search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UP"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர்.
    • நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    90 வயது முதியவருக்கு ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 1981-ம் ஆண்டு பத்து பேரை கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதுதவிர குற்றவாளிக்கு ரூ. 55 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. 42 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கொலை சம்பவம், நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வன்முறை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பத்து பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 307 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணை முதற்கட்டமாக மெயின்பூரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிறகு ஃபிரோசாபாத் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஃபிரோசாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    பத்து பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில், சிறை தண்டனை மேலும் 13 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தது உத்தர பிரதேச அரசு
    • உயிரிழந்த 6 பேரில் 3 பேர் குழந்தைகள் என காவல்துறை தகவல்

     ஃபிரோசாபாத்:

    உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரில் வீட்டு உபயோகத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் பொருட்களை விற்கும் கடை செயல்பட்டு வந்துள்ளது. கடைக்கு மேலே உள்ள முதல் தளத்தில் உரிமையாளரின் குடும்பத்தினர் வசித்து வந்தனர். நேற்று இந்த கடையில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.

    இந்த தீ முதல் தளத்திற்கு வேகமாக பரவியது. ஆக்ரா, மெயின்புரி, எட்டா மற்றும் ஃபிரோசாபாத் ஆகிய இடங்களில் இருந்து 18 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மேலும் 12 காவல் நிலையங்களைச் சேர்ந்த பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரண்டரை மணி நேரம் இந்த பணி நீடித்தது.

    இந்த தீ விபத்தில் கடை உரிமையாளரின் வீடு எரிந்து நாசமானது. தீயில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிந்ததாக மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் திவாரி தெரிவித்துள்ளார். தீக் காயங்களுடன் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி என்பதால், மீட்பு பணியில் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்ததாக ஆஷிஷ் திவாரி கூறியுள்ளார். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    • அதிக பயணிகள் ஏற்றி வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை.
    • ஆட்டோவை பறிமுதல் செய்ததுடன், உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.

    பதேபூர்:

    உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் பிந்த்கி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தினர். அதில் வழக்கத்திற்கு மாறாக அதிக பயணிகள் இருப்பதை பார்த்த போலீசார் அவர்களை வெளியே வருமாறு கூறினர். 

    #WATCH | Uttar Pradesh | Police seized an auto and imposed a fine of Rs 11,500 after 27 people were found traveling in it in the Bindki PS area of Fatehpur district, yesterday

    அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஆட்டோவில் இருந்து 4 பெண்கள், 16 குழந்தைகள் என மொத்தம் 27 பேர் இருந்தனர். அவர்களை எச்சரிக்கை செய்த அனுப்பிய போலீசார், உடனடியாக அந்த ஆட்டோவை பறிமுதல் செய்ததுடன், அதன் உரிமையாளருக்கு 11,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது. 

    • விபத்து குறித்து நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்த உத்தர பிரதேச அரசு உத்தரவு.
    • தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஹாபூர்:

    உத்தர பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் திடீரென வெடித்ததால் அந்த பகுதி முழுவதும் தீப்பிடித்தது. உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு பணியில் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியே கரும்புகையாக காட்சி அளித்தது.

    இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து அறிந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், விபத்து  குறித்து நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் யோகி ஆதித்யநாத் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

    இதனிடையே, ஹாபூர் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஹாபூர் ரசாயன தொழிற்சாலை விபத்து நெஞ்சை பதற வைக்கிறது, இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்றும் பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், கணவர் உள்ளிட்ட குடும்பதினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி ஆண் குழந்தையை பெற்றுத் தராததால் அவரை அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    அந்த வீடியோவில் பெண் கெஞ்சுகிறார். இருப்பினும் கணவரும், அவரது குடும்பத்தினரும் பெண்ணை உதைத்து தள்ளுகின்றனர். அவரை சராமரியாக குத்துகின்றனர். அந்த பெண் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியும் அவர்கள் விடுவதாக இல்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து அந்த பெண் கொடுத்த போலீசாரிடம் கொடுத்த புகாரில் கூறியுள்ளதாவது. 

    என் கணவரும், அவரது குடும்பத்தினரும் ஆண் குழந்தை பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். ஆனால் எங்களுக்கு 2 பெண் குழந்தைகள்தான் பிறந்தது. இதனால் அவர்கள் என்னை அடித்து துன்புறுத்தினர். மன ரீதியாகவும் தொந்தரவு கொடுத்தனர்.

    நான் கூலித்தொழிலாளியாக பணியாற்றுகிறேன். ஆனாலும் பலமுறை என்னை பட்டினி போட்டுள்ளனர்.

