search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TamilNadu"

    சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சி இன்று இரவு அறிவித்துள்ளது. #ByPoll #ADMK
    சென்னை:

    அதிமுக சார்பில் 18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

    பூந்தமல்லியில் ஜி வைத்தியநாதனும், பெரம்பூரில் ஆர்.எஸ்.ராஜேஷும், திருப்போரூரில் எஸ்.ஆறுமுகம், சோளிங்கரில் ஜி சம்பத்தும், குடியாத்தத்தில் கஸ்பா ஆர்.மூர்த்தியும், ஆம்பூரில் ஜே.ஜோதிராமலிங்கராஜாவும், ஓசூரில் சத்யாவும், பாப்பிரெட்டிப்பட்டியில் கோவிந்தசாமியும், 

    அரூரில் சம்பத்குமாரும், நிலக்கோட்டையில் தேன்மொழியும், திருவாரூரில் ஜீவானந்தமும்,  தஞ்சாவூரில் ஆர்.காந்தியும், மானாமதுரையில் நாகராஜனும், ஆண்டிப்பட்டியில் லோகிராஜனும், பெரிய குளத்தில் முருகனும், சாத்தூரில் ராஜவர்மனும், பரமக்குடியில் சதன் பிரபாகரும், விளாத்திகுளத்தில் சின்னப்பனும்  போட்டியிடுகின்றனர். #ByPoll #ADMK
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று இரவு அறிவித்துள்ளார். #LSPolls #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக-வுக்கு 5, தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    தமாகா, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்ஆர் காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
     
    இதற்கிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து, அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, திருவள்ளூரில் டாக்டர் வேணுகோபாலும், தென் சென்னையில் ஜெயவர்தனும், காஞ்சிபுரத்தில் மரகதம் குமரவேலும், கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமியும், திருவண்ணாமலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஆரணியில் ஏழுமலையும், சேலத்தில் கே.ஆர்.எஸ்.சரவணனும், நாமக்கல்லில் காளியப்பனும், ஈரோட்டில் வெங்கு என்ற ஜி.மணிமாறன், திருப்பூரில் எம்.எஸ்.எம்.ஆனந்தனும், நீலகிரி தியாகராஜன், பொள்ளாச்சி சி.மகேந்திரன், கரூரில்  தம்பிதுரையும், பெரம்பலூரில் என்.ஆர்.சிவபதியும், சிதம்பரத்தில் பொ.சந்திரசேகர், மயிலாடுதுறையில் எஸ். ஆசைமணியும், நாகப்பட்டினம் ம.சரவணனும், மதுரையில் விவிஆர் ராஜனும், தேனியில் ரவீந்திரநாத் குமாரும், திருநெல்வேலியில் மனோஜ் பாண்டியனும் போட்டியிடுகின்றனர். #LSPolls #ADMK
    18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர் முக ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். #ByPolls #DMK #MKStalin
    சென்னை:

    தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

    பெரம்பூர் - ஆர்.டி.சேகர், சோளிங்கர் - அசோகன், சாத்தூர் - சீனிவாசன், விளாத்திக்குளம் - ஜெயகுமார், பரமக்குடி - சம்பத்குமார், திருப்போரூர் - செந்தில் என்ற இதயவர்மன், பூந்தமல்லி - கிருஷ்ணசாமி, நிலக்கோட்டை - சவுந்தரபாண்டியன், திருவாரூர்- பூண்டி கலைவாணன், ஆம்பூர் - விஸ்வநாதன், குடியாத்தம் - காத்தவராயன், ஓசூர் - சத்யா, பாப்பிரெட்டிப்பட்டி - மணி, ஆண்டிப்பட்டி - ஏ.மகாராஜன், பெரியகுளம் - கே.எஸ்.சரவணகுமார், தஞ்சாவூர் - நீலமேகம், அரூர் - கிருஷ்ணகுமார் மானாமதுரை - கரு காசிலிங்கம் என்ற இலக்கியதாசன் போட்டியிடுகின்றனர்.

    இதேபோல், இடைத்தேர்தலை சந்திக்கும் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுக வேட்பாளராக கே.வெங்கடேசன் போட்டியிடுகிறார் என அறிவித்துள்ளார். #ByPolls #DMK #MKStalin
    பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர் முக ஸ்டாலின் இன்று மாலை அறிவித்துள்ளார். #LSPolls #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளன. தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல் வெளியாகி வருகிறது.

    தி.மு.க. கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து விட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை திருமாவளவன் இன்று அறிவித்தார்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஒரு தொகுதி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

    இதற்கிடையே, தி.மு.க. சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற திமுக தலைவர் முக ஸ்டாலின், வேட்பாளர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை அங்கு வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், அண்ணாநகரில் உள்ள தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனையும் சென்று சந்தித்தார். அப்போது பொருளாளர் துரைமுருகன் மற்றும் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று மாலை வெளியிட்டார்.


