search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UP"

    உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த பெண்ணும், குழந்தையும் உயிரிழந்தனர். #Gorakhpurwoman #Watchingvideo #Delivery
    கோரக்பூர்:

    உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கோரக்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தார். அவர் அரசு போட்டித் தேர்வுகளுக்கு அங்கு தங்கி இருந்து படித்து வந்தார்.

    இந்த நிலையில் அப்பெண் தங்கி இருந்த வீட்டில் இருந்து ரத்தம் வெளியே வந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அப்பெண்ணும், பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தையும் இறந்து கிடந்தனர்.

    அவரது அறையில் கிடந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது அதில், வீட்டிலேயே பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுப்பது எப்படி? என்ற வீடியோ இருந்தது.

    விசாரணையில் திருமணமாகாத அந்த பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்து இணைய தளத்தில் வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார்.

    இதில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டது. பெண்ணும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். #Gorakhpurwoman #Watchingvideo #Delivery


    உத்தர பிரதேசத்தில் பொதுத்தேர்வில் காப்பியடித்து பிடிபட்ட மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். #UPBoardExam
    முசாபர்நகர்:

    உத்தர  பிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இயற்பியல் தேர்வு நடைபெற்றது. தேர்வில் காப்பியடிப்பதைத் தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் சென்று கண்காணித்தனர்.

    இவ்வாறு முசாபர்நகரில் உள்ள ஒரு தேர்வு மையத்திற்கு திடீரென சென்று ஆய்வு செய்தபோது, அங்கு சில மாணவர்கள் மொத்தமாக சேர்ந்து காப்பியடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு அந்த தேர்வு மையத்தின் கண்காணிப்பாளரும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், காப்பியடித்த மாணவர்கள், தேர்வு மைய கண்காணிப்பாளர் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.



    மேலும், தேர்வு மையத்தில் இருந்து, விடைகள் எழுதப்பட்ட பேப்பர்கள், துப்பாக்கி மற்றும் செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

    கைது செய்யப்பட்ட 17 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 17 பேரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். #UPBoardExam
    உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளியில் இருந்து வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். #UPGirlMolested
    முசாபர்நகர்:

    உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில், மாணவி ஒருவர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள், அந்த மாணவியை வீட்டில் கொண்டு விடுவதாக கூறி பைக்கில் ஏற்றி வந்துள்ளனர்.

    ஆனால், வீட்டுக்குச் செல்லாமல் பாதியிலேயே வாகனங்களை நிறுத்திய அந்த வாலிபர்கள், மாணவியை கரும்புத் தோட்டத்திற்குள் தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர் மாணவியை  4 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். தன்னை காப்பாற்றும்படி மாணவி கூச்சலிட்டுள்ளார்.

    மாணவியின் அலறல் சத்தம் கேட்டதும், அப்பகுதி மக்கள் சிலர் கரும்புத் தோட்டத்திற்குள் சென்றனர். பொதுமக்கள் வருவதைப் பார்த்ததும் 4 வாலிபர்களும் தப்பி ஓடினர். அவர்களில் 2 பேரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #UPGirlMolested
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என ராகுல் காந்தி இன்று அறிவித்துள்ளார். #Congress #RahulGandhi #Parliamentelection
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனது பாராளுமன்ற தொகுதியான அமேதியில் இருநாள் சுற்றுப்பயணம் செய்யும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் லக்னோ நகரை வந்தடைந்தார்.

    விமான நிலையத்தில் உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.



    பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, ‘அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில தலைவராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. சிறந்த உழைப்பாளியான அவருடன் இணைந்து பணியாற்றும் நாளை நான் எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

    உத்தரப்பிரதேசம் (மேற்கு) மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜோதிராதித்யா சிந்தியாவும் சிறப்பாக செயல்பட கூடியவர் என புகழாரம் சூட்டினார்.

    ‘வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு இருக்கும் ஒரே பொதுநோக்கம் மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அக்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் நோக்கமும் இதுதான். இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமளிக்காதது தொடர்பாக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர்களுக்கு எந்த வகையில் எங்கள் கட்சியின் உதவி தேவைப்பட்டாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.

