இந்தியாவில் ஒரே நாளில் 761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 12 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,334 ஆக உயர்வு.கேரளாவில் அதிகபட்சமாக 1,249, தமிழகத்தில் 190 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 12 பேர் உயிரிழப்பு
Published on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 761 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா பாதிப்பால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,423 இலிருந்து 4,334 ஆக அதிகரித்துள்ளது.

இதில், கேரளாவில் அதிகபட்சமாக 1,249, கர்நாடகாவில் 1,240, மகாராஷ்டிராவில் 914, தமிழ்நாட்டில் 190, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் தலா 128 என கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையாக உள்ளன.

புதியதாக 12 பேர் இறந்துள்ளனர். இதில், ஐந்து பேர் கேரளாவில் இருந்தும், நான்கு பேர் கர்நாடகாவிலிருந்தும், இரண்டு பேர் மகாராஷ்டிராவிலிருந்தும், ஒருவர் உத்தரபிரதேசத்திலிருந்தும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com