    அதன்படி, சென்னை வடக்கு - டாக்டர் கலாநிதி, சென்னை தெற்கு - தமிழச்சி தங்க பாண்டியன், மத்திய சென்னை - தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் (தனி) - ஜி.செல்வம், அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன், வேலூர் - கதிர் ஆனந்த், தர்மபுரி - டாக்டர் செந்தில்குமார், திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - கவுதம் சிகாமணி, சேலம் - எஸ்.ஆர்.பார்த்திபன், நீலகிரி (தனி) - ஆ.ராசா, பொள்ளாச்சி - சண்முகசுந்தரம், திண்டுக்கல் - வேலுசாமி, கடலூர் - பண்ருட்டி ரமேஷ், மயிலாடுதுறை - சே.ராமலிங்கம், தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி (தனி) - தனுஷ்குமார், திருநெல்வேலி - திரவியம் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். #LSPolls #DMK #MKStalin
    அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தென்காசி தொகுதியில், கிருஷ்ணசாமி தனி சின்னத்தில் போட்டியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #LSPolls #AdmkAlliance #PuthiyaThamilagam #Krishnasamy
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    மீதமுள்ள 20 தொகுதிகளில் பாமகவுக்கு 7 தொகுதிகள், பாஜக-வுக்கு 5, தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்ஆர் காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் இன்று காலை அறிவித்தார். அதன்படி, புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்றார்.

    இந்நிலையில், தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி தனி சின்னத்தில் போட்டியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தமிழகம் கட்சி சார்பில் தென்காசி தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். #LSPolls #AdmkAlliance #PuthiyaThamilagam #Krishnasamy
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. #LSpoll #AIADMKDMDKalliance
    சென்னை:

    பாராளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக தரப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள் ஆகியோர் தேமுதிகவை சேர்ந்த பொது செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், 21 சட்டசபை தொகுதியில் தேமுதிக ஆதரவு அளிக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் கையெழுத்திட்டனர். #LSpoll #AIADMKBJPalliance  
    தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். #ByElection2019 #SatyabrataSahoo
    சென்னை:

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மார்ச் 9-ம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் அந்தந்த மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், இன்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என அறிவித்துள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. #ByElection2019 #SatyabrataSahoo
    பாராளுமன்ற தேர்தல் குறித்து அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காக இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா அடுத்த வாரம் தமிழகம் வருகிறார். #ParliamentElection #SunilArora
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வருகிற 23 மற்றும் 24 ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1 லட்சத்து 31 ஆயிரத்து 931 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சென்னையில் அதிக பட்சமாக 14,221 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அடுத்த வாரம் சென்னை வருகிறார்.

    அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்ட பிறகு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார்.



    தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 21 சட்டசபை தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருவதால் அது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஓசூர் தொகுதி இன்னும் காலி இடம் என அறிவிக்கப்படவில்லை. எனவே மீதம் உள்ள 19 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ParliamentElection #SunilArora
    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி இன்று பதவியேற்றுக் கொண்டார். #Congress #KSAlagiri
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு, காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என காங்கிரஸ் தலைமை கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

    மேலும், செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளார் என் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி இன்று பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

    இதேபோல், செயல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்ட வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத், திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் செயல் தலைவர்களுக்கு நாம் முழு ஒத்துழைப்பை அளிப்போம் என மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
    தமிழ்நாட்டுக்கு விடிவு காலம் பிறக்க பா.ஜனதா மற்றும் அதிமுக ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஒன்றியம் தணக்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்திலும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    மம்தா பானர்ஜி போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றார். அவர் மேற்கு வங்கத்தின் முதல்வர் மற்றும் இரும்புப் பெண்மணி என்று பெயர் பெற்றவர். நானும் அவர்கள் 15 நாட்களுக்கு முன்பு நடத்திய மாநாட்டிற்கு சென்றுவிட்டுதான் வந்தேன். அவ்வளவு செல்வாக்குள்ள ஒரு முதலமைச்சர் அவர். அங்கு பி.ஜே.பி உள்ளே நுழைய முடியாது. அதனால் மோடிக்கு ஆத்திரம் வந்து அந்த அம்மையாரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, பல அக்கிரமங்களை செய்து கொண்டிருக்கின்றார்.

    அங்கு ஒரு சம்பவம் நடந்துள்ள காரணத்தினால் அதற்காக தர்ணா போராட்டத்தை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி துவங்கியிருக்கிறார்.

