search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "affect"

  • 15 விமானங்கள், தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து வருகின்றன.
  • சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன.

  மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

  ஆனால், சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இரவு 8 மணிக்கு மேல் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது.

  சென்னையில் மழை இரவு முழுவதும் நீடித்தது. இந்நிலையில், சென்னையில் இரவில் பெய்த கனமழையால் விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, 15 விமானங்கள், தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து வருகின்றன.

  சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன.

  சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 16 விமானங்கள் வானிலை காரணமாக பல மணி நேரமாக தாமதமாகி வருகின்றன.

  • இயர்போன் போன்றவற்றை பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா?
  • இயர்போன்கள் நேரடியாக காதில் வைக்கப்படுவது காற்றுப்பாதையைத் தடுக்கிறது.

  வளர்ந்து வரும் நவீன காலத்தில் செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். அதில் தற்போது பலரும் ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து எப்போதும் செல்போனில் மூழ்கியிருக்கிறார்கள். அதை வசதியாக மட்டுமின்றி, ஸ்டைலாகவும் கருதுகிறார்கள்.

  இருசக்கர வாகனம், பஸ், ரெயிலில் பயணிக்கும் பல பெண்களையும் இயர் போனும் காதுமாய் காண முடிகிறது. தொடர்ந்து இயர் போன் போன்றவற்றை பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா?

  இயர்போன் அல்லது ஹெட்போன் மூலம் உரத்த இசையைக் கேட்பது, கேட்கும் திறனைப் பாதிக்கும். இயர்போன் மூலம் ஒலியலைகள் தொடர்ந்து செவிப் பறையைத் தாக்குவது நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தும்.


  நிபுணர்களின் கூற்றுப்படி, இயர்போன்களை மணிக்கணக்கில் அணிந்துகொண்டு இசை கேட்பது காதுகளுக்கும் மட்டுமல்ல. இதயத்துக்கும் நல்லதல்ல. இதனால் இதயம் வேகமாக துடிப்பதுடன், படிப்படியாக பாதிப்புக்கு உள்ளாகும். இயர்போன்களில் இருந்து

  வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதனால் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சினைகள் உண்டாகின்றன. பலர் தூக்கமின்மை அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

  இயர்போன்கள் நேரடியாக காதில் வைக்கப்படுவது காற்றுப்பாதையைத் தடுக்கிறது. இந்த அடைப்பு. பாக்டீரியாவின் வளர்ச்சி உட்பட பல்வேறு வகையான காது நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.

  இயர்போன்களை நீண்டகாலமாக பயன்படுத்துவது ஒரு நபரின் சமூக வாழ்க்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். சில சமயங்களில் அதிகப்படியான பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இயர்போன்களில் தொடர்ந்து பாடல்களைக் கேட்பதால், கவனம் செலுத்துவதில் குறைபாடு ஏற்படுகிறது. இது படிப்பு, வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகளுக்கு வழிவகுக்கிறது.

  இயர்போன்களை காதுகளில் பொருத்தி இசை. பேச்சு என கேட்டு ரசிப்பது சுகமாக இருக்கும்தான். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் மனதில்கொள்ள வேண்டும். விவேகமாகவும், குறைந்த நேரத்துக்கும் இயர்போன்களை பயன்படுத்துவது எப்போதுமே பாதுகாப்பு.

  • தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
  • சீதோசன நிலை மாறி இருப்பதால் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  ஜெய்ப்பூர்:

  ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். உடனே அவர் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அசோக்கெலாட்டுக்கு கொரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

  அவரது உடல்நிலை சீராக தற்போது சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாவும் மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

  இது தொடர்பாக அசோக் கெலாட் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டாக்டர்கள் மருத்துவ பரிசோதனையில் எனக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்ததால் அடுத்த 7 நாட்கள் யாரையும் சந்திக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். சீதோசன நிலை மாறி இருப்பதால் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

  • பொதுமக்கள் கடும் அவதி
  • எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலை அடைக்கப்பட்டதால் அனைத்து பேருந்துகளும் மேம்பாலத்தில் சென்றது

  கிணத்துகடவு,

  கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் புதிய பஸ்நிலையம் அருகே தார் சாலை போடும் பணிகள் நேற்று திடீரென தொடங்கியது.

  இதன்காரணமாக கிணத்துக்கடவு-அரசம்பாளையம் பிரிவு அருகே தடுப்பு அமைக்கப்பட்டு, அங்கிருந்து பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் காலை நேரத்தில் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் ஆகியோர் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

  மேலும் அரசம்பாளையம் பிரிவில் இருந்து, சுமார் ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று கிணத்துக்கடவு பஸ் நிலையம் செல்ல வேண்டி உள்ளது. அதேபோல பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரும் பயணிகள் முத்தூர் பிரிவில் இறங்கி அங்கிருந்து பாதசாரியாக பஸ் நிலையம் வர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

  எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கிணத்துக்கடவு பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி திடீரென நடைபெற்றதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் மேம்பாலத்தின்கீழ் டிவைடர் வைத்து உள்ளதால், வாகன ஓட்டிகள் மீண்டும் ஒரு வழிப்பாதையில் திரும்ப வேண்டிஉள்ளது. எனவே இந்த பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

  இதுகுறித்து கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த பெண்கள் கூறியதாவது: காலைநேரத்தில் தார்சாலை அமைக்கும் பணி நடை பெற்றதால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். மேலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலை அடைக்கப்பட்டதால் அனைத்து பேருந்துகளும் மேம்பாலத்தின் மேல் சென்றது.