    ஆனால், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நான் முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது என்பதால் எங்கள் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் இங்குள்ள 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்’ எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார். #Congress #RahulGandhi  #Parliamentelection 
    உத்தரபிரதேச மாநிலம் கமீர்பூர் மாவட்டத்தில் ரகோல் ரெயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பசு மாடுகள் மீது ரெயில் வேகமாக மோதியதில் 25 பசு மாடுகள் பலியானது. #cowskilled
    பந்தா:

    உத்தரபிரதேச மாநிலம் கமீர்பூர் மாவட்டத்தில் ரகோல் ரெயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பசு மாடுகள் மீது அந்த வழியாக வந்த ரெயில் ஒன்று வேகமாக மோதியது. இதில் 25 பசு மாடுகள் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானது.

    போலீசார் நடத்திய விசாரணையில், சில மர்ம நபர்கள் திட்டமிட்டு தண்டவாளத்தில் மாடுகளை நிறுத்தி விட்டு சென்றதாக தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். #cowskilled

    ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் பற்றி புதிய தகவல்கள் கிடைத்ததால், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு மீண்டும் சோதனை நடத்தியது. இதில் 3 பேர் பிடிபட்டனர். #NIA #ISIS #Punjab
    புதுடெல்லி:

    சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட சிலர், அதே பாணியில் ‘ஹர்கத் உல் ஹர் இ இஸ்லாம்’ என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, கடந்த மாதம் டெல்லி, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் 17 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தியது. அதில், 12 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து ராக்கெட் லாஞ்சர், 25 கிலோ வெடி மருந்துகள், தற்கொலைப்படை உடைக்கான மூலப்பொருட்கள், டைம்-பாம் குண்டு தயாரிக்க பயன்படும் 112 அலாரம் கெடிகாரங்கள், 91 செல்போன்கள், 134 சிம்கார்டுகள், 3 லேப்டாப்புகள், கத்தி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த கும்பல், ரிமோட் கண்ட்ரோல் கார்களை கூட வாங்கி இருப்பது தெரியவந்தது.

    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கும், அரசியல் தலைவர்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கும் அவர்கள் சதித்திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதற்கிடையே, பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில் புதிய திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மேலும், குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் டெல்லியில் தாக்குதல் நடத்த சில தேசவிரோத சக்திகள் முயன்று வருவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்தன.

    அவற்றின் அடிப்படையில், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 இடங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

     இந்த சோதனையின்போது, உத்தரபிரதேச மாநிலம் ஹாபுர் பகுதியில் 3 இளைஞர்கள் பிடிபட்டனர். அவர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

    அத்துடன், மீரட் அருகே ராதானா கிராமத்தில் ஒரு மதகுரு இல்லத்தில் நடந்த சோதனையில் ரகசிய ஆவணங்கள் சிக்கின. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
    உத்தர பிரதேசத்தில் ராட்டினத்தில் இருந்து செல்பி எடுக்க முயன்றபோது தவறி விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். #SelfieDeath #UPFair
    பாலியா:

    உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் சதார் பகுதியில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஏராளமான கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருப்பதால் விடுமுறை தினங்களில் பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், நேற்று கண்காட்சியில் ராட்சத ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு பெண் திடீரென ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    விசாரணையில் அந்தப் பெண் ராணி (வயது 20) என்பதும், செல்பி எடுக்கும்போது நிலைதடுமாறி ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்ததும் தெரியவந்தது. #SelfieDeath #UPFair
    உத்தரப்பிரதேச மாநிலத்தின் பைசாபாத் எனும் மாவாட்டத்துக்கு அயோத்தி என பெயர் மாற்றம் செய்வதாக முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #UP #YogiAdityanath #Ayodhya
    லக்னோ:

    உத்தரபிரதேச மாவட்டங்களில் பைசாபாத்தும் ஒன்று. இங்குதான் ராமபிரான் அவதரித்த அயோத்தி நகரம் உள்ளது. எனவே இந்த நகரத்தின் பெயரையே, அந்த மாவட்டத்துக்கும் சூட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை நேற்று அயோத்தியில் நடந்த தீபோத்சவ் நிகழ்ச்சியில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

    இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நமது கவுரவம், மரியாதை மற்றும் பெருமையின் சின்னம்தான் அயோத்தி. ராமபிரான் மூலம் அடையாளம் காணப்படும் இந்த அயோத்திக்கு யாரும் அநீதி இழைக்க முடியாது என்பதை உறுதியாக தெரிவிக்கவே நாங்கள் வந்திருக்கிறோம். உலகின் எந்த சக்தியாலும் அயோத்திக்கு அநீதி இழைக்க முடியாது’ என குறிப்பிட்டார்.



