என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலித் சிறுமிகள்"

    • பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    உத்தரப் பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் ஒரு தலித் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் சிங் கூறுகையில், ஏப்ரல் 24 ஆம் தேதி, 16 வயதுடைய அந்த சிறுமி வேரோரு கிரமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

    ஏப்ரல் 27 ஆம் தேதி, அதே கிராமத்தைச் சேர்ந்த ஷைலேந்திர சரோஜ் என்கிற ஜாஹித், அவரது நண்பர் ஷேரு என்கிற நாசர் அகமது மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் புகாரின் பேரில் மூன்று இளைஞர்கள் மீது பிஎன்எஸ், போக்சோ சட்டம் மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார் 

    • பாஜக அரசாங்கத்தின் கீழ் தலித்துகள், குறிப்பாக பெண்கள், சிறுமிகள் முற்றிலும் பாதுகாப்பற்றவர்கள் என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன.
    • பாதிக்கப்பட்டவர்கள் உதவியற்றவர்கள் என்ற பாஜகவின் தலித் எதிர்ப்பு மற்றும் பெண்கள் விரோத மனநிலையின் விளைவு இது.

    உத்தரப் பிரதேசத்தில் ராம்பூரை சேர்ந்த 11 வயது காது கேளாத வாய் பேச முடியாத தலித் சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் காணாமல் போனாள். மறுநாள் காலை ஒரு வயலில் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். சிறுமியின் அந்தரங்கப் பகுதிகளில் இருந்து இரத்தம் வழிந்தது.

    மேலும் சிறுமியின் உடலில் கடித்த அடையாளங்கள் இருந்தன. மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த சம்பவதிற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் 11 வயது தலித் சிறுமி மீது நடத்தப்பட்ட கொடூரமும், கொடுமையும் மிகவும் வெட்கக்கேடானதும், அதிர்ச்சியளிப்பதும் ஆகும்.

    உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற குற்றங்கள், பாஜக அரசாங்கத்தின் கீழ் தலித்துகள், குறிப்பாக பெண்கள், சிறுமிகள் முற்றிலும் பாதுகாப்பற்றவர்கள் என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன.

    குற்றவாளிகள் சட்டம் ஒழுங்கைப் பற்றி பயப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் உதவியற்றவர்கள் என்ற பாஜகவின் தலித் எதிர்ப்பு மற்றும் பெண்கள் விரோத மனநிலையின் விளைவு இது!. எல்லாவற்றிற்கும் மேலாக, உத்தரப் பிரதேசத்தின் மகள்கள் எவ்வளவு காலம் இத்தகைய மிருகத்தனத்திற்கு பலியாவார்கள்?

    குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விரைவில் நீதி வழங்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். 

    கேரளா அருகே தலித் சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் மீது போலீசார் போஸ்கோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மன்னந்தவாடியைச் சேர்ந்த 17 வயது தலித் சிறுமியும், அவரது 14 வயது தோழியும் கடந்த 15-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார்கள்.

    2 நாள் கடந்த நிலையில் அவர்கள் மன்னந்தவாடியை அடுத்த சுல்தான் பத்தேரியில் தனியாக தவித்தப்படி நின்றனர். அவர்களை போலீசார் மீட்டு சென்று விசாரித்தனர்.

    இதில், 2 சிறுமிகளையும் அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் ஊட்டிக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது. சிறுமிகளுக்கு செல்போன் வாங்கி தருவதாக ஆசைக்காட்டி அவர்களை வாலிபர்கள் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

    ஊட்டி சென்ற பின்பு அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து 17 வயது சிறுமியை அவர்கள் கற்பழித்தனர். 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.

    மறுநாள் சிறுமிகள் இருவரையும் சுல்தான் பத்தேரியில் இறக்கி விட்டு தலைமறைவாகி விட்டனர்.

    இது தொடர்பாக சிறுமிகளின் உறவினர்கள் மன்னந்தவாடி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் தலித் சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 வாலிபர்கள் மீது போலீசார் போஸ்கோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர்.

    தலைமறைவான வாலிபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. #tamilnews
    ×