என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 118693"

    உத்தரப்பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த டிரக் மீது கார் மோதி இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
    லக்னோ: 

    உத்தரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷர் - மீரட் நெடுஞ்சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர்  உத்தரகண்டில் உள்ள கேதர்நாத் சன்னிதானத்திற்கு  காரில் சென்று கொண்டிருந்தனர். 

    இந்நிலையில், இன்று காலை புலந்த்ஷரில் உள்ள குலாவதி பகுதியில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார், அப்பகுதியில் நின்றுக் கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், படுகாயம் அடைந்த மூன்று பேர் மீரடில் உள்ள மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், விபத்தில் பலியானோரின்  அடையாளங்கள் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள், ஹர்திக் ( வயது 6 ), வன்ஷ் (வயது 5), ஷாலு ( வயது 21 ), ஹிமான்சூ ( வயது 25) மற்றும் பரஸ் ( வயது 22 ) ஆவர்.

    உத்தரப்பிரதேச முதல் - மந்திரி யோகி ஆதித்யநாத் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு தகுந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    மதுராவில் தொழில்துறையை புதுப்பிக்கும் வகையில் வணிகா்கள் பால் தொழிலை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் அயோத்தி, மதுரா கோயில்களை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதித்து அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயிலின் கருவறைக்கு அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று அடிக்கல் நாட்டினார்.  அதை தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:

    அயோத்தி ராமர் கோவில் மற்றும் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியை சுற்றி உள்ள பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளின் உரிமங்களும் ரத்து செய்யப்படுகின்றன. 

    அதேபோல மதுரா கோவிலை சுற்றி செயல்பட்டு வந்த 37 மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு பாலை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்ற மதுராவில் தொழில்துறையை புதுப்பிக்கும் வகையில் வணிகா்கள் பால் தொழிலை செய்யலாம்.

    இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
    உத்தர பிரதேசத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற ஹோலி பண்டிகை விழாவின்போது மேடை சரிந்ததில் விவசாய சங்கத் தலைவர் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். #StageCollapsed #HoliMilan
    சம்பால்:

    உத்தர பிரதேச மாநிலம் சம்பால் நகரில் பாஜக சார்பில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. முக்கிய நிர்வாகிகள் மேடையில் தோன்றி உரையாற்றினர்.



    நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில், மேலும் சிலர் மேடையில் ஏறியதால் இட நெருக்கடி ஏற்பட்டது. அப்போது பாரம் தாங்காமல் திடீரென மேடை சரிந்து விழுந்தது. மேடையில் நின்றிருந்த அனைவரும் விழுந்தனர். இதில் பாஜக விவசாய சங்கத் தலைவர் அவ்தேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். #StageCollapsed #HoliMilan
    உத்தர பிரதேசத்தில் குற்றவாளியை பிடிக்கச் சென்றபோது நடந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்தார். #UPEncounter #Constablekilled
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா நகரில் குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்ட ஷிவாவ்தார் என்பவரை பிடிப்பதற்காக போலீசார் நேற்று இரவு சென்றனர். ஷிவாவ்தார் இருந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார்,  அவரை சரண் அடையும்படி கூறினர். ஆனால்,  ஷிவாவ்தார், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளான். இதனையடுத்து போலீசாரும் பதில்  தாக்குதல் நடத்தினர்.

    சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையில் போலீஸ் தரப்பில் கான்ஸ்டபிள் ஹர்ஷ் சவுத்ரி (26)உயிரிழந்தார். போலீசாரின் பதில் தாக்குதலில் ஷிவாவ்தார் பலத்த காயம் அடைந்தான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன், சிறிது நேரத்தில் உயிரிழந்தான்.

    இந்த என்கவுண்டரில் உயிரிழந்த கான்ஸ்டபிள் குடும்பத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த கான்ஸ்டபிளின் மனைவிக்கு ரூ.40 லட்சம் மற்றும் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

    உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றதில் இருந்து இதுவரை 3000க்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் நடந்துள்ளன. இதில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 78 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 7 போலீசார் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #UPEncounter  #Constablekilled
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என ராகுல் காந்தி இன்று அறிவித்துள்ளார். #Congress #RahulGandhi #Parliamentelection
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனது பாராளுமன்ற தொகுதியான அமேதியில் இருநாள் சுற்றுப்பயணம் செய்யும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் லக்னோ நகரை வந்தடைந்தார்.

    விமான நிலையத்தில் உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.



    பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, ‘அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில தலைவராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. சிறந்த உழைப்பாளியான அவருடன் இணைந்து பணியாற்றும் நாளை நான் எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

    உத்தரப்பிரதேசம் (மேற்கு) மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜோதிராதித்யா சிந்தியாவும் சிறப்பாக செயல்பட கூடியவர் என புகழாரம் சூட்டினார்.

    ‘வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு இருக்கும் ஒரே பொதுநோக்கம் மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அக்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் நோக்கமும் இதுதான். இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமளிக்காதது தொடர்பாக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர்களுக்கு எந்த வகையில் எங்கள் கட்சியின் உதவி தேவைப்பட்டாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.

    ஆனால், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நான் முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது என்பதால் எங்கள் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் இங்குள்ள 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்’ எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார். #Congress #RahulGandhi  #Parliamentelection 
    உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் பெண்ணை குரங்கு ஒன்று கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Monkey #Women #UP
    ஆக்ரா:

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மொகல்லா கச்சேரா பகுதியில் பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை குரங்கு கடித்து கொன்றது. தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி சென்று கொன்றது.

