search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "condolences"

    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #ManoharParrikar #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    கோவா மாநிலத்தின் முதல்-அமைச்சரும், சிறந்த அரசியல் தலைவருமான மனோகர் பாரிக்கர் உடல் நலக்குறைவால் புதுடெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, நேற்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.



    கோவா மாநிலத்திற்கு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் என்ற பெருமைக்குரியவர் மனோகர் பாரிக்கர். இவர் இரண்டு முறை கோவா மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். இவர் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றியவர் என்ற பெருமைக்குரியவர்.

    இவர் சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராகவும் இருந்தார். கோவா மாநிலத்தின் முதல்-அமைச்சர் மனோகர் பாரிக்கரின் மறைவு கோவா மாநிலத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ManoharParrikar #EdappadiPalaniswami
    திருமயம் அருகே சாலை விபத்தில் பலியான அய்யப்ப பக்தர்களின் குடும்பத்துக்கு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். #PudukkottaiAccident #ChandrasekharRao #Pilgrims
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் வழிபாட்டை முடித்து விட்டு ராமேசுவரம் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும்போது, புதுக்கோட்டையை அடுத்த திருமயம் அருகே அவர்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.



    இந்த விபத்தில் உயிர்ப்பலி ஏற்பட்டதை அறிந்ததும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்த அவர் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்தார்.



    மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். #PudukkottaiAccident #ChandrasekharRao #Pilgrims
    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான என்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #NDTiwarideath #pmmodi
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம், உத்ரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்-மந்திரியான என்.டி.திவாரி  காலமானார். அவருக்கு வயது 92. 

    ஆந்திர மாநில கவர்னராகவும் பதவி வகித்த என்.டி.திவாரி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வருடம் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அவர் காலமானார். என்.டி.திவாரி  தான் பிறந்த தினமான அக்டோபர் 18-ஆம் தேதியிலேயே காலமானார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திவாரி, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர்.

    என்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ என்.டி திவாரி மறைவு செய்தி கேட்டு துயருற்றேன். உயரிய தலைவரான என்.டி திவாரி, தனது நிர்வாகத்திறனால் அறியப்பட்டவர். தொழிற்துறை வளர்ச்சி மற்றும் உத்தரகாண்ட், உத்தர பிரதேச மாநில வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளால் என்.டி திவாரி நினைவு கூறப்படுவார். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் உத்தரபிரதேச மாநில முதல்- மந்திரி யோகி ஆதித்யாநாத், உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #NDTiwarideath #pmmodi
    ×