உத்தரபிரதேசத்தில் சாலையில் ரீல்ஸ் எடுத்த பெண்ணிடம் செயின் பறிப்பு

செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறதுபாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
உத்தரபிரதேசத்தில் சாலையில் ரீல்ஸ் எடுத்த பெண்ணிடம் செயின் பறிப்பு
Published on

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சாலையில் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து பைக்கில் வந்த மர்ம நபர் செயின் பறித்து சென்றுள்ளனர்.

அந்த பெண் வீடியோ எடுக்கும்போது, செயின் பறிப்பு சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது. செயின் பறிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இன்று நடந்த செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com