    இந்த நிலையில் ஆக்ராவில் பெண்ணை குரங்கு ஒன்று கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆக்ராவில் உள்ள காகிரனுல் பகுதியை சேர்ந்தவர் பூரான்தேவி(59). இவர் வயல் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குரங்குகள் கூட்டம் அவரை சரமாரியாக தாக்கி கடித்தது. இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவரை தொடர்ந்து குரங்குகள் கடித்து குதறின.

    படுகாயம் அடைந்த அவரால் எழுந்து ஓட முடியவில்லை. இதைபார்த்து அப்பகுதி பொதுமக்கள், குரங்குகள் கூட்டத்தை விரட்டியடித்துவிட்டு பூரான் தேவியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஆக்ராவில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. அவைகள் சாலையில் நடந்து செல்பவர்களை திடீரென்று பாய்ந்து தாக்குகின்றன. தற்போது உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களிடம் பீதி நிலவுகிறது. #Monkey #Women #UP
    உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா நகரில் தாய்ப்பால் அருந்திக் கொண்டிருந்த 12 நாள் குழந்தை குரங்கிடம் சிக்கி கடிபட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Monkey #Kills #Baby
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா நகரில் உள்ள மொஹல்லா கச்சேரா பகுதியை சேர்ந்த ஒரு பெண் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் அமர்ந்தவாறு பிறந்து பன்னிரெண்டே நாளான தனது ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு பாய்ந்தோடி வந்த ஒரு குரங்கு அந்தப் பெண்ணின் அரவணைப்பில் இருந்த குழந்தையை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறித்துச் சென்றது. இதனால் பதறிப்போன அந்த தாயின் கூக்குரலை கேட்ட குடும்பத்தினர் வெளியே ஓடிவந்து, குரங்கை விரட்டிச் சென்றனர்.

    அவர்களிடம் பிடிபடாமல் மரங்களின்மீதும் வீடுகளின்மீதும் குழந்தையுடன் தாவியேறிச் சென்ற குரங்கு மறைந்து விட்டது.



    இந்நிலையில், அருகாமையில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் அந்த குழந்தை கடிபட்ட காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்ட உறவினர்கள் அதை மீட்டெடுத்து அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால், அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்ததையடுத்து அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.  #Monkey #Kills #Baby
    உத்தரபிரதேச மாநிலத்தில் குஷிநகர் மாவட்டத்தில் 5 பேர் பட்டினியால் பலியாகி உள்ள நிலையில் மக்கள் உணவு கிடைக்காமல் எலிக்கறியை உணவாக சாப்பிடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. #RatEating #UP #yogiAdityanath
    குஷிநகர்:

    உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது

    கடந்த மாதம் அம்மாநில அரசு தேசிய ஊட்டச்சத்து மாதத்தை கொண்டாடிய நிலையில் 5 பேர் பட்டினியால் பலியான பரிதாப தகவல் வெளியாகி உள்ளது.

    அங்குள்ள குஷிநகர் மாவட்டத்தில் ‘முஷாகர்ஸ்’ எனப்படும் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் தான் வறுமை காரணமாக கடந்த மாதம் பட்டினியால் இறந்து உள்ளனர். சோன்வா தேவி என்பவரின் இரண்டு மகன்கள் பட்டினியால் பலியாகி உள்ளனர். சகோதரர்களான அவர்களுக்கு 22 மற்றும் 16 வயது ஆகிறது.

    இதேபோல மேலும் 3 பேரும் பட்டினியால் இறந்துள்ளனர்.

    மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உணவு கிடைக்காமல் தவிக்கிறார்கள். இதன் காரணமாக எலிக்கறியை உணவாக சாப்பிடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் ‘முஷாகர்ஸ்’ இன மக்கள் 2.6 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இதில் 97 சதவீதம் பேர் கிராமங்களில் வாழ்கிறார்கள்

    இதற்கிடையே பட்டினி சாவை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-



    பசியால் 2 சகோதரர்கள் சாகவில்லை. அவர்கள் காச நோயால் இறந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாதது குறித்து விசாரணை நடத்தப்படும்

    முஷாகர்ஸ் இனமக்களுக்கு எங்களது அரசு வேலை மற்றும் வீடுகள் வழங்கி உள்ளது. அந்த குடும்பத்தினருக்கு ரேசன் கார்டும் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார். #RatEating #UP #yogiAdityanath
    உத்தர பிரதேசத்தில் மீண்டும் இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கி உள்ள நிலையில், மழை தொடர்பான விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். #UPRain #ThunderstormLashedUP
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெருமளவில் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த தொடர் மழை ஓய்ந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

    இந்நிலையில், உ.பி.யின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கோண்டா, பைசாபாத், சீதாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றும் வீசியதால், சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.

    இந்த புயல் மழை தொடர்பான விபத்துக்களில்  கோண்டாவில் 3 பேரும், பைசாபாத்தில் ஒருவரும், சீதாப்பூரில் 6 பேரும் என நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே ராஜஸ்தான், பஞ்சாப், அரியா, சண்டிகர் மற்றும் டெல்லியிலும் புழுதியுடன் கூடிய காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. #UPRain #ThunderstormLashedUP
    உத்தர பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் டிராக்டர் டிராலி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். #UPaccident
    சம்பால்:

    உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் இருந்து இன்று காலை ஏராளமான பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் அலிகர் நோக்கி சென்றுகொண்டிருநத்து. இந்த டிராக்டர் சம்பால் மாவட்டம் ராஜ்புரா பகுதியில் உள்ள அனுப்ஷாகர் சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    பின்னர், சாலையோர பள்ளத்தில் டிராக்டர் டிராலி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் கார்பெட்டுகள் விற்பனை செய்வதற்காக அலிகார்  நோக்கி சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. #UPaccident
    ×