என் மலர்

  நீங்கள் தேடியது "recovered"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கையால் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அம்மன் கோவிலில் திருட்டு போன ரூ.5 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்கப்பட்டது.
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஜமீன் பங்களாவில் மனோண்மணி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2017-ம் ஆண்டு மரகதலிங்கம், அம்மனுக்கு அணிவிக்கப்படும் வெள்ளி கிரீடம், தங்க தாலி, தங்க ஒட்டியாணம் போன்ற நகைகள் திருட்டு போனது. மரகதலிங்கம் மட்டும் ரூ.5 கோடி மதிப்பு உடையது.

  இது தொடர்பாக வேட்டவலம் போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தங்கள் வசம் எடுத்து விசாரித்தனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கடந்த 10 நாட்களாக தனிப்படை போலீசாருடன் இணைந்து, வேட்டவலம் கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினார்.

  இதற்கிடையில் நேற்று மாலை ஜமீன் பங்களா அருகே உள்ள குப்பை தொட்டியில், கோவிலில் திருட்டு போன மரகதலிங்கம் அனாதையாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக பொன் மாணிக்கவேல், வேட்டவலம் போலீசாருடன் சென்று குப்பை தொட்டியில் கிடந்த மரகதலிங்கத்தை மீட்டார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவையில் குடும்ப தகராறில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  பாகூர்:

  புதுவை நோனாங்குப்பம் புதுக்காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது28), கட்டிட தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கம் உள்ள லோகநாதன் நேற்று மதுகுடிப்பதற்காக மனைவி கவிநிதியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் கவிநிதி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

  இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய லோகநாதன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அங்குள்ள சுண்ணாம்பாற்று பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் ஆற்றில் இறங்கினார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தீயணைப்பு படையினரை வரவழைத்து லோகநாதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பலன் இல்லை. மேலும் இருள் சூழந்ததால் மீட்பு நடவடிக்கையை கைவிட்டனர்.

  இந்த நிலையில் இன்று காலை மீன்வலையில் சிக்கிய நிலையில் லோகநாதனின் உடல் அதே இடத்தில் மிதந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் உதவியுடன் போலீசார் லோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில், சுமார் 10 கோடி மதிப்பிலான பட்டாசு மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. #UP
  லக்னோ:

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை அமோகமான நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பொதுவாக தீபாவளி பண்டிகையை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சமீபத்தில் பட்டாசு கிடங்கு ஒன்றில் நடைபெற்ற விபத்தில் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.  இந்நிலையில், உன்னாவோ பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் மூலம் கிடங்கில் அளவுக்கு அதிகமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  மேலும், முறையான ஆவணங்களை ஊழியர்கள் சமர்ப்பிக்காத நிலையில், அந்த கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது. #UP
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூடலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
  கூடலூர்:

  நீலகிரி மாவட்ட பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிவாசி மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆதிவாசி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெறவும் கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கூடலூர் தாலுகா பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு கோழிப்பண்ணை வைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் வருவாய் துறையினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

  இந்த நிலையில் கூடலூர் அருகே செருமுள்ளி புழம்பட்டி பகுதியில் சுமார் 2 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது வருவாய் துறையினருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வருவாய் துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டங்கள் அமைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது.

  இதனால் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தார் மகேந்திரன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மண்டல துணை தாசில்தார் சித்தராஜ், வருவாய் ஆய்வாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் ஸ்வேதா உள்ளிட்ட வருவாய் துறையினர் நேற்று செருமுள்ளி புழம்பட்டியில் அரசு நிலம் 1 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்காக அப்பகுதியில் பயிரிட்டு இருந்த தேயிலை செடிகளை வெட்டினர். பின்னர் மீட்கப்பட்ட 1 ஏக்கர் அரசு நிலத்தை பழங்குடியினர் நலத்துறை வசம் ஒப்படைத்தனர்.

  இது குறித்து வருவாய் துறையினர் கூறும்போது, ஆதிவாசி மக்களுக்கு கோழிப்பண்ணை வைக்க அரசு நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில் செருமுள்ளி புழம்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் 1 ஏக்கர் மட்டும் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது, என்றனர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்த பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. #MaharashtraAccident
  மும்பை:

  மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழக ஊழியர்கள் சத்தாரா என்ற இடத்துக்கு சுற்றுலா செல்வதற்காக நேற்றுமுன்தினம் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ் ராய்காட் மாவட்டம் போலட்பூர் மலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள 500 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த கோர விபத்தில் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் டிரைவர் என 33 பேர் உடல் சிதறி பலியானார்கள். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பல்கலைக்கழக ஊழியர் பிரகாஷ்சாவந்த் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

  விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பஸ் விழுந்து நொறுங்கிய இடம் செடி, கொடிகள் அடர்ந்த பகுதி என்பதால் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. முதல் கட்டமாக 14 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டு இருந்தன. இந்த உடல்களை மீட்பதற்கு மட்டுமே 6 மணி நேரம் ஆனது.

  சவாலாக இருந்த மீட்பு பணி நேற்றும் தொடர்ந்து நடந்தது. நேற்று வரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மீட்கப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.  #MaharashtraAccident #Tamilnews 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எஸ்.வாழவந்தி அருகே 75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பசுமாடு ஒன்று தவறி விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அந்த பசுமாட்டை மீட்டனர்.
  மோகனூர்:

  நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டியைச் சேர்ந்தவர் மலையாளன் (வயது 45). விவசாயி. இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த பசு மாட்டை நேற்று காலை 10.30 மணியளவில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

  அப்போது அவரது வீட்டின் அருகே இருந்த 75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக பசுமாடு கால்தவறி விழுந்து விட்டது. கிணற்றுக்குள் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. பசுமாடு விழுந்ததை அறிந்த மலையாளன் சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்,பக்கத்தினரும், எஸ்.வாழவந்தி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்புச்செழியனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை மீட்பு குறித்து ஆலோசித்தனர்.

  பின்னர் இது குறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நிலைய அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை கயிற்றால் கட்டினார்கள். பின்னர் பெரிய ஏணியை கயிற்றுடன் கிணற்றுக்குள் இறங்கினார்கள். அந்த ஏணியின் உதவியுடன் பசுமாட்டை கிணற்றுக்குள் இருந்து வெளியே கயிறு மூலம் இழுத்தனர்.

  சுமார் அரை மணி நேரம் முயற்சிக்கு பிறகு பசுமாட்டை ஏணி உதவியுடன் வெளியே மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டின் உடலில் லேசான சிராய்ப்பு காயங்கள் இருந்தன. அந்த காயத்துக்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை பாராட்டினார்கள். 
  ×