உத்தரபிரதேசத்தில் தவறான ஊசியால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்

பச்சிளம் குழந்தை கோபால் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.புதிதாகப் பிறந்த குழந்தையின் கை இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் தவறான ஊசியால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்
Published on

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அக்டோபர் 5 ஆம் தேதி பிறந்த பச்சிளம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் கோபால் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

அங்கு ஊசி போட்ட பிறகு குழந்தையின் கை வீங்கி, நீல நிறத்தில் மாறத் தொடங்கியது. இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் கைக்கு கட்டுப்போட்டு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.

புதிதாகப் பிறந்த குழந்தையின் கை இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டு அழுகும் நிலையில் இருப்பதால், கையை துண்டிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் நர்சிங் ஹோம் மீது புகார் அளித்தனர். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக விசாரணைக் குழுவை அமைத்து அறிக்கை அளிக்குமாறு தலைமை மருத்துவ அதிகாரிக்கு (CMO) காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com