என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராசூட்"

    • எதிர்பாரா விதமாக அந்த பாராசூட் திடீரென செயலிழந்தது.
    • இதனால் 11000 அடி உயரத்தில் இருந்து அந்த வாலிபர் கீழே விழுந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் பாராசூட் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற இடமாகத் திகழ்கிறது. இதனால் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அங்கு குவிவது வழக்கம்.

    இந்நிலையில் மிட்செல் டீக்கின் (25) என்ற இளைஞர் பாராசூட்டில் பறந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அந்த பாராசூட் திடீரென செயலிழந்தது.

    இதனால் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அந்த வாலிபர் கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.

    இந்த விபத்தில் அவரது பயிற்றுவிப்பாளருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் விமானம் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் புது இணைய தொடரை ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.
    • இதில் நடிகர் ஷாம், கிஷோர் மற்றும் நடிகை கனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்,  இயக்குநர் ஶ்ரீதர் கே இயக்கத்தில், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஒரிஜினல் வெப் சீரிசான  "பாராசூட்" அறிவித்துள்ளது.

    நடிகர் கிருஷ்ணா தயாரிப்பு நிறுவனமான ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த சீரிசைத் தயாரித்துள்ளது. நடிகர் கிருஷ்ணா டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்காக தயாரிக்கும் இரண்டாவது சீரிஸ் இது ஆகும்.

    பல சூப்பர்ஹிட் படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக கலக்கிய நடிகர் ஷாம், பன்முக திறமை கொண்ட நடிகர் கிஷோர் மற்றும் நடிகை கனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த மூவருடன், திறமைவாய்ந்த குழந்தை நட்சத்திரங்களான சக்தி மற்றும் இயல் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன், பிரபல நடிகர்கள் VTV கணேஷ், பாவா செல்லதுரை முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இந்த வெப் சீரிசுக்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்கிறார்.  கலை இயக்குநராக ரெமியன் பணியாற்ற, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை அமைக்கவுள்ளார்.

    • பாராகிளைடிவ் சேவை வழங்கிய நிறுவனம் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்துள்ளது.
    • நிறுவன உரிமையாளர் சேகர் ரைசாதா மீது மாண்ட்ரெம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 27 வயதான சுற்றுலாப் பயணி ஷிவானி டேபிள் என்பவர் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் அங்கு வானில் பறக்கும் பாராகிளைடரில் பறக்க திட்டமிட்டு, வடக்கு கோவாவில் உள்ள பாராகிளைடிங் நிறுவனத்தை தொடர்புக் கொண்டார்.

    அதன்மூலம், நேற்று மாலை ஷிவானி டேபிள் என்பவர் பயிற்சியாளர் சுமல் (26) என்பவருடன் பாராகிளைடரில் பறந்தார். ஆனால், அவர்கள் பறந்த சிறிது நேரத்திலேயே கேரி என்கிற கிராமம் அருகே கயிறு அறுந்து பள்ளத்தாக்கில் விழுந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் இருவரையும் சடலமாக மீட்டனர்.

    மேலும், விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், " பாராகிளைடிவ் சேவை வழங்கிய நிறுவனம் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்துள்ளது.

    இதைதொடர்ந்து, மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்ததற்காக அந்நிறுவன உரிமையாளர் சேகர் ரைசாதா மீது மாண்ட்ரெம் காவல் நிலையத்தில் பாரதிய நியாய் சன்ஹிதாவின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×