என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் கேம்"

    • MPL பணத்தை வைத்து விளையாடும் கேம்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
    • வருவாய் இழப்பை சமாளிக்க MPL நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

    சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    இந்த சட்டத்தால் கிரிக்கெட் பெட்டிங் நிறுவனங்களான Dream 11, MPL (மொபைல் பிரீமியர் லீக்) ஆகியவை தங்கள் தளத்தில் நிஜ பணத்தை வைத்து விளையாடும் கேம்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    Dream 11 உடைய தாய் நிறுவனமான Dream sports மற்றும் MPL இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனே அமலுக்கு வரும் என MPL தனது LINKEDIN பதிவில் உறுதிப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், மொபைல் பிரீமியர் லீக் (MPL), இந்தியாவில் தனது 60% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

    பணம் கட்டி விளையாடும் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், வருவாய் இழப்பை சமாளிக்க பணிநீக்கம் செய்ய முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. 

    • ரோகித், பும்ரா, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் ட்ரீம்11 உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
    • விராட் கோலி MPL-ஐ விளம்பரப்படுத்தினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சரான ஆன்லைன் கேமிங் நிறுவனமான ட்ரீம் 11 இந்திய அணி ஸ்பான்சர்ஷிப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளது. மத்திய அரசு ஆன்லைன் கேம்களை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வந்துள்ளதால் ட்ரீம் 11 உடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக முறித்துள்ளது. இனி இதுபோன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என்று பிசிசிஐ உறுதிபடத் தெரிவித்துள்ளது.

    இதனால் துபாயில் தொடங்கும் ஆசியக் கோப்பை 2025 தொடருக்கு முன்னதாக, இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சரை பிசிசிஐ தேட வேண்டியுள்ளது. டொயோட்டா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இடம்பெற போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    2023-ல் ட்ரீம் 11 நிறுவனம் பிசிசிஐயுடன் ரூ.358 கோடி மதிப்பிலான மூன்று ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தது. இதன்படி, பிசிசிஐக்கு ஆண்டுக்கு ரூ.119 கோடி வருவாய் கிடைத்தது. இந்த ஒப்பந்தம் 2026 வரை நீடிக்கவிருந்தது. ஆனால் மத்திய அரசின் சட்டம் காரணமாக இப்போது ஒப்பந்ததை முறிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    ட்ரீம் 11 நிறுவனம் ஸ்பான்சர்ஷிப் பொறுப்பில் இருந்து விலகியதால், பிசிசிஐக்கு ஆண்டுக்கு ரூ.119 கோடி நஷ்டம் ஏற்படும். முதன்முறையாக பிசிசிஐ இப்படி ஒரு நஷ்டத்தை சந்திப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் புதிய ஸ்பான்சர் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்படுவதன் மூலம் பிசிசிஐ இந்த நஷ்டத்தை சரிகட்டி விடும் என பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

    ஆனால், கிரிக்கெட் வாரியம் மட்டும் பாதிக்கப்படவில்லை. இந்தியாவின் முன்னணி வீரர்கள் கூட பெரிய ஒப்புதல் ஒப்பந்தங்களை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

    அதன்படி ரோகித் சர்மா, பும்ரா, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், மற்றும் பாண்ட்யா சகோதரர்கள் ஆகியோர் ட்ரீம்11 உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், முகமது சிராஜ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் My11 சர்க்கிளை ஆதரித்தார்கள். விராட் கோலி MPL ஐ விளம்பரப்படுத்தினார். அதே நேரத்தில் தோனி WinZO ஐ ஆதரித்தார்.

    இதில் இடம் பெற்ற அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் வழங்கப்படுவதில்லை. கிரிக்பஸ் அறிக்கையின்படி, "கோலியின் ஒப்பந்தம் ஆண்டுக்கு சுமார் 10 முதல் 12 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. ரோகித் சர்மா மற்றும் தோனி 6 முதல் 7 கோடி ரூபாய்க்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தங்களால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆண்டுக்கு 150 முதல் 200 கோடி ரூபாய் வரை இழக்க நேரிடும்.

    • ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
    • வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது.

    சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.

    பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேமிங்கிற்கு தடை விதிக்கப்பட்டதால் Dream 11 மற்றும் MPL ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ட்ரீம் 11 நிறுவனம், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதால் DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம். வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.

    ஆசிய கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • 15 செயலிகளுக்கு தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    • இது தொடர்பாக செபி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 15 செயலிகளுக்கு தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஐபிஎல் சூதாட்டத்தை, பங்குச்சந்தை வர்த்தகம் (opinion trading) போன்று விளம்பரம் செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக 15 ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பிரோபோ (Probo), எம்.பி.எல் (MPL) மற்றும் ஸ்போர்ட்ஸ் பாஸி (SportsBaazi) போன்ற முக்கிய நிறுவனங்களும் அடங்கும்.

    இது தொடர்பாக ஏற்கனவே பங்குச்சந்தை ஒழுங்குபடுத்தல் அமைப்பான செபி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த கேமின் தாக்கங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க உள்ளதாக மத்திய மந்திரி கூறினார்.
    • ஆயுதங்களுடன் எதிரியை அழிக்க சண்டையிடும் வன்முறைகள் நிறைந்த ஆன்லைன் விளையாட்டு இது.

