search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killed"

    • மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
    • கண்ணன் மற்றும் வெயிலுகந்தகோபால் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் தி.மு.க. கிளை செயலாளர் மாரீஸ்குமார். (வயது 30).

    இவர் கடந்த 27-ந் தேதி மோட்டார் சைக்களில் சென்றபோது ஓட்டப்பிடாரம் அருகே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதில் காயம் அடைந்த மாரீஸ்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சமூக வலைதளத்தில் புகைப்படம் பதிவிட்டது தொடர்பாக அவருக்கும், ஓட்டப்பிடாரம் தி.மு.க.சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளரான கண்ணன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த கண்ணன் மற்றும் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மணல்குண்டுவை சேர்ந்த வெயிலுகந்தகோபால் ஆகிய இருவரும் சேர்ந்து மாரீஸ் குமாரை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ஓட்டப்பிடாரம் போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் கண்ணன் மற்றும் வெயிலுகந்தகோபால் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

    காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே எதிரில் வந்த அரசு பஸ் திடீரென்று ஷேர் ஆட்டோ மீது மோதியது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சங்கொலிகுப்பத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 43). ஷேர் ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று சங்கொலி குப்பம் பகுதியில் இருந்து முதுநகருக்கு ஷேர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச்சென்று இறக்கி விட்டார்.

    பின்னர் முதுநகரில் இருந்து சங்கொலி குப்பம் திரும்பி வந்தபோது காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே எதிரில் வந்த அரசு பஸ் திடீரென்று ஷேர் ஆட்டோ மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த சுபாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • க.பரமத்தியை சேர்ந்தவர் வாகன விபத்தில் வாலிபர் பலி
    • இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,  

    கரூர் மாவட்டம் க.பரமத்தியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 24). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கொளந்தாபாளையம் பகுதியில் சென்ற போது எதிரே புகழூர் தாலூக்கா குளத்து பாளையத்தை சேர்ந்த குப்புசாமி (77). வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் காயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு சுரேஷை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். குப்புசாமி சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்ணனுக்கு திருமணமாகி மணி என்ற மனைவியும் சதீஷ், சுபாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
    • எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு முகம் மற்றும் உடலில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(55). இவருக்கு திருமணமாகி மணி என்ற மனைவியும் சதீஷ், சுபாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    கண்ணன் சிறுவாச்சூர் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் மின் பழுது நீக்கும் ஊழியராக (வயர் மேன்) பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் கண்ணன் வழக்கம்போல் நேற்று மாலை சிறுவாச்சூர் ராஜீவ் நகரில் உள்ள மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு முகம் மற்றும் உடலில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தலைவாசல் போலீசார் கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி வயர்மேன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சாப்பிடுவதற்காக ஓட்டலுக்கு சாலையை கடந்து சென்றார்
    • திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது

    ராம்ஜிநகர்

    திருச்சி முசிறி அருகே உள்ள ஏழூர்பட்டி வாளவாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவர் திருச்சி திண்டுக்கல் சாலை இனாம் குளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் கியாஸ் நிறுவனத்தில் ஒப்பந்த லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் வழக்கம்போல் பணிக்கு வந்தவர் சாப்பிடுவதற்காக இரவு 10 மணி அளவில் இந்தியன் ஆயில் கியாஸ் நிறுவனத்துக்கு எதிர்ப்புறம் உள்ள ஓட்டலுக்கு சாலையை கடந்து சென்றார். அப்போது மணப்பாறையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதனை அறிந்து அங்கு வந்த இனாம்குளத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அரசு பஸ் டிரைவர் திருச்சி கள்ளிக்குடியைச் சேர்ந்த மாணிக்கம் (56) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பரமத்தி அருகே உள்ள வில்லி பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி
    • நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் வலது புறமாக சென்றுள்ளார். அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சுப்பிரமணி சென்ற மொபட் மீது மோதியது

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள வில்லி பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி (வயது 48). கூலி தொழிலாளி. இவரது மனைவி பேபி (45).

    நேற்று சுப்பிரமணி பரமத்தி அருகே உள்ள கோனூருக்கு தனது மொபட்டில் சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து கந்தம்பாளையத்திற்கு மொபட்டில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் வலது புறமாக சென்றுள்ளார். அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சுப்பிரமணி சென்ற மொபட் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார்.

    இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோ தனை செய்த மருத்துவர்கள் சுப்பிரமணி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சேலம் சங்கர் நகரை சேர்ந்த மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவரது மனைவி திருமணமான 3 மாதத்தில் பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தை வீடு அருகே உள்ள லைன் வீட்டில் வாடகைக்கு தனியாக வசித்து வந்தார்.
    • தனபாலின் குடும்பத்தினரை பற்றி கார்த்திகேயன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாராயண நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (38). எலக்ட்ரீசியன்.

    இவரது மனைவி திருமணமான 3 மாதத்தில் பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தை வீடு அருகே உள்ள லைன் வீட்டில் வாடகைக்கு தனியாக வசித்து வந்தார்.

    குடிப்பழக்கம் காரணமாக கார்த்திகேயன் தினமும் வீட்டிற்கு போதையில் வருவார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பரான தனபால் (45) மற்றும் சிலருடன் கார்த்திகேயன் மது குடித்துள்ளார். அப்போது தனபாலின் குடும்பத்தினரை பற்றி கார்த்திகேயன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

    போதை தலைக்கேறிய தனபாலுக்கு குடும்பத்தை இழிவாக பேசிய கார்த்திகேயன் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். அவர் வெளியே வந்ததும் குடும்பத்தினரை பற்றி இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்கும்படி கூறியுள்ளார். ஆனால், கார்த்திகேயன் மறுத்துவிட்டார்.

