என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரு ஆட்டோவில்  27 பேர் பயணம்- போலீசார் அதிர்ச்சி: வைரலான வீடியோ
    X

    ஆட்டோவில் 27 பேர் பயணம்

    ஒரு ஆட்டோவில் 27 பேர் பயணம்- போலீசார் அதிர்ச்சி: வைரலான வீடியோ

    • அதிக பயணிகள் ஏற்றி வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை.
    • ஆட்டோவை பறிமுதல் செய்ததுடன், உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.

    பதேபூர்:

    உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் பிந்த்கி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தினர். அதில் வழக்கத்திற்கு மாறாக அதிக பயணிகள் இருப்பதை பார்த்த போலீசார் அவர்களை வெளியே வருமாறு கூறினர்.

    #WATCH | Uttar Pradesh | Police seized an auto and imposed a fine of Rs 11,500 after 27 people were found traveling in it in the Bindki PS area of Fatehpur district, yesterday

    அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஆட்டோவில் இருந்து 4 பெண்கள், 16 குழந்தைகள் என மொத்தம் 27 பேர் இருந்தனர். அவர்களை எச்சரிக்கை செய்த அனுப்பிய போலீசார், உடனடியாக அந்த ஆட்டோவை பறிமுதல் செய்ததுடன், அதன் உரிமையாளருக்கு 11,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது.

    Next Story
    ×