என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரபிரதேசம்"

    • உடல் வெப்பநிலையைச் சரியாகப் பராமரிக்க உதவும் கருவியில் குழந்தை வைக்கப்பட்டது.
    • மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததில், குழந்தை தீ காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறது.

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தனியார் மருத்துவமனையில் பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று தீயில் கருகி உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கான்பூரில் உள்ள பக்கர்கஞ்சில் வசிக்கும் அருண் நிஷாத் மற்றும் அவரது மனைவி பிட்டு ஆகியோருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

    பிறந்த குழந்தையின் உடல் வெப்பநிலையைச் சரியாகப் பராமரிக்க உதவும் கருவியில் குழந்தை வைக்கப்பட்டது. அப்போது மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததில், அதிலிருந்த குழந்தை தீ காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறது.

    இந்த சம்பவத்தைப் பல மணி நேரம் கழித்தே பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளது மருத்துவமனை நிர்வாகம். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து இந்த சம்பவத்தை குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    • சேதன் குமார் என்பருக்கு பாக்கி (12), பிராச்சி (14), விஷிகா (16) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
    • மூன்று பெரும் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் கேமிங் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் ஆன்லைன் கேம் விளையாடக்கூடாது என பெற்றோர் கண்டித்ததால் 3 சகோதரிகள் 9 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காசியாபாத்தில் சேதன் குமார் என்பருக்கு பாக்கி (12), பிராச்சி (14), விஷிகா (16) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூன்று பெரும் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் கேமிங் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.

    இந்நிலையில், ஆன்லைன் கேமிங் விளையாடுவதை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனை மனா வருத்தம் அடைந்த 3 சகோதரிகளும் 9 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்.

    இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருநாள் சிறுவனின் அத்தை வீட்டிற்கு வந்து நகை அலமாரியை திறந்து பார்த்துள்ளார்.
    • அலமாரி காலியாக இருந்ததை தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்ததில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

    தங்கம் விலை தொடர்ந்து எகிறி வந்து, கடந்த 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக பதிவானது.

    அதன் தொடர்ச்சியாக மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என சொல்லப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக சரிந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், 14 வயது சிறுவன் ரூ.85 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி மோமோஸ் சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேசத்தில் மோமோஸ் மீது தீரா காதல் கொண்ட சிறுவனிடம் வீட்டில் உள்ள நகைகளை திருடி கொண்டுவந்து கொடுத்தால் மோமோஸ் வாங்கி தருவதாக மோமோஸ் கடைக்காரர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

    இதையடுத்து அந்த சிறுவன் மெல்ல மெல்ல தனது வீட்டில் உள்ள நகைகளை திருடி அவர்க்ளிடம் கொடுத்து மோமோஸ் சாப்பிட்டு வந்துள்ளான்.

    ஒருநாள் சிறுவனின் அத்தை வீட்டிற்கு வந்து நகை அலமாரியை திறந்து பார்த்துள்ளார். அப்போது அலமாரி காலியாக இருந்ததை தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்ததில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து சிறுவனின் தந்தை போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.

    • மேம்பாலம் மேலே ஏறி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க முயன்ற நபர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
    • இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இன்றைய இளைய தலைமுறையினர் சமூகவலைத்தளத்தில் லைக்குகளை அள்ளும் ஆசையில் சாகச வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதில் சில சமயம் உயிருக்கு ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

    அவ்வகையில் உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் மேலே ஏறி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க முயன்ற நபர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

    மேம்பாலத்தின் மேலே கான்க்ரீட் Slabs மீது ஏறி நடனமாடியபோது, Slabs சரிந்து முகமது ஃபைசான் (22) என்ற இளைஞர் தலை மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • 6 மாதங்களுக்கு முன்பு விபின் குமார் என்பவருக்கும் இஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது
    • இஷா சமைத்த முட்டை குழம்பு நன்றாக இல்லை என்று விபின் குறை சொல்லியுள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் தான் சமைத்த முட்டை குழம்பை `சுவையாக இல்லை' என்று கூறியதால், கணவனின் நாக்கை கடித்து மனைவி துண்டாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    6 மாதங்களுக்கு முன்பு விபின் குமார் என்பவருக்கும் இஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் அவ்வப்போது சண்டை வந்த நிலையில், இஷா சமைத்த முட்டை குழம்பு நன்றாக இல்லை என்று விபின் குறை சொல்லியுள்ளார்.

