என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மோதி விவசாயி பலி
    X

    லாரி மோதி விவசாயி பலி

    • லாரி மோதி விவசாயி பலியானார்
    • இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து

    அரியலூர்:

    அரியலூர் அருகேயுள்ள காட்டுப்பிரிங்கியம், அய்யா நகரை சேர்ந்தவர் ராஜாங்கம்(65). விவசாயியான இவர், தனது இரண்டாவது மனைவி பச்சையம்மாளை, இரு சக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு , பாலக்கரை அருகேயுள்ள கடலை கொல்லைக்கு சென்றார். அங்கு பணியை முடித்துவிட்டு அன்றிரவு இருவரும் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது பெரியநாகலூர், பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, பின்னால் சுண்ணாம்புக் கல் ஏற்றி வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில் ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதையறிந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், லாரி கண்ணாடிகளை உடைத்து, தீவைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு கயர்லாபாத் போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முற்பட்டனர். ஆனால் பொதுமக்கள் உடலை கொடுக்காமல் , லாரிகளை இவ்வழியே இயக்கக் கூடாது என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×