    இவ்வாறு அந்த பெண் கூறினார்.

    தற்போது படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில், கணவர் உள்ளிட்ட குடும்பதினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    எருமையை தொலைத்ததாக கூறியவர் புகார் அளித்து உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கும் கடிதம் எழுதினார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள அகமதுகர் கிராமத்தில் வசிப்பவர் சந்திரபால் காஷ்யாப். இவரது எருமைகளில் ஈன்ற கன்றுக்குட்டி ஒன்று, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி காணாமல் போனது. இதையடுத்து அவர் பல இடங்களில்  தனது எருமைக்கன்றை தேடி அலைந்துள்ளார். இறுதியொல் அவர் அவரது கிராமத்திற்கு அருகே இருந்த சஹரான்பூரின் பீன்பூர் என்ற கிராமத்தில் சத்வீர் என்பவரிடம் ஒரு எருமைக்கன்று இருப்பதை கண்டறிந்தார்.

    அந்த எருமைக்கன்று தன்னுடையது என்று சந்திரபால் உரிமைக்கொண்டாடியுள்ளார். ஆனால் சத்வீர் எருமை கன்றை தருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

    இது குறித்து சந்திரபால் பீன்பூர் கிராமப் பஞ்சாயத்து, அப்பகுதி காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் செய்துள்ளார். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சந்திரபால், ஷாம்லி மாவட்ட எஸ்.பி. சுக்ரிதி மஹாதேவிடம் எருமையை மீட்டுத்தரக்கோரி புகார் அளித்தார். மேலும் தான் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு அனுப்பிய புகாரின் நகலையும் அளித்துள்ளார். 


    இதையடுத்து, எஸ்பி சுக்ரிதி, டி.என்.ஏ. சோதனை செய்து உண்மையை கண்டறியுமாறு ஷாம்லி மாவட்ட அரசு கால்நடை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பீன்பூர் வந்த கால்நடை மருத்துவர்கள் டி.என்.ஏ. சோதனைக்காக சாம்பிளை எருமைக்கன்றிடம் எடுத்துச் சென்றுள்ளனர். 

    இதை சந்திரபாலிடம் உள்ள தாய் எருமையின் டிஎன்ஏவுடன் பொருத்திப் பார்த்து உண்மை அறியப்பட உள்ளது.
    மதுராவில் தொழில்துறையை புதுப்பிக்கும் வகையில் வணிகா்கள் பால் தொழிலை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் அயோத்தி, மதுரா கோயில்களை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதித்து அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயிலின் கருவறைக்கு அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று அடிக்கல் நாட்டினார்.  அதை தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:

    அயோத்தி ராமர் கோவில் மற்றும் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியை சுற்றி உள்ள பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளின் உரிமங்களும் ரத்து செய்யப்படுகின்றன. 

    அதேபோல மதுரா கோவிலை சுற்றி செயல்பட்டு வந்த 37 மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு பாலை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்ற மதுராவில் தொழில்துறையை புதுப்பிக்கும் வகையில் வணிகா்கள் பால் தொழிலை செய்யலாம்.

    இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
    உத்தரப்பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த டிரக் மீது கார் மோதி இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
    லக்னோ: 

    உத்தரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷர் - மீரட் நெடுஞ்சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர்  உத்தரகண்டில் உள்ள கேதர்நாத் சன்னிதானத்திற்கு  காரில் சென்று கொண்டிருந்தனர். 

    இந்நிலையில், இன்று காலை புலந்த்ஷரில் உள்ள குலாவதி பகுதியில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார், அப்பகுதியில் நின்றுக் கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், படுகாயம் அடைந்த மூன்று பேர் மீரடில் உள்ள மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், விபத்தில் பலியானோரின்  அடையாளங்கள் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள், ஹர்திக் ( வயது 6 ), வன்ஷ் (வயது 5), ஷாலு ( வயது 21 ), ஹிமான்சூ ( வயது 25) மற்றும் பரஸ் ( வயது 22 ) ஆவர்.

    உத்தரப்பிரதேச முதல் - மந்திரி யோகி ஆதித்யநாத் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு தகுந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    உத்தரப் பிரதேசத்திலுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் எம்பி ரஷித், பிரமோத் திவாரி, ராஜேஷ் மிஸ்ரா உள்ளிட்டோருடன் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார்.
    லக்னோ:

    உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இதையடுத்து அந்தந்த மாநிலத் தலைவர்களை பதவி விலகுமாறு அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தினார். 

