என் மலர்
நீங்கள் தேடியது "உத்தரப்பிரதேசம்"
- 15 வயதுடைய சிறுமி கடைக்காரரை பிளேடால் தாக்குகிறார்.
- பிளேடால் தாக்கிய சிறுமிக்கு மனநலப் பிரச்சினை இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
உத்தரபிரதேசத்தில் கடைக்காரர் ஒருவரை 15 வயது சிறுமி பிளேடால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளில் 15 வயதுடைய சிறுமி கடைக்காரரை பிளேடால் தாக்குகிறார். அப்போது கடைக்காரர் அருகில் இருந்த பெண் உடனடியாக தலையிட்டு சிறுமியைதடுக்க முயற்சித்தார்.
இதுதொடர்பாக பேசிய கடைக்காரரின் சகோதரர் தேவ் சைனி, "அந்தப் சிறுமி அடிக்கடி எங்கள் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு பின்னர் திருப்பி தருவாள். இந்த முறை நாங்கள் ஏற்கனவே அவளிடம் விற்ற பொருட்களை திருப்பித் தரவோ மாற்றவோ மாட்டோம் என்று கூறியிருந்தோம். ஆனால் அவள் மீண்டும் பொருட்களை திருப்பி வாங்கி கொள்ளுமாறு எங்கள் கடைக்கு வந்தாள். எங்களை பிளேடால் தாங்குவேன் என்று மிரட்டினாள்.
கடைசியாக நாங்கள் பொருளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அவளுடைய பணத்தைத் திருப்பி கொடுத்தோம். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு, திடீரென்று அங்கே நின்று கொண்டிருந்த என் சகோதரனைத் தாக்கினாள். உடனடியாக அந்த சிறுமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம்" என்று தெரிவித்தார்.
பிளேடால் தாக்கிய சிறுமிக்கு மனநலப் பிரச்சினை இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
- பாஜக அரசாங்கத்தின் கீழ் தலித்துகள், குறிப்பாக பெண்கள், சிறுமிகள் முற்றிலும் பாதுகாப்பற்றவர்கள் என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன.
- பாதிக்கப்பட்டவர்கள் உதவியற்றவர்கள் என்ற பாஜகவின் தலித் எதிர்ப்பு மற்றும் பெண்கள் விரோத மனநிலையின் விளைவு இது.
உத்தரப் பிரதேசத்தில் ராம்பூரை சேர்ந்த 11 வயது காது கேளாத வாய் பேச முடியாத தலித் சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் காணாமல் போனாள். மறுநாள் காலை ஒரு வயலில் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். சிறுமியின் அந்தரங்கப் பகுதிகளில் இருந்து இரத்தம் வழிந்தது.
மேலும் சிறுமியின் உடலில் கடித்த அடையாளங்கள் இருந்தன. மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவதிற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் 11 வயது தலித் சிறுமி மீது நடத்தப்பட்ட கொடூரமும், கொடுமையும் மிகவும் வெட்கக்கேடானதும், அதிர்ச்சியளிப்பதும் ஆகும்.
உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற குற்றங்கள், பாஜக அரசாங்கத்தின் கீழ் தலித்துகள், குறிப்பாக பெண்கள், சிறுமிகள் முற்றிலும் பாதுகாப்பற்றவர்கள் என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன.
குற்றவாளிகள் சட்டம் ஒழுங்கைப் பற்றி பயப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் உதவியற்றவர்கள் என்ற பாஜகவின் தலித் எதிர்ப்பு மற்றும் பெண்கள் விரோத மனநிலையின் விளைவு இது!. எல்லாவற்றிற்கும் மேலாக, உத்தரப் பிரதேசத்தின் மகள்கள் எவ்வளவு காலம் இத்தகைய மிருகத்தனத்திற்கு பலியாவார்கள்?
குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விரைவில் நீதி வழங்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
- விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள கண்ணப்பா படத்திலும் நடித்துள்ளார்.
