search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Noodles"

    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகள் மாலையில் சாப்பிட நூடுல்ஸ், காய்கறிகள் சேர்த்து போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    கேரட் -1
    பீன்ஸ் - 5
    பச்சை பட்டாணி - கொஞ்சம்
    உருளைக்கிழங்கு - கொஞ்சம்
    எண்ணெய் - தேவையான அளவு
    மேகி நூடுல்ஸ் - சின்ன பாக்கெட்
    கடலை மாவு அல்லது பஜ்ஜி/போண்டா மிக்ஸ் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியை தேவையான அளவு உப்பையும் சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த அனைத்து காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் மேகி நூடுல்ஸ், மசாலாவுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.

    வேகவைத்த மேகி நூடுல்ஸ்சுடன், வதங்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். கையில் சிறிது தண்ணீர் தடவி உருட்டினால் கையில் ஒட்டாமல் இருக்கும்.

    கடலை மாவை / பஜ்ஜி போண்டா மிக்ஸ்சில் தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் கொஞ்சம் உப்பையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து வைத்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் நுடுல்ஸ் உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    மாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் வெஜிடபிள் போண்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சிக்கன், காய்கறி நூடுல்ஸ் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன், வெஜிடபிள் சேர்த்து நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எண்ணெய் - 5 தேக்கரண்டி,
    வெங்காயம் - 2,
    குடைமிளகாய் - 1,
    முட்டைகோஸ் - 1/4,
    கேரட் - 3,
    பீன்ஸ் - 2,
    முட்டை - 2,
    மட்டன் - 100 கிராம்,
    நூடுல்ஸ் - 1 பாக்கெட்
    மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி,
    உப்பு, சர்க்கரை - ½ தேக்கரண்டி,
    சோயா சாஸ், வெங்காயத்தாள் - தேவைக்கு.



    செய்முறை :

    வெங்காயம், குடைமிளகாய், கேரட், பீன்ஸை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    மட்டனை உப்பு, வேக வைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், குடைமிளகாய், மட்டன் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    காய்கறிகள் சற்று வதங்கியதும் முட்டையை ஊற்றி உதிரியாக வரும் வரை கிளறி விடவும்.

    கடைசியாக பின்பு நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி இறுதியாக மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை, சோயா சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.

    பின்னர் வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் வெஜிடபிள் நூடுல்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நூடுல்ஸை வைத்து சூப்பரான நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மேகி நூடுல்ஸ் - 2 கப்
    உருளைக்கிழங்கு - 2
    பொடியாக நறுக்கிய கேரட் - ஒன்று
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
    வெங்காயத்தாள் - 1 கட்டு
    பூண்டு - 4 பல்,
    இஞ்சி - சிறிது துண்டு,
    பச்சைமிளகாய் - 2,
    செஷ்வான் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
    மைதா மாவு - 3 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    நூடுல்ஸில் கால் பங்கை நன்றாக நொறுக்கி வைக்கவும்.

    மீதமுள்ள முக்கால் பாகம் நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்த நன்றாக மசித்து கொள்ளவும்.

    மைதா மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கேரட், வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த நூடுல்ஸ், மசித்த உருளைக்கிழங்கு, கேரட், இஞ்சி, மேகி நூடுல்ஸ் மசாலா, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயத்தாள், செஷ்வான் சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    நொறுக்கிய நூடுல்ஸை ஒரு தட்டில் கொட்டிக்கொள்ளவும்.

    கலந்த கலவையை விருப்பமான வடிவில் பிடித்து மைதா மாவில் முக்கி நொறுக்கி வைத்துள்ள நூடுல்ஸில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான நூடுல்ஸ் கட்லெட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு விருப்பமான நூடுல்ஸை பலவாறு சமைக்கலாம். இன்று பூண்டு வெஜிடபிள் சேர்த்து சுவையான நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    நூடுல்ஸ் - 1 பாக்கெட்
    பூண்டு - 10 பற்கள்
    பச்சை மிளகாய் - 3  
    வெங்காயம் - 2
    கேரட் - 1
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நூடுல்ஸை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும், நூடுல்ஸை போட்டு, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் வேக வைத்து இறக்கி, நீரை வடித்துவிட்டு, பின் குளிர்ந்த நீரால் நூடுல்ஸை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

    பிறகு அதில் சோயா சாஸ் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான பூண்டு வெஜ் நூடுல்ஸ் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான நூடுல்ஸை வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நூடுல்ஸ் - 200 கிராம்
    மைதா மாவு - 200 கிராம்
    வெங்காயம் - 2
    கேரட் துருவல் - கால் கப்
    உருளைக்கிழங்கு - 2
    ப.மிளகாய் - 2
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    முட்டைக்கோஸ் துருவல் - கால் கப்
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:


    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மைதா மாவை தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    உருளைக்கிழங்கையும் வேக வைத்து தோலை உரித்து மசித்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டைக்கோஸ், கேரட், மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, இறக்க வேண்டும்.

    அதனுடன் உருளைக்கிழங்கு, நூடுல்ஸ், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    பிசைந்து வைத்த மாவை பூரி போல் உருட்டி சமோசா வடிவல் மடித்து அதன் நடுவில் நூடுல்ஸ் மசாலாவை வைத்து ஓரங்களில் தண்ணீர் தொட்டு ஓட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்துள்ள சமோசக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான நூடுல்ஸ் சமோசா ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×