search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "takes charge"

    • அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் பொறுப்பேற்று கொண்டார்.
    • அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பணி நிறைவு பெற்று சென்றார்.

    அதனைத்தொடர்ந்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அம்மாபேட்டை, பவானி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தனர்.

    இந்த நிலையில் கோவை மாவட்டம் காரமடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இன்று அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்டார்.

    அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, தனபால் உள்ளிட்ட போலீசார் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

    • ஷர்மிளாவுக்கு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
    • கோவை துணை கமிஷனர் (கலால்) நந்தினி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கோவை,

    தமிழகம் முழுவதும் அண்மையில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்ய தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி கோவை மாநகராட்சி துணை கமிஷனராக பதவி வகித்து வந்த ஷர்மிளா கோவை மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை துணை கமிஷனர் (கலால்) நந்தினி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கோவை மாவட்ட வருவாய் அலுவராக பதவி வகதித்து வந்த லீலா அலெக்ஸ் சென்னை வெளிவட்ட சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதனிடையே கோவை மாவட்ட வருவாய் அலுவலராக ஷர்மிளா இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • கல்லூரியில் உதவிப் பேராசிரியராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளாா்.
    • 2007ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்றாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங் சாய் பணியாற்றி வந்தாா். அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பி.சாமிநாதன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா். இவா் நாமக்கல் கால்நடை அறிவியல் ஆராய்ச்சிக் கல்லூரியில் முதுகலை கால்நடை அறிவியல் பட்ட மேற்படிப்பு பயின்று, அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளாா்.

    கடந்த 2001ல் தமிழக காவல் துறையில் நேரடி துணை காவல் கண்காணிப்பாளராக பணியில் சோ்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பணியாற்றினாா். பின்னா் சென்னை அண்ணாநகா் உதவி ஆணையராகப் பணிபுரிந்து 2007ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்றாா்.

    இதையடுத்து 2012ல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்று கோவை மாநகர துணை ஆணையராக பணிபுரிந்தாா். பின்னா் மதுரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா், சென்னை போக்குவரத்து துணை ஆணையா், நவீன காவல் கட்டுப்பாட்டு அறை, இதைத்தொடா்ந்து 2021 முதல் பாதுகாப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருவளர்செல்வி ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
    • கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த திருவளர்செல்வி, ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த பாலமுரளி திருப்பூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பாலமுரளி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

    • கீழக்கரை தாசில்தார் பொறுப்பேற்றார்.
    • அலுவலக பணியாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய தாசில்தாராக பழனிக்குமார் பொறுப்பேற்றார். அவரை துணை தாசில்தார் பரமசிவம், சமூக நலத்துறை தாசில்தார் ஜலால், தலைமை நிலஅளவர் சொக்கநாதன், வருவாய் அலுவலர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் காசிநாதத்துரை, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அழகப்பா ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    இதுவரை அங்கு தாசில்தாராக பணியாற்றிய சரவணன் புதிய தாசில்தாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.புதிதாக பொறுப்பேற்ற தாசில்தார் பழனிக்குமாருக்கு வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • கிணத்துக்கிடவு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • அரசியல் கட்சி நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    காரமடை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த குமார் ஆனைமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக காரமடை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக கிணத்துக்கிடவு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.

    காரமடை காவல் நிலையத்தின் புதிய இன்ஸ்ெபக்டராக செந்தில்குமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட செந்தில்குமாருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுல்தான் இப்ராஹிம், விஜயராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக டாக்டர்.மணி பணி மாற்றம் செய்யப்பட்டார்.
    • பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக டாக்டர்.வள்ளி சத்தியமூர்த்தி முதல்வராக நியமிக்ககப்பட்டார்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையின் டீன் மற்றும் முதல்வராக டாக்டர் மணி பணியாற்றி வந்தார். அவர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றி வந்த டாக்டர் வள்ளி சத்திய மூர்த்தி முதல்வராக நியமிக்ககப்பட்டார்.

    இதை தொடர்ந்து அவர் மருத்துவ கல்லூரி முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

    முதல்வராக பொறு ப்பேற்ற டாக்டர் வள்ளி சத்தியமூர்த்திக்கு கல்லூரி ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்து வர்கள், மாணவர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரி வித்தனர்.

    • அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் பணியாற்றி வந்த ஏ.கே., சரவணன் பதவி உயர்வு பெற்று இன்று காலை சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலராக அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் பணியாற்றி வந்த ஏ.கே., சரவணன் பதவி உயர்வு பெற்று இன்று காலை சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    பொறுப்பேற்றுக்கொண்ட செயல் அலுவலர் சரவணனுக்கு கோயில் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி இன்று பதவியேற்றுக் கொண்டார். #Congress #KSAlagiri
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு, காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என காங்கிரஸ் தலைமை கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

    மேலும், செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளார் என் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி இன்று பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

    இதேபோல், செயல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்ட வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத், திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் செயல் தலைவர்களுக்கு நாம் முழு ஒத்துழைப்பை அளிப்போம் என மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
    டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் உ.பி. மாநிலம் (கிழக்கு) பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். #Congress #PriyankaGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார்.
     
    வாக்காளர்களை சந்தித்து ஆதரவும் திரட்டினார். ஆனால் கட்சியில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்காமல் இருந்தார். கட்சிப் பணிகளிலும் ஈடுபடாமல் இருந்தார்.

    முதல்முறையாக பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டது. அவரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக ராகுல் காந்தி நியமித்தார். உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பணிகளை பிரியங்கா காந்தி கவனிப்பார் என தெரிவித்தார்.



    இதேபோல், உத்தரப்பிரதேசம் (மேற்கு) மாநில பொதுச்செயலாளராக ஜோதிராதித்யா சிந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியானா மாநிலத்தின் பொதுச்செயலாளராக மாநிலங்களவை உறுப்பினர் குலாம்நபி ஆசாத் நியமிக்கப்பட்டுள்ளார். 

    பிரியங்கா காந்திக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது தொண்டர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் உ.பி. மாநில (கிழக்கு) பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். #Congress #PriyankaGandhi
    ×