- மே இறுதியில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் நடனப் புயல் பிரபுதேவா. இவர் நடன இயக்குனர் மட்டுமின்றி நடிகராகவும், இயக்குனராகவும் 30 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் இருந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் தமிழில் ஜாலி ஓ ஜிம்கானா என்ற படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான ஜாலியோ ஜிம்கானா திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதேபோல், தெலுங்கில் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் பாபு தயாரிப்பில் அவரது மகன் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள கண்ணப்பா படத்திலும் நடித்துள்ளார்.
முகேஷ் குமார் சிங் இயக்கும் இப்படம் வருகிற மே இறுதியில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கண்ணப்பா படக்குழுவினர் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
படக்குழவினருடன் லக்னோ சென்ற பிரபு தேவா அங்குள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றதோடு அவரிடம் இருந்து நினைவுப் பரிசுகைளை பெற்றுக் கொண்டார்.
மேலும், தனது வரவிருக்கும் படம் குறித்தும் முதல்வருடன் பகிர்ந்துக்கொண்டார்
இதன் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
- உத்தரப் பிரதேசத்தில் இது நாள்தோறும் நடப்பது விந்தையாக இருக்கிறது.
- ஒவ்வொரு நாளும், சிவில் வழக்குகள் குற்றவியல் வழக்குகளாக மாற்றப்படுகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மொத்தமாக சீர்குலைந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடனாக பெற்ற பணத்தை திருப்பித் தரவில்லை என்ற சிவில் பிரச்னையை கிரிமினல் வழக்காக மாற்றியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, உத்தரப்பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்துள்ளது. சிவில் வழக்குகளை குற்றவியல் விஷயங்களாக மாற்றுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இது மிகவும் தவறு. ஆனால் இது நடக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் இது நாள்தோறும் நடப்பது விந்தையாக இருக்கிறது. இந்த நடைமுறை தவறு என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியும் மீண்டும் இதையே செய்வதா?.
ஒவ்வொரு நாளும், சிவில் வழக்குகள் குற்றவியல் வழக்குகளாக மாற்றப்படுகின்றன. இது அபத்தமானது. கடன் வாங்கிய பணத்தை கொடுக்காமல் இருப்பதை மட்டும் வைத்து குற்றவியல் குற்றமாக அதை மாற்ற முடியாது என்று தெரிவித்தார்.
- செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
- பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சாலையில் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து பைக்கில் வந்த மர்ம நபர் செயின் பறித்து சென்றுள்ளனர்.
அந்த பெண் வீடியோ எடுக்கும்போது, செயின் பறிப்பு சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது. செயின் பறிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இன்று நடந்த செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டுள்ள காவல்துறையினர் ஏப்ரல் 19 அன்று குற்றம் நடந்ததாக தெரிவித்தனர்
- பாதிக்கப்பட்ட சிறுமியின் முகத்தில் தனது பெயரை சூடான இரும்புக் கம்பியால் எழுதி கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார்
உத்தரப்பிரதேசம் மாநிலம் லகிம்பூர் கேரி பகுதியில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த 17 வயது சிறுமியை கடத்தி 3 நாட்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த அமன் என்கிற 22 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் முகத்தில் தனது பெயரை சூடான இரும்புக் கம்பியால் எழுதி கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டுள்ள காவல்துறையினர் ஏப்ரல் 19 அன்று குற்றம் நடந்ததாக தெரிவித்தனர்.
- சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக தற்போது வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார் போலே பாபா
- போலே பாபாவின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 121 பேரை பலிகொண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்திய போலே பாபா சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக தற்போது வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் மூலம் கமிட்டி நிர்வாகிகளை தொடர்புகொண்டு படுகாயமடைந்த உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பக்கத்துணையாக நிற்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக 88,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட நிகழ்ச்சியில் 2.5 லட்சம் பேர் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேற மற்றோரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுக்க எதிர்புறமாக முன்னேறியதால் இந்த விபத்து நிகழ்ச்த்துள்ளது என்று தெரியவந்தது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலே பாபா தனது காரில் அங்கிருந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.
இந்த சம்பவம் தொடர்பாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மதுக்கர் என்ற நபர் இன்று போலீசிடம் சரணடைந்துள்ளார். போலே பாபாவின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
- இந்த சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்தது மிகவும் கவலை அளிக்கிறது.
