிலோ ரூ.180- க்கும், அரளி கிலோ ரூ.180- க்கும், ரோஜா கிலோ ரூ.260- க்கும், முல்லைப் பூ ரூ.550- க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் விற்பனையானது . நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.380-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70- க்கும், அரளி கிலோ ரூ.120- க்கும், ரோஜா கிலோ ரூ.200- க்கும்,முல்லைப் பூ கிலோ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் விற்பனையானது. திருமணம் மற்றும் கோவில் விசேஷ நாட்கள் இல்லாததால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது . இதனால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • வருவாய் மாவட்ட பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மூன்று வணிக வரி மாவட்டங்களுடன் திருப்பூர் வணிக வரி கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
    • வணிக வரி வசூல் நிலவரம்,வணிக வரி சார்ந்த பல்வேறு வழக்குகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

    திருப்பூர்:

    ஈரோடு கோட்டத்தின் கீழ் திருப்பூரில் உள்ள 2 வணிக வரி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. வருவாய் மாவட்ட பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மூன்று வணிக வரி மாவட்டங்களுடன் திருப்பூர் வணிக வரி கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

    கோட்ட அலுவலகம் செயல்பட அவிநாசி அருகே கைகாட்டிப்புதூரிலுள்ள ஏ.இ.பி.சி.,க்கு சொந்தமான கட்டடம் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கோட்ட வணிக வரித்துறை இணை கமிஷனர் லட்சுமி பாக்கியா தனீரு, திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வணிக வரி துணை கமிஷனர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பூர் வணிக வரி மாவட்ட துணை கமிஷனர் முருககுமார் மற்றும் உதவி கமிஷனர்கள், வணிக வரி அலுவலர்கள் பங்கேற்றனர். வணிக வரி வசூல் நிலவரம்,வணிக வரி சார்ந்த பல்வேறு வழக்குகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். அலுவலக செயல்பாடுகளை பார்வையிட்டு ஆவணங்களை தணிக்கை செய்தார்.

    திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ரவி உட்பட நிர்வாக குழு உறுப்பினர்கள், இணை கமிஷனரை சந்தித்து வணிக வரி கோட்ட அலுவலகத்தை விரைவில் திறக்கவேண்டும்.ஆர்டர் குறைவால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றன. இதனால் வரி செலுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. வரி வசூலில், அதிகாரிகள் கடுமைகாட்டக்கூடாது என வரி பயிற்சியாளர் கூட்டமைப்பினர் இணை கமிஷனரிடம் தெரிவித்தனர்.

    ஆய்வு குறித்து இணை கமிஷனரிடம் கேட்டபோது, இது வழக்கமான ஆய்வுதான். திருப்பூரில் வணிக வரி கோட்ட அலுவலகம் செயல்பட உள்ள கட்டடத்தை பார்வையிட்டுள்ளோம். அரசு உத்தரவு வந்தவுடன், விரைவில் கோட்ட அலுவலகம் செயல்பாட்டை தொடங்கும் என்றார்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
    • பிற சார்புத்துறை அலுவலர்கள் விவசாயிகளின் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மே 2023-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கி ழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறையிலான தோட்டக்க லைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து பயனடையலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    ×