என் மலர்
நீங்கள் தேடியது "Tea Estate"
- பெண்கள் ஞாயிறு என்ற நிகழச்சியை மாஞ்சோலை சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கொண்டாடினர்.
- தொடர்ந்து 4 தேயிலை தோட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் பாடல், நாடகம், நடனம் உள்ளிட்டவற்றை செய்து அசத்தினர்.
கல்லிடைக்குறிச்சி:
மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்பட்ட மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட குடும்பத்தினர் உள்ளனர். மேலும் இப்பகுதிகளில் உள்ள 4 ஆலயங்களும் இணைந்து பெண்கள் ஞாயிறு என்ற நிகழச்சியை மாஞ்சோலை சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கொண்டாடினர். நிகழ்ச்சியில் பெண்கள் ஐக்கிய சங்க தலைவி ஜாய் ஜெமிலா பர்னபாஸ் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 4 தேயிலை தோட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் கர்த்தரின் பாடல், நாடகம், நடனம் உள்ளிட்ட வற்றை செய்து அசத்தினர். குறிப்பாக சிறுவர்கள் முதல் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கர்த்தரின் வரலாறு மற்றும் போதனைகளை பாடினர். தொடர்ந்து பெண்களுக்கான கயிறு இழுத்தல், கம்பு சுற்றுதல், வாயில் எலுமிச்சை பழத்தை வைத்து கொண்டு ஓடுதல் என ஏராளமான விளையாட்டுகளும் அரங்கேறியது. நிகழ்ச்சி யில் 4 தேயிலை தோட்டங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்ட பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிவாசி மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆதிவாசி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெறவும் கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கூடலூர் தாலுகா பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு கோழிப்பண்ணை வைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் வருவாய் துறையினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கூடலூர் அருகே செருமுள்ளி புழம்பட்டி பகுதியில் சுமார் 2 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது வருவாய் துறையினருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வருவாய் துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டங்கள் அமைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தார் மகேந்திரன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மண்டல துணை தாசில்தார் சித்தராஜ், வருவாய் ஆய்வாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் ஸ்வேதா உள்ளிட்ட வருவாய் துறையினர் நேற்று செருமுள்ளி புழம்பட்டியில் அரசு நிலம் 1 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்காக அப்பகுதியில் பயிரிட்டு இருந்த தேயிலை செடிகளை வெட்டினர். பின்னர் மீட்கப்பட்ட 1 ஏக்கர் அரசு நிலத்தை பழங்குடியினர் நலத்துறை வசம் ஒப்படைத்தனர்.
இது குறித்து வருவாய் துறையினர் கூறும்போது, ஆதிவாசி மக்களுக்கு கோழிப்பண்ணை வைக்க அரசு நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில் செருமுள்ளி புழம்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் 1 ஏக்கர் மட்டும் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது, என்றனர்.