- இவரை போன்ற மற்ற பாபாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலெ பாபா ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாட்டில் உள்ள ஏழைகள், தலித்துகள், ஒடுக்கப்பட்டோர் போன்றோர் தங்கள் வறுமையையும் மற்ற அனைத்துத் துன்பங்களையும் போக்குவதற்கு, ஹத்ராஸின் போலே பாபா போன்ற பல பாபாக்களின் மூடநம்பிக்கையால் தவறாக வழிநடத்தப்பட்டு, தங்கள் துயரத்தையும் துன்பத்தையும் அதிகரிக்கக் கூடாது.
மாறாக, பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் காட்டிய பாதையில் ஆட்சியைப் பிடித்து தங்கள் தலைவிதியை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்தது மிகவும் கவலை அளிக்கிறது. ஹத்ராஸ் சம்பவத்தில், குற்றவாளியான போலே பாபா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவரை போன்ற மற்ற பாபாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.
- ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
- கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் போலே பாபா மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.
ஹத்ராஸில் 121 பேரை பலிகொண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு பிறகு போலே பாபா தலைமறைவாக இருந்தார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு இரங்கல் வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் மூலம் கமிட்டி நிர்வாகிகளை தொடர்புகொண்டு படுகாயமடைந்த உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பக்கத்துணையாக நிற்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று பேசியுள்ளார்.
இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
"ஹத்ராஸ் ஆன்மிக கூட்டத்தில், தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அழைத்தார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துச் செல்ல, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுவே பலரின் உயிரிழப்புக்குக் காரணம். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார். உள்ளூர் மக்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்" என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, "ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல. சமூக விரோதிகளின் சதி செயல்" என போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
- இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும்.
- இந்த விவகாரத்தில், மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் ஏர் கூலர் அருகில் யார் உட்காருவது என மணமகன் - மணமகள் வீட்டார் சண்டையிட்டுக் கொண்டதால் கோபத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும் எனக்கூறி மணப்பெண் இந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில், மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
- புகையை கண்ட சக பயணிகள் ரெயிலில் தீ பிடித்ததாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர்.
- ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பில்பூர் அருகே ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து, பீதியில் ஓடும் ரெயிலில் இருந்து பயணிகள் வெளியே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மொராதாபாத் கோட்டத்தின் கீழ் வரும் பில்பூர் நிலையத்திற்கு அருகே ஹவுரா- அமிர்தசரஸ் மெயிலின் பொதுப் பெட்டியில் இன்று சிலர் தீயை அணைக்கும் கருவியை இயக்கியுள்ளனர்.
இதனால், அந்த பெட்டி முழுவதும் புகை கிளம்பியுள்ளது. புகையை கண்ட சக பயணிகள் ரெயிலில் தீ பிடித்ததாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, பயணிகள் சிலர் பீதியில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்துள்ளனர். இதில், 12 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
பயணிகள் அவசரகால நிறுத்தத்திற்கான சங்கிலியை இழுத்துவிட்டு குதித்ததால், ரெயில் மெதுவாக செல்லும்போது பயணிகள் பீதியில் ரெயிலில் இருந்து குதித்துள்ளனர்.
இதுதொடர்பாக, ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உத்தரப்பிரதேசத்தில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரெயிலை ரெயில்வே ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிச் செனறனர்.
- உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது ஒன்றும் முதன்முறையல்ல.
பிரேக் டவுன் ஆகிவிட்ட பேருந்தை பயணிகள் பலரும் தள்ளி செல்லும் காட்சியை பலர் பார்த்திருப்பார்கள். ஆனால் பழுதாகி நின்ற ரெயிலை யாரவது தள்ளிச் செல்வதை பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரெயிலை ரெயில்வே ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது ஒன்றும் முதன்முறையல்ல. இந்தாண்டு மார்ச் மாதம் அமேதி மாவட்டத்தில் ரெயில்வே ஊழியர்களுக்கான ரெயில் சென்றுகொண்டிருக்கும்போது நடுவழியிலேயே பழுதாகி நின்றதால் தண்டவாளத்தின் மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு ரெயிலை ஊழியர்கள் தள்ளிச் சென்றுள்ளனர்.