    இதைப்போல மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்த யோகி ஆதித்யநாத், ராம ராஜ்ஜியத்தின் அடிப்படையில் நாட்டில் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருவதாக பிரதமர் மோடியையும் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங் சூக், மாநில கவர்னர் ராம் நாயக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக உத்தரபிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அலகாபாத்தின் பெயரை, பிரயக்ராஜ் என மாற்றியது குறிப்பிடத்தக்கது. #UP #YogiAdityanath #Ayodhya
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில், சுமார் 10 கோடி மதிப்பிலான பட்டாசு மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. #UP
    லக்னோ:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை அமோகமான நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பொதுவாக தீபாவளி பண்டிகையை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சமீபத்தில் பட்டாசு கிடங்கு ஒன்றில் நடைபெற்ற விபத்தில் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.



    இந்நிலையில், உன்னாவோ பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் மூலம் கிடங்கில் அளவுக்கு அதிகமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும், முறையான ஆவணங்களை ஊழியர்கள் சமர்ப்பிக்காத நிலையில், அந்த கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது. #UP
    காவல் துணை ஆய்வாளருடனான வாக்குவாதத்தில் அவரை மிக கொடூரமாக தாக்கிய பாஜகவைச் சேர்ந்த கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர். #BJP #UP
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரான மனிஷ்,  ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த ஓட்டலுக்கு பெண் வழக்கறிஞருடன் வந்த காவல் துணை ஆய்வாளருக்கும், ஹோட்டலில் பணிபுரிபவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது.



    இதனால் அப்பகுதிக்கு வந்த பாஜக கவுன்சிலர் மனிஷ் போலீஸ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருதரப்பினரும் இடையே வாக்குவாதம் அதிகரிக்க, மனிஷ் காவல் துணை ஆய்வாளரை கடுமையாக தாக்க துவங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதனையடுத்து, பாஜக கவுன்சிலர் மனிஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். #BJP #UP
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழந்தனர். #Accident
    லக்னோ :

    உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி மாவட்டத்தில் உள்ள மதரிபூர் எனும் கிராமத்தில் தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இதில், 7 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர் மற்றும் 35 பேர் மோசமான நிலையில் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்த 35 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்துகுறித்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சம் வழங்கப்படும் எனவும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.  #Accident
    லஞ்சம் கொடுப்பதிலும், வாங்குவதிலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 52 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர். #TamilnaduCorruption
    புதுடெல்லி:

    இந்தியாவில் எந்த மாநிலத்தில் லஞ்சம், ஊழல் அதிகமாக உள்ளது என்று சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

    வடகிழக்கு மாநிலங்கள் சிக்கிம், காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர், மாநிலங்கள் தவிர 15 மாநிலங்களில் மட்டும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    இந்தியாவில் லஞ்சம் அதிகமாக வாங்கப்படும் உத்தரபிரதேச மாநிலத்தில் சொத்துப்பதிவு, வரித்துறை, போக்குவரத்து, மின்சாரத்துறை போன்றவைகளில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் 59 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

    பஞ்சாப் மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 56 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்த பிறகே தங்களுக்கு வேலைகள் முடித்துத் தரப்படுவதாக கூறியுள்ளனர். பஞ்சாப்பில் போலீசாருக்கு தான் அதிகம் லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.


    லஞ்சம் கொடுப்பதிலும், வாங்குவதிலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 52 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் சொத்துப்பதிவுக்கு தான் அதிகம் லஞ்சம் பெறப்படுவது தெரியவந்துள்ளது.

    போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது தேசிய அளவில் குறைந்து இருப்பது சர்வேயில் தெரியவந்துள்ளது. அதே சமயத்தில் சொத்துப்பதிவுக்காக லஞ்சம் வாங்குவது பலமடங்கு அதிகரித்து விட்டது.

    2017-ல் காவல்துறையினர் லஞ்சம் பெறுவது 30 சதவீதமாக இருந்தது. அது 25 சதவீதமாக குறைந்துவிட்டது. ஆனால் சொத்து பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் எண்ணிக்கை 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்ந்து இருப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.  #TamilnaduCorruption
    ×