    புதுடெல்லி:

    தென் கொரியாவைச் சேர்ந்த ஆன்லைன் கேமிங் நிறுவனமான கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி கேம். இந்தியாவில் குறுகிய காலத்திலேயே பப்ஜி விளையாட்டு அதீத வரவேற்பை பெற்றது. எனினும், இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது 2020ம் ஆண்டு பல்வேறு சீன ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது.

    அதன்பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பிஜிஎம்ஐ (பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா) என்ற பெயரில் கிராப்டன் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதுவும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த ஆப்பை மத்திய அரசு தடை செய்தது. கிராப்டன் நிறுவனம் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சுமார் 10 மாதங்களாக இந்தியாவில் பிஜிஎம்ஐ விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பிஜிஎம்ஐ கேமை கிராப்டன் நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சர்வர் இருப்பிடங்கள் மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கு கேமிங் நிறுவனம் இணங்கிய பிறகு, மூன்று மாதத்திற்கு சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார். இந்த கேமுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு முன், அடுத்த 3 மாதங்களில் பயனருக்கு தீங்கு ஏதேனும் ஏற்படுகிறதா? பயனர்கள் அடிமையாகிறார்களா? என்பதுபோன்ற பிற விஷயங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

    ஒரே நேரத்தில் பல நூறு பேர் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டே இயர்போன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு, ஆன்லைனில் விளையாடும் விளையாட்டுதான் பப்ஜி. இது முழுக்க முழுக்க துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களுடன், தங்களை வீரர்களாக உருவகப்படுத்திக்கொண்டு தங்கள் எதிரியை அழிக்க தனியாகவோ நண்பர்களுடனோ சேர்ந்தோ சண்டையிடும் வன்முறைகள் நிறைந்த விளையாட்டு. துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளின் நுண்ணிய தகவல்களை தெரிந்துவைத்துக்கொண்டு விளையாட வேண்டும். பலர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. எனவே, ஆபத்தை விளைவிக்கும் இதுபோன்ற விளையாட்டு தேவையில்லை என்றே பலரும் கூறுகின்றனர்.

    • கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேமை ஊக்குவிப்பது போன்ற டீப் பேக் வீடியோ இணையத்தில் வைரல்
    • தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது கவலையாக இருக்கிறது என ஆதங்கம்

    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேமை ஊக்குவிப்பது போன்ற டீப் பேக் வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. அந்த டீப் பேக் வீடியோவில், ஒரு விளையாட்டு செயலி மூலம் சச்சின் டெண்டுல்கரின் மகள் பணம் சம்பாதித்ததாகவும், அந்த செயலியை அனைவரும் பயன்படுத்துமாறு அவர் கூறுவது போன்றும் எடிட் செய்யப்பட்டிருக்கும். இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்த சச்சின் டெண்டுல்கர், "இந்த வீடியோக்கள் போலியானவை. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது கவலையாக இருக்கிறது என்றார். இதுபோன்ற விளம்பரங்களை யாரெனும் பார்த்தால் உடனடியாக ரிப்போட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் டீப் ஃபேக் வீடியோக்களை தடுக்க, நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆன்லைனில் விளையாடுவோருக்கு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும்.
    • பணம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு இனி கட்டாயம்.

    சென்னை:

    பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டு களை ஒழுங்குபடுத்தும் வகையில் கடுமையான விதிகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது, இதன்மூலம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பங்கேற்கும் சிறார்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, 'ஆன்லைன் உண்மையான பண விளையாட்டு' என்பது, தகவல் தொழில்நுட்பம் விதிகள், 2021-ன்படி, 'வெற்றிகளை' சம்பாதிக்கும் எதிர்பார்ப்புடன் ஒருவர் பணம் அல்லது பொருளை டெபாசிட் செய்யும் விளையாட்டு என வரையறுக்கப்படுகிறது.

    ஆன்லைன் விளையாட்டில் ஒரு வீரரின் செயல் திறனின் அடிப்படையில் 'வெற்றிகள்' பணமாகவோ அல்லது பொருளாகவோ பரிசுகளை வழங்குகின்றன அல்லது விநியோகிக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் தெளிவுபடுத்தியுள்ளன.

    தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் தலைமையில், அதன் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், பதிவு செய்வதற்கும் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் இப்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு இப்போது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைன் பண விளையாட்டுகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி ஆன்லைனில் விளையாடுவோருக்கு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும்.

    நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைனில் பணம் கட்டி சிறார்களை விளையாட அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு இனி கட்டாயம் ஆகும்.

    இந்த திருத்தப்பட்ட விதிகள் தமிழ்நாட்டில் இப்போது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. பணம் சூதாட்ட இணையதளங்கள் மற்றும் உள்நுழைவு பக்கத்தில் தொடர்ச்சியான எச்சரிக்கை செய்தி காட்டப்பட வேண்டும் என்று அதில் விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளது.

    ×