    இதனால் மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை போட்டுக்கொண்டனர். இதில் வீட்டு வாசலில் தடுமாறி விழுந்த கார்த்திகேயனை தனபால் கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு ஓடிவிட்டார். அப்போது கார்த்திகேயன் கதறி துடித்துள்ளார். ஆனால், போதையில் வழக்கம்போல் கூச்சல் போடுவதாக நினைத்து அருகில் வசிப்பவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து சிறிது நேரத்தில் கார்த்திகேயன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கார்த்திகேயன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் தவமணி, கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் பெயிண்டர் வேலை பார்க்கும் தனபால் உள்பட 2 பேரை பிடித்து வந்து விசாரித்து வருகின்றனர்.

    • பச்சக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியின் டிரைவர் அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும், எந்த சைகையும் செய்யாமல் லாரியை திருப்ப முயன்றுள்ளார்.
    • முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே ஜீவகாந்த் இறந்து விட்டார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி பச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் ஜீவகாந்த் (19), கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு 9 மணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் பவானி பகுதியில் இருந்து சங்ககிரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    பச்சக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியின் டிரைவர் அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும், எந்த சைகையும் செய்யாமல் லாரியை திருப்ப முயன்றுள்ளார். இதை கவனிக்காததால் ஜீவகாந்த் லாரியின் பின்னால் மோதினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜீவகாந்த்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே ஜீவகாந்த் இறந்து விட்டார்.

    இதுகுறித்து சங்ககிரி சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் சேலத்தை சேர்ந்த சரத்குமார் (32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    விபத்தில் உயிரிழந்த ஜீவகாந்த், வீட்டிற்கு ஒரே மகன் என்பதால் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • துறையூர் அருகே கோஷ்டி மோதல் வாலிபர் இரும்பு கம்பியால் அடித்து கொலை
    • கொலை ெசய்யப்பட்ட தர்மேந்தர் சர்மா மற்றும் கொலையாளிகள் இருவரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள்

    துறையூர்,  

    திருச்சி மாவட்டம் துறையூர் மலையப்பன் சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (வயது57).

    இவர் மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் கோவை மாவட்டம் சூலூரில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் இவரது வீட்டின் உட்புறத்தை அழகு படுத்துவதற்காக நாமக்கல்லை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை அணுகி உள்ளார்.

    அவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தர்மேந்தர் சர்மா (31), சோட்டு (28), சச்சின் (28) ஆகிய 3 பணியாளர்களை கண்ணையன் வீட்டிற்கு பணிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த மூன்று ேபரும் கண்ணையன் வீட்டின் கீழ் புறத்தில் ஒரு அறையில் தங்கி பணி செய்துள்ளனர்.

    அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் சோட்டு, சச்சின் ஆத்திரமடைந்து தர்மேந்தர் சர்மாவை இரும்பு கம்பியால் தாக்கினர்.

    இதனை பார்த்த கண்ணையன் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டு உள்ளார்.

    இதையடுத்து சோட்டு, சச்சின் கண்ணையனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    பின்னர் மயக்க நிலையில் இருந்த தர்மேந்திர ஷர்மாவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இச்சம்பவம் தொடர்பாக கண்ணையன் அளித்த புகாரின் பேரில் சோட்டு, சச்சின் ஆகிய இருவர் மீதும் துறையூர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திர ஷர்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனைத் தொடர்ந்து கொலை முயற்சி வழக்கினை கொலை வழக்காக மாற்றம் செய்த துறையூர் போலீசார், தப்பிச்சென்ற சோட்டு, சச்சின் ஆகிய இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

    கொலை ெசய்யப்பட்ட தர்மேந்தர் சர்மா மற்றும் கொலையாளிகள் இருவரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆகவே கொலையாளிகள் அந்த மாநிலத்திற்கு தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

    துறையூரில் வடமாநில இளைஞர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில், வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கார் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி - இருவர் படுகாயம்

    உப்பிலியபுரம் 

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள மங்கப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பெட்ரோல் பங்க் அருகே இன்று காலை தம்மம்பட்டியில் இருந்து கொப்பம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென வலது பக்கம் திரும்பியதால் பின்னால் வந்து கொண்டிருந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    இதனிடையே விபத்துக்குள்ளான கார் எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் கால் எலும்பு முறிவடைந்தது. தகவலின் பேரில் உப்பிலியபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், செபாஸ்டின் சந்தியாகு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர் விபத்து பற்றி உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

    • இரு சக்கர வாகனம் மோதி பெண் இறந்தார்.
    • சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை விராலிமலை தாலுகா பகவான் பெட்டியை சேர்ந்தவர் குழந்தை மனைவி அழகம்மாள் (வயது 55). இவர், பகவான்பட்டி அருகே புதுக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வா கனம் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அழகம்மாளை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
    • மேல்சிகி ச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்ப்பட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த மேலகாசாகுடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது56). தனியார் மில் தொழிலாளியான இவர், கடந்த 4-ந் தேதி, சொந்த வேலை காரணமாக, காரைக்கால் நகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பு ம்போது, பிள்ளைத்தெ ருவசல் மின் நிலையம் அருகே சாலையில் ஆடு குறுக்கே போனதால், ஆட்டின் மீது மோதி, தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்தார். காரை க்கால் அரசு ஆஸ்பத்ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ட்ட சிவக்குமார், மேல்சிகி ச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்ப்பட்டார். அங்கு 10 நாள் சிகிச்சையில் இருந்த சிவக்குமார், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து அவரது உறவினர் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×