என் மலர்
நீங்கள் தேடியது "Skydiver"
- எதிர்பாரா விதமாக அந்த பாராசூட் திடீரென செயலிழந்தது.
- இதனால் 11000 அடி உயரத்தில் இருந்து அந்த வாலிபர் கீழே விழுந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் பாராசூட் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற இடமாகத் திகழ்கிறது. இதனால் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அங்கு குவிவது வழக்கம்.
இந்நிலையில் மிட்செல் டீக்கின் (25) என்ற இளைஞர் பாராசூட்டில் பறந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அந்த பாராசூட் திடீரென செயலிழந்தது.
இதனால் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அந்த வாலிபர் கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.
இந்த விபத்தில் அவரது பயிற்றுவிப்பாளருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் விமானம் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மானெட் பெய்லி தனது 102-வது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட விரும்பினார்.
- சுமாா் 6,900 அடி உயரத்தில் இருந்து அவர் ஸ்கை டைவிங் எனப்படும் வான்சாகசத்தில் ஈடுபட்டார்.
லண்டன்:
இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள பென்ஹால் கிரீன் நகரைச் சேர்ந்த மூதாட்டி மானெட் பெய்லி. இவர் தனது 102-வது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட விரும்பினார்.
அதன்படி சுமாா் 6,900 அடி உயரத்தில் இருந்து அவர் ஸ்கை டைவிங் எனப்படும் வான்சாகசத்தில் ஈடுபட்டார். இதன்மூலம் இவர் நாட்டின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்னதாக 2022-ல் தனது 100-வது பிறந்த நாளின்போது மானெட் 230 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டியது குறிப்பிடத்தக்கது.
- எந்தவித பயமும் இல்லாமல் ஜாலியாக ‘நூடுல்ஸ்’ சாப்பிட்டு கொண்டே ஸ்கை டைவிங் சாகசம் செய்கிறார்.
- ஒரு பயனர், வாழ்க்கையை எவ்வாறு ரசித்து வாழ வேண்டும் என்பதை இவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என பதிவிட்டார்.
வான்சாகசம், கடல் சாகசம் போன்ற சாகச விளையாட்டுகளை விரும்பும் வாலிபர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான வான் சாகசத்தை விரும்பிய ஒருவர் 'ஸ்கை டைவிங்' சாகசம் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வழக்கமாக 'ஸ்கை டைவிங்' செய்யும் பெரும்பாலானோர் கண்களை மூடி கொள்வது, தனது பாதுகாவலரை இறுக்கி பிடித்து கொள்வது போன்ற செயல்களை செய்வார்கள். ஆனால் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் 'ஸ்கை டைவிங்' செய்யும் வாலிபர் உயரத்தில் இருந்து குதிப்பது குறித்து எந்தவித பயமும் இல்லாமல் ஜாலியாக 'நூடுல்ஸ்' சாப்பிட்டு கொண்டே ஸ்கை டைவிங் சாகசம் செய்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், 'ஸ்கை டைவிங்' செய்வதே சுவாரஸ்யமான ஒரு விஷயம். இந்த வாலிபர் அதை மேலும் சுவாரஸ்யமாக்கி விட்டார் என பதிவிட்டனர். ஒரு பயனர், வாழ்க்கையை எவ்வாறு ரசித்து வாழ வேண்டும் என்பதை இவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என பதிவிட்டார்.