  எனவே பஸ்சுக்காக காத்திருந்த நாங்கள் அனைவரும் திரும்பவும் அரசம்பாளையம் பிரிவு சென்று, அங்கிருந்து மேம்பாலத்தின் வழியாக செல்லும் பேருந்துகளை மறித்து ஏற வேண்டி இருந்தது. எனவே பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் தார்சாலை அமைக்கும் பணியை செய்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • வெள்ள பாதிப்பு குறித்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • ரேசன் கடைகளில் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டும்.

  பேராவூரணி:

  பேராவூரணி தாசில்தார் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்ககைள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  கூட்டத்திற்கு தாசில்தார் சுகுமார் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

  இதில் பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் தாசில்தார் சுகுமார் பேசுகையில்:-

  வடகிழக்கு பருவமழை க்காக புயல், மழை, வெள்ள த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  தாலுகா அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு, வெள்ள பாதிப்பு குறித்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

  தினமும் மழையளவு, மழை நிலவரம், மழைக்கால உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு, வீடுகள் பாதிப்பு போன்ற நிலவரங்களை உடனே மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்க வேண்டும்.

  கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் கிராமத்திலேயே தங்கி இருக்க வேண்டும்.

  ஊரக வளர்ச்சி துறையினர் நீர்நிலைகள், குட்டைகள், திறந்தவெளி கிணறு போன்றவற்றை விரைவில் சீரமைக்க வேண்டும்.

  பொதுமக்களை தங்க வைப்பதற்கு பள்ளிகள், சமுதாய கூடங்களை தயார்படுத்த வேண்டும்.

  அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் மணல் மூட்டைகள், மீட்பு பணிக்கான பவர் பம்புகள், ஜெனரேட்டர் போன்றவை தயார் நிலையில் இருக்க வேண்டும்.

  ரேசன் கடைகளில் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றார்.

  கூட்டத்தில் வருவாய்துறை, பொதுப்பணி துறை, தீயணைப்பு துறை, காவல் துறை, நெடுஞ்சாலை துறை, ஊராட்சி துறை, சுகாதார துறை, போக்குவரத்து துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • அனைத்து நெல் கொள்முதல் நிலையங் களிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்.
  • தண்ணீர் புகுந்து பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகி பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

  தஞ்சாவூர்:

  தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்கினார். இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

  காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ரவிச்சந்தர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

  திருவையாறு புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்ட வேண்டும். தஞ்சாவூர் கோட்டத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங் களிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கக்கரை சுகுமாரன் கொடுத்துள்ள மனுவில், ஒரத்தநாடு சுற்று வட்டார பகுதியில் சில இடங்களில் சம்பா அறுவடை பணி தொடங்கிவிட்டது. எனவே தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  செல்லப்பன் பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, செல்லப்பன்பேட்டை கிராமத்தில் மழை நீர் செல்ல வழி இன்றி வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

  இதனால் மழை பெய்யும் நேரங்களில் அந்தப் பகுதியில் உள்ள வயலுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகி பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வாய்க்காலை மீட்டு எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராம பகுதி கிராமங்களில் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
  • காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை மேற்கொண்டாலும் குறைந்தது 3 அல்லது 4 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருப்பதாக கூறுகின்றனர்.

  தென்காசி:

  பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராம பகுதிகளான ஆவுடையானூர், அரியப்பபுரம், நாட்டார்பட்டி, திப்பணம்பட்டி, பெத்தநாடார்பட்டி, குறும்பலாப்பேரி, கீழப்பாவூர், மேலப்பாவூர், கல்லூரணி, சிவ நாடானூர்,இடையர் தவணை உள்ளிட்ட கிராமங்களில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

  இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதேபோன்று அங்கன்வாடி குழந்தைகளுக்கும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

  இதனால் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் பள்ளி மாணவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகளாக சேர்க்கப்பட்டு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் மட்டுமின்றி வாந்தி இருமல் போன்ற அறிகுறிகளும் உள்ளன. அதிகம் சோர்வடைந்த மாணவர்களுக்கு மருத்துவமனைகளில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

  காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை மேற்கொண்டாலும் குறைந்தது 3 அல்லது 4 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருப்பதாக கூறுகின்றனர். எனவே குழந்தைகளை வேகமாக தாக்கி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் சார்பில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சிறப்பு முகாம்களை அமைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

  ×