என் மலர்
நீங்கள் தேடியது "Pankaj Chaudhary"
- உத்தரப் பிரதேசத்திலிருந்து பாஜக அதன் தேசிய கவுன்சில் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தது.
- பங்கஜ் சவுத்ரியின் வேட்பு மனுவை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆதரித்தார்.
உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவராக பங்கஜ் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரும், பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். பதவி விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் சவுத்ரி பூபேந்திரா, பங்கஜ் சவுத்ரியிடம் பாஜக கொடியை முறையாக ஒப்படைத்தார்.
மாநிலத் தலைவரின் நியமனத்துடன், உத்தரப் பிரதேசத்திலிருந்து பாஜக அதன் தேசிய கவுன்சில் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தது. ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத், பிரஜேஷ் பதக், கேசவ் பிரசாத் மௌரியா, பூபேந்திர சவுத்ரி, ஸ்மிருதி இரானி, சூர்ய பிரதாப் ஷாஹி, சுதந்திர தேவ் சிங் மற்றும் ராமபதி ராம் திரிபாதி போன்ற மூத்த தலைவர்கள் உட்பட மொத்தம் 120 புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பங்கஜ் சவுத்ரியின் வேட்பு மனுவை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் பிரஜேஷ் பதக், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, முன்னாள் மாநிலத் தலைவர் சுதந்திர தேவ் சிங், சூர்யபிரதாப் ஷாஹி, சுரேஷ் கன்னா, முன்னாள் ஆளுநர் பேபி ராணி மௌரியா ஆகியோர் ஆதரித்தனர்.
மத்திய நிதித்துறை இணையமைச்சரும், ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த குர்மி தலைவருமான பங்கஜ் சவுத்ரி உத்தரப்பிரதேசத்தின் முக்கிய முகமாக அறியப்படுகிறார்.
- மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
- மக்கள் பயன்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், செயல்படுத்த வேண்டிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
இதில் மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்களில் வருவாய்த்துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் முடிவுற்று மக்கள் பயன்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க செய்ய வேண்டும். நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என பேசினார்.