    இதனை ஆத்திரமடைந்த இஷா , கணவனின் நாக்கை கடித்து துண்டாக்கியுள்ளார். நாக்கு 2.5 செ.மீ அளவுக்கு துண்டிக்கப்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சை செய்தாலும் மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என மருத்துவர்கள் கைவிரித்தனர். இதனால் விபின் குமரன் பேசமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தை அடுத்து இஷாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக பயணிகள் புகார்
    • டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரெயிலில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பக்தர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளனர்.

    வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக டிக்கெட் எடுத்த பயணிகள் டிக்கெட் பரிசோதகருக்கு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    அதில், ஒருசிலர் மட்டும் அபராதத்தை செலுத்தியுள்ளனர்; மற்றவர்கள் ஜெய்கோ என முழக்கமிட்டவாறு அபராதம் செலுத்தாமல் தப்பி ஓடினர்.

    ரெயிலில் 400க்கும் மேற்பட்ட உ.பி. பக்தர்கள் வந்த நிலையில் சுமார் 100 பேரிடம் மட்டுமே டிக்கெட் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • டெல்லியில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    • பெண் டாக்டரின் காரில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

    புதுடெல்லி:

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

    இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லி அருகே பரிதாபாத்தில் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், லக்னோவை சேர்ந்த டாக்டர் ஷஹீனா ஷாஹித் என்ற பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

    விசாரணையில் ஷஹீனா பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெண்கள் பிரிவுக்கு ஆள்சேர்ப்பு மற்றும் தலைமை பொறுப்பை வகித்தவர் என தெரிய வந்தது.

    ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அசாரின் சகோதரி சாடியா அசாரின் தலைமையில் செயல்படும் பிரிவுக்கு ஷஹீனா தலைமை தாங்கியதும், பரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மருத்துவர் முஜம்மில் கணாய் என்பவருடன் ஷஹீனா நெருங்கிய தொடர்பு வைத்ததும் தெரியவந்தது.

    • நேற்று சரக்கு ரெயில் பின்புறத்தில் பயணிகள் ரெயில் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர்.
    • உத்தரபிரதேச மாநிலம் மிர்சாப்பூர் மாவட்டத்தில் மற்றொரு கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று சரக்கு ரெயில் பின்புறத்தில் பயணிகள் ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.

    அந்த கோர விபத்தின் தாக்கம் மறைவதற்குள் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் மிர்சாப்பூர் மாவட்டத்தில் மற்றொரு கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

    மிர்ஷாப்பூர் மாவட்டத்தில் உள்ள சனார் ஜங்ஷன் பகுதியில் இன்று காலை 9 மணிக்கு பயணிகள் ரெயில் ஒன்று 4-வது நடைமேடை பகுதியில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் 3-வது நடைமேடையை கடந்து சென்று கொண்டி ருந்தனர்.

    பயணிகளில் மற்றொரு பிரிவினர் தண்டவாளத்தை கடந்து அடுத்த பக்கம் செல்வதற்கு நடந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எதிர் திசையில் இருந்து மிக வேகமாக ஹவுரா செல்லும் நேதாஜி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    ரெயில் மிக அருகில் வந்த போதுதான் பயணிகள் கவனித்து அலறினார்கள். 4-வது நடைமேடைக்கும், 3-வது நடைமேடைக்கும் இடையில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். அதற்குள் நேதாஜி எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தனர். அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சனார் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லக்கூடிய ரெயில் ஆகும். இதனால் அந்த ரெயில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

    ரெயில் மோதிய வேகத்தில் 3 பயணிகளின் உடல்கள் கடுமையாக சிதறி போனது. பலியான 6 பயணிகளும் இன்று பவுணர்மி தினத்தை முன்னிட்டு வாரணாசியில் புனித நீராடி சிவனை வழிபடுவதற்காக சென்று கொண்டிருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    6 பேர் பலியானது குறித்து தகவல் அறிந்ததும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடும் அதிர்ச்சி தெரிவித்தார். பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள அவர் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.

    சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    • உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐ.ஐ.டி. கான்பூர் என்ற தொழிற் நுட்ப பல்கலைக் கழகம் உள்ளது.
    • 30 ஆண்டுகள் கடந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    கல்லூரி இறுதி ஆண்டு படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள், ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் கொடுத்தும், கட்டித் தழுவியும், ஆடிப்பாடியும், கண்ணீரோடும் பிரிந்து செல்வார்கள்.

    ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற் நுட்ப பல்கலைக் கழகமான ஐ.ஐ.டி. கான்பூரில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் வினோத நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

    ஐ.ஐ.டி. கான்பூரின் முன்னாள் மாணவரும் சிம்பிளிபை தொழில்நுட்ப நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியுமான பி.கே.பிர்லா அப்படி ஒரு திருமணம் தொடங்கிய சுவையான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

    1994-ம் ஆண்டு குளிர் காலத்தில் கல்லூரியின் விடுதி அறையில் நண்பர்களோடு தூக்கம் வராமல் கதைகள் பேசிக்கொண்டி ருந்தோம். அப்போது சில நண்பர்கள் திருமணத்தின் கதையை சொல்லிக் கொண்டிருந்தனர். கல்லூரி ஆண்டு இறுதியில் இதுபோன்று ஒரு திருமணத்தை நடத்தினால் என்ன என்று யோசனை வந்தது. நண்பரான நிர்மல் சிங் அரோரா அந்த திருமணத்தை ஏற்பாடு செய்தார்.

    அந்த திருமணத்திற்கு பெண்கள் முன்வராததால், மற்றொரு ஆண் நண்பர் பெண்வேடமிட்டு அதில் கலந்து கொண்டார். போலியான புரோகிதரையும் கூட்டி வந்து மணமக்களை குதிரையில் உட்காரவைத்து பெண்கள் விடுதி தோட்டத்தில் உள்ள பராத் ஹால் 1-ல் இருந்து ஹால் எண் 6 வரை அந்த ஊர்வலத்தை நடத்தினோம்.

    இது கல்லூரியில் பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து வந்த மாணவர்கள் இதை நடத்தினார்கள். 30 ஆண்டுகள் கடந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 2004-ம் அண்டு திருமணத்தில் பங்கேற்ற மாணவரான உத்கர்ஷ் தனது திருமண அனுப வத்தை பகிர்ந்து கொண்டார். அது ஒரு நல்ல மகிழ்ச்சியான அனுபவம். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஷாதி இப்போது பிரம்மாண்டமான பிரியாவிடை நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

    • பச்சிளம் குழந்தை கோபால் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
    • புதிதாகப் பிறந்த குழந்தையின் கை இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அக்டோபர் 5 ஆம் தேதி பிறந்த பச்சிளம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் கோபால் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

    அங்கு ஊசி போட்ட பிறகு குழந்தையின் கை வீங்கி, நீல நிறத்தில் மாறத் தொடங்கியது. இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் கைக்கு கட்டுப்போட்டு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.

    புதிதாகப் பிறந்த குழந்தையின் கை இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டு அழுகும் நிலையில் இருப்பதால், கையை துண்டிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் நர்சிங் ஹோம் மீது புகார் அளித்தனர். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக விசாரணைக் குழுவை அமைத்து அறிக்கை அளிக்குமாறு தலைமை மருத்துவ அதிகாரிக்கு (CMO) காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

    • உலக சாதனை புத்தகத்திலும் இந்திய உலக சாதனை புத்தகத்திலு இடம் பெற்றுள்ளது.
    • 20 நாட்கள் கடுமையாக உழைத்து 18 அடி உயரமுள்ள இந்த சிலையை உருவாக்கினர்.

    உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கைவினை கலைஞர்கள் புதுமையான ராமர் சிலை ஒன்றை உருவாக்கினர்.

    ஒரு லட்சம் மதிப்பிலான 1,5,10 நாணயங்களை கொண்டு 25 கைவினை கலைஞர்கள் 20 நாட்கள் கடுமையாக உழைத்து 18 அடி உயரமுள்ள இந்த சிலையை உருவாக்கினர்.

    இந்த ராமர் சிலை ஆசிய உலக சாதனை புத்தகத்திலும் இந்திய உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

    லக்னோவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் உத்தரப்பிரதேச துணை முதல் மந்திரி பிரஜெஸ் பதக் நேற்று திறந்து வைத்தார்.

    • 93-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
    • உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 93-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

    ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை அணிவகுப்பை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் பார்வையிட்டார். 

    ×