என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "top Parliamentarians"

    • பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கொள்கை பரப்பு துணை செயலாளராக பணியாற்றினார்.

    ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளாருமான பி.ஆர்.சுந்தரம் (73) உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். இன்று மாலை இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், " மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சுந்தரம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அரசியல் நண்பர்கள், நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான பி.ஆர்.சுந்தரம், கட்சியின் மாவட்ட அவைத்தலைவராக பதவி வகித்தவர். 1996 முதல் 2006 வரை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் 2014 முதல் 2019 வரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர்.

    அதிமுகவில் நீண்ட காலம் பயணித்த பி.ஆர்.சுந்தரம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

    பின்னர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கொள்கை பரப்பு துணை செயலாளராக பணியாற்றினார்.

    பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட 12 எம்பிக்களுக்கு சன்சாத் ரத்னா விருதுகளை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்க உள்ளார். #SansadRatnaAwards #BanwarilalPurohit
    சென்னை:

    பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் எம்பிக்களை கவுரவிக்கும் வகையில், சென்னையைச் சேர்ந்த பிரைம் பாயின்ட் பவுண்டேசன், பிரசன்ஸ் இ மேகசின் சார்பில் ‘சன்சாத் ரத்னா விருதுகள்’ வழங்கப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சன்சாத் ரத்னா விருது வழங்கும் விழா, சென்னை ஆளுநர் மாளிகையில் நாளை மறுதினம் (ஜனவரி 19) நடைபெற உள்ளது.

    கோப்புப்படம்

    விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு சன்சாத் ரத்னா விருதுகளை வழங்க உள்ளார். விழாவில் மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆஹிர், பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி அர்ஜுன் ராம் மேஹ்வால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

    மக்களவையின் 9 எம்பிக்கள், மக்களவையின் ஒரு நிலைக்குழு உறுப்பினர் மற்றும் இரண்டு ஓய்வு பெற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்த விருதுகளை பெற உள்ளனர். மக்களவை செயலகம் மற்றும் பிஆர்எஸ் சட்டமன்ற ஆய்வு நிறுவனம் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் விருதுக்கான எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். #SansadRatnaAwards #BanwarilalPurohit
    ×