    இதனால், உத்தரப் பிரதேச காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவி காலியாகவுள்ளது.

    இந்நிலையில், உத்தரப் பிரதேசத்திலுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் எம்பி ரஷித், பிரமோத் திவாரி, ராஜேஷ் மிஸ்ரா உள்ளிட்டோருடன் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பை தொடர்ந்து கட்சியின் புதிய மாநிலத் தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பேச்சு வார்த்தை  குறித்து ரஷித் கூறுகையில், ‘உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படவுள்ளது. எனினும், இது உள்கட்சி கூட்டம் என்பதால் இதுபற்றிய தகவல்களை வெளியிட முடியாது’ என கூறினார்.
    உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவை வீழ்த்துவதற்காக இணைந்த மெகா கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
    லக்னோ:

    நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் 80 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இதில், ஆரம்பகட்ட முன்னிலை நிலவரங்களின்படி, பாஜக 48 இடங்களில் முன்னிலை வகித்தது. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி பின்தங்கியது. மெகா கூட்டணி 14 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.

    நேரம் செல்லச் செல்ல பாஜக முன்னிலை பெற்ற தொகுதிகள் அதிகரித்தன. மதிய நிலவரப்படி 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றிருந்தது. 19 தொகுதிகளில் மெகா கூட்டணி முன்னிலை பெற்றிருந்தது.



    வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 55 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி பின்னடவை சந்தித்துள்ளார். அமேதியில் ஸ்மிரிதி இரானி முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் வாக்கு வித்தியாசம் குறைந்த அளவில் இருந்ததால், கடும் போட்டி நிலவுகிறது.

    ரேபரேலி தொகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதேபோல் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் (லக்னோ), மேனகா காந்தி (சுல்தான்பூர்), சந்தோஷ் காங்வார் (பரேலி) ஆகியோரும் முன்னிலை பெற்றிருந்தனர். சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் (மெயின்புரி), அவரது மகன் அகிலேஷ் யாதவ் (ஆசம்கர்), அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் (கன்னாஜ்) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

    உத்தர பிரதேசத்தில் 2014 பொதுத்தேர்தலில் பாஜக 71 தொகுதிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 
    உத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனைக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    முசாபர்நகர்:

    உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம், கேதி கெம்ரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் என்ற சோனு (வயது 31). இவரது மனைவி ஷிவானி. இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரிஷ் காணாமல் போனார். இதுபற்றி அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரிஷின் மைத்துனர் சிவம் மற்றும் உறவினர் மோகித் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். ஹரிஷின் மனைவி ஷிவானியின் பெயரும் புகாரில் சேர்க்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே ஹரிஷின் உடல் கடந்த 15ம் தேதி சாக்கடையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது மனைவி ஷிவானியிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, தனது கள்ளக்காதலன் சிபுவுடன் சேர்ந்து கணவனை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து ஷிவானி, அவரது கள்ளக்காதலன் சிபு, கொலைக்கு உதவியாக இருந்த ஹிமன்சு, லக்மிர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சிவம் மற்றும் மோகித் ஆகியோருக்கு இந்த கொலையில் எந்த தொடர்பும் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    உத்தரபிரதேசம் மாநிலத்தில் நேற்றிரவு 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருந்து, அங்கு வசிக்கும் மக்களை நாய் ஒன்று உயிரை கொடுத்து காப்பாற்றியுள்ளது. #DogSavesLife
    பாந்தா:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் பாந்தா பகுதியில் 4 மாடி கட்டிடம் உள்ளது. இந்த  கட்டிடத்தில் நேற்றிரவு முதல் தளத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அந்த கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டின் வளர்ப்பு பிராணியாக இருந்த நாய் மோப்பம் பிடித்தது.

    உடனடியாக குரைக்க ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து ஒரே இடத்தை பார்த்துக்
    குரைத்துக் கொண்டு இருக்கவே, அந்த கட்டிடத்தில் வசிக்கும் அனைவரும் வெளியே வந்து பார்த்துள்ளனர்.  அப்போது அதே காலனியில் உள்ள  எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் ஷோரூமில்  மின்சாரம் வழங்கும் வயர்களில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.



    தீ வேகமாக பரவவே, உடனடியாக அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்த சிலிண்டரும் வெடித்தது. இந்த கோர சம்பவத்தில் இருந்து மக்களை சத்தம் எழுப்பி காப்பாற்றிய அந்த நாய், தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

    இது குறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் தீயணைப்பு துறையினருடன் விரைந்து, தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர்.  இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கில் பொருட்கள் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #DogSavesLife

     
    ×