    மோடி இப்பொழுது பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு ஒரு பொய்யைச் சொல்லி இருக்கின்றார். என்ன பொய் என்று கேட்டால், விவசாயிகளுடைய வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்தப்போகிறேன் என்று புதிதாக ஒரு கதை விட்டிருக்கின்றார். விவசாயினுடைய கோவணத்தை அவிழ்த்து விட்டு ஓடவிட்டவர்கள், மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள். அது உங்களுக்கு தெரியும்.

    மோடி ஒரு பம்மாத்து வேலை செய்யத் துவங்கியிருக்கின்றார். அவரே சொல்லி இருக்கின்றார் இந்த பட்ஜெட் என்பது ஒரு ட்ரெய்லர். இப்பொழுதுதான் ட்ரெய்லர் வந்திருக்கின்றதாம். ட்ரெய்லர் என்பது பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு ட்ரெய்லர் வெளியிடுவார்கள். அதைப்பார்த்து விட்டு அனைவரும் சென்று சினிமா பார்ப்பார்கள்.

    அதுபோல் சொல்கின்றார் மோடி. எனவே, ஒரு ட்ரெய்லர் தயாரிக்கவே 5 வருடம் ஆகிறது என்றால், மக்களுக்கான திட்டங்கள் தீட்டுவதற்கு, அதனை செயல்படுத்துவதற்கு எத்தனை காலம் ஆகும் என்று நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும் என்பதைத்தான் நான் இங்கு குறிப்பிட்டுக்காட்ட விரும்புகின்றேன். ஆகவே, நாடே இன்றைக்கு ஒரு சுடுகாடாக மாறிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது.

    மத்தியில் அப்படி ஒரு ஆட்சி. மாநிலத்தில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்.

    அதற்காகத்தான் நாங்கள் உங்கள் எல்லோரையும் தேடி வந்திருக்கிறோம். நாங்கள் தேடிவந்து இருக்கின்றோம் என்று சொல்வதை விட, இந்த இரு கட்சிகளையும் அப்புறப்படுத்த நாங்கள் தயார் என்று நீங்கள் எங்களைத் தேடி வந்து இருக்கின்றீர்கள், அதுதான் உண்மை.

    தி.மு.க. தயவு இல்லாமல் யாரும் மத்தியிலே ஆட்சி நடத்த முடியாது. ஆகவே, விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வரப்போகிறது. அதோடு சேர்த்து 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரப்போகிறது. எங்களுக்கு எல்லாம் என்ன உணர்வு என்றால், ஏன் எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வு என்ன என்று கேட்டீர்கள் என்றால், நாடாளுமன்றத் தேர்தல், 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகிய வற்றோடு சேர்த்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வந்தால் நாடு நன்றாக இருக்கும் என்ற உணர்வு தமிழ்நாட்டு மக்களுக்கு வந்திருக்கிறது. அப்படி வந்தால், எடப்பாடி அரசையும் ஒழித்து விடலாம், மோடி அரசையும் வீழ்த்தி விடலாம்.

    இந்த இரண்டு கட்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டால் நிச்சயமாக உறுதியாக சொல்கின்றேன். நாட்டிற்கும், தமிழகத்திற்கும் விடிவு காலம் பிறக்கும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin
    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் 28 பேரை நியமனம் செய்து பாஜக தலைவர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். #BJP #TNElectionIncharge
    சென்னை:

    பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதைத்தொடர்ந்து, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    தமிழகத்திலும் அ.தி.மு.க., தி.மு.க, அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் 28 பேரை நியமனம் செய்து பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியின் துறை வாரியாக 28 பேர் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    வானதி ஸ்ரீனிவாசன், மோகன் ராஜுலு, நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர்.சேகர், கே.டி.ராகவன், ஏ.பி.முருகானந்தம், கரு.நாகராஜன், கனக சபாபதி, ஜி.கே.நாகராஜ் உள்பட 28 பேரை நியமனம் செய்து உத்தரவிட்டார். #BJP #TNElectionIncharge
    பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக, டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசுக்கு மத்திய மந்திரி மேனகா காந்தி 2 விருதுகள் வழங்கினார். #Tamilnadu #ManekaGandhi
    புதுடெல்லி:

    தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் டெல்லியில் நடைபெற்றது.

    இதில் மத்திய அரசின் திட்டமான ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்‘ என்ற திட்டத்தை இந்திய அளவில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டது. இதேபோல், மக்கள் மத்தியில் இந்த திட்டத்தை சிறப்பாக எடுத்துச் சென்றதில் முதலிடம் பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் விருது வழங்கப்பட்டது.

    விருதுகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி வழங்கினார். அவரிடம் இருந்து தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலாளர் மணிவாசன், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி ஆகியோர் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில், குழந்தை பருவத்தில் தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியவரும், தமிழக அரசின் விருது பெற்ற குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வாளருமான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி நந்தினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    மேலும் சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி, திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கிறிஸ்டினா டி.டார்த்தி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
    ×