விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.பிற சார்புத்துறை அலுவலர்கள் விவசாயிகளின் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மே 2023-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கி ழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறையிலான தோட்டக்க லைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து பயனடையலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com