search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதவியேற்பு"

    • தமிழ்நாடு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி.
    • ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவைல அளிக்கும் விதமாக இருப்பதாக கருத்து.

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.

    இந்நிலையில் பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

    இந்த மனு தொடர்பான விசாரணையின்போது, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்த தமிழ்நாடு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் நேற்று சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தது.

    ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவைல அளிக்கும் விதமாக இருப்பதாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்து இருந்தார்.

    24 மணி நேரத்திற்குள் சாதகமான தகவலை தெரிவிக்காவிட்டால், தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    ஆளுநருக்கு காலக்கெடு விடுக்கப்பட நிலையில், இன்று காலை 9 மணிக்கு திமுக எம்எல்ஏ பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஆளுநர் ஆர்.என்.ரவி 16ம் தேதி தான் சென்னை திரும்புகிறார்.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார்.

    தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணத்தால் அமைச்சராக பொன்முடி பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பாணை வெளியிட்டது.

    இதைதொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் பொன்முடி இடம்பெறவும், அமைச்சராக பதவி ஏற்கவும், ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார்.

    இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை டெல்லிக்கு தீடீர் பயணம் மேற்கொள்கிறார்.

    நாளை காலை 7.30 மணிக்கு டெல்லி புறப்படும் ஆளுநர் 16ம் தேதி தான் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

    மக்களவை தேர்தலுக்கான தேதி வரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளுநரின் திடீர் பயணத்தால் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து, பதவியேற்புக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியும் அவசியம் ஆகும்.

    மேலும், தமிழக முதலமைச்சரின் பிரந்துரை கடிதத்தின் மீது ஆளுநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் ஜெய்க் சி.தாமசை 37ஆயிரத்து 719 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
    • தொடர்ந்து 53 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி இறந்ததையடுத்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி தொகுதியில் கடந்த 5-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட உம்மன்சாண்டியின் மகனான சாண்டி உம்மன் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் ஜெய்க் சி.தாமசை 37ஆயிரத்து 719 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    53 ஆண்டுகளாக புதுப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வாக உம்மன்சாண்டி இருந்தார். இந்நிலையில் தற்போது நடந்த இடைத் தேர்தலில் அவரது மகன் சாண்டி உம்மன் வெற்றி பெற்றிருக்கிறார். இதன்மூலம் தொடர்ந்து 53 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்து வருகிறது.

    இந்நிலையில் புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சாண்டி உம்மன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். முன்னதாக அவர் இன்று காலை சட்டசபை சபாநாயகர் ஷம்சீரை சந்தித்தார்.

    சக போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை கமிஷனராக இருந்த மதிவாணன், சேலத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

    இதனை தொடர்ந்து சேலம் மாநகர தெற்கு துணை கமிஷனராக இருந்த ராஜராஜன், கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.

    அவர் இன்று காலை கோவை மாநகர அலுவலகத்தில் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அவருக்கு சக போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • பதவியேற்பு விழா நடந்தது.
    • வட்டார தலைவர் பாலாஜி வரவேற்றார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நகர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் பாரி பரமேசுவரன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட ஆளுநர் மணிகண்டன், முதல் துணை ஆளுநர் டாக்டர் சசிக்குமார், மண்டல தலைவர் ஜெயச் சந்திரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். வட்டார தலைவர் பாலாஜி வரவேற்றார்.

    விழாவில் தலைவராக ராமசந்திரன், செயலா ளராக பாலசுந்தரம், பொரு ளாளராக கிருஷ்ணமூர்த்தி மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். பின்னர் பயனாளிகளுக்கு ஆடை கள், அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விருதுகள், தீயணைப்புத்துறைக்கு பாதுகாப்பு உபகரணங்கள், அங்கன்வாடி குழந்தை களுக்கு விளையாட்டு உப கரணங்கள், பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் இல்லத்திற்கு அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இதில் நிர்வாகிகள் சிவக்குமார், பாபநாசம், பொன்னையா, குருசாமி, காந்திராஜன், சிவசங்கரன், சங்கு, பாபுசரவணன், சோழவந்தான் நகர்தலைவர் மருதுபாண்டியன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவராக பழனிக்குமார் மீண்டும் பதவியேற்றார்.
    • போகலூர் அருகே உள்ள சத்திரக்குடி தனியார் மஹாலில் நடந்தது.

    போகலூர்

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவ லர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் கடந்த 14-ந்தேதி யன்று அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடை பெற்று, அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப் பட்டது.

    இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க ராமநாத புரம் மாவட்ட தலைவராக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் மீண்டும் வெற்றி பெற்றார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சி இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் அருகே உள்ள சத்திரக்குடி தனியார் மஹாலில் நடந்தது.

    மீண்டும் மாவட்ட தலைவராக பதவியேற்ற பழனிக்குமாருக்கு போகலூர் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் தொழி லதிபர் ஜே.எஸ்.லோகி தாசன், வருவாய்த்துறை அலுவலர்கள், சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • வாக்குரிமையைப் பயன்படுத்தி, தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேப் பொதுப்பள்ளியில் மாணவர் பேரவையின் பதவியேற்பு விழா நடந்தது.

    இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளியின் மாணவத் தலைவர்களை தேர்ந்தெடுக்க டிஜிட்டல் முறையில் வாக்குப்பதிவு வெளிப்படையாக நடத்தப்பட்டது. இதன் மூலம் வாக்குரிமையைப் பயன்படுத்தி, தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டது.

    இந்த தேர்தலில் வெற்றி பெற்ற மாணவ பிரதிநிதிகளுக்கு கூடுதல் ஆட்சியர் பதவி பிரமாணம் செய்து வைத்து, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், இயக்குனர்கள் வக்கீல் கவுதமன், டாக்டர் புவியரசன் மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • பள்ளியில் 7-ம்வகுப்பு வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மறைமுகத்தேர்தல் மூலம் வாக்களித்து தேர்வு செய்தனர்.
    • பதவி பெற்ற மாணவர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2023-2024 ம் கல்வியாண்டிற்கான மாணவர் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. முன்னதாக மாணவர் மன்றத்திற்கான புதிய நிர்வாகிகளை பள்ளியில் 7-ம்வகுப்பு வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மறைமுகத்தேர்தல் மூலம் வாக்களித்து தேர்வு செய்தனர்.

    பள்ளியின் மாணவர் மன்ற தலைவர்களாக கியோன் அபிஷேக், தர்ஷினி , துணைத்தலைவர்களாக ஹியக் நரசிம், கீர்த்தனா, விளையாட்டுத்துறையின் செயலாளராக யதுகிருஷ்ணா ஆகியோர் பதவியேற்று கொண்டனர். மேலும் பல்வேறு அணியின் செயலர்கள், துறையின் செயலர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரிய பொறுப்பாளர்கள் ஆகியோர் பொறுப்பேற்று க்கொண்டனர்.

    பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார். ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு ரோட்டரி அமைப்பின் முன்னாள் ஆளுநர் இளங்குமரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்து மாணவர்களிடையே தலைமைப்பண்பினால் கிடைக்கும் பெருமை பற்றியும், ஒற்றுமையின் பலன்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.

    முடிவில் பள்ளியின் மாணவர் மன்றத்தினை சேர்ந்த மாணவி கீர்த்தனா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகனா, கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோருடன் இணைந்து பள்ளியின் முன்னாள் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • கீதா ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • சக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கீதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    ஊட்டி,

    கோவை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியாக இருந்த கீதா, தற்போது நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வுடன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    அவர் ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு சக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட கீதாவை நஞ்சநாடு, கப்பத்தொரை ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியின் செயலர் மூர்த்தி, முதல்வர் ரங்கநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

    • தொடர்ந்து மாவட்ட திட்டக்குழுமம் ஒரு கண்ணோட்டம் குறித்து குறும்படம் காண்பிக்கப்பட்டது.
    • மாவட்ட திட்டக்குழுவின் கூட்டப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்டக்குழு தலைவரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான மணிமேகலை நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட திட்டக்குழு துணை தலைவரும், கலெக்டருமான சரயு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்டக்குழு அலுவலர் சாந்தா வரவேற்றார்.

    இதில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட கதிரவன், சங்கர், மம்தா, அனிதா, பூதட்டியப்பா, வெங்கடாசலம் என்கிற பாபு, சசிகலா, பழனி, வித்யா, சீனிவாசலு, சுனில்குமார், மணிவண்ணன் ஆகியோர் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட திட்டக்குழுமம் ஒரு கண்ணோட்டம் குறித்து குறும்படம் காண்பிக்கப்பட்டது. மேலும் மாவட்ட திட்டக்குழுவின் கூட்டப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான வந்தனா கார்க், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராஜகோபால், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் பிரச்சன்ன பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட ஊராட்சி செயலாளர் சாந்தா, கிருஷ்ணகிரி நகராட்சி பரிதா நவாப், நகர தி.மு.க. செயலாளர் நவாப், ஒன்றிய குழு தலைவர்கள் சீனிவாசலு ரெட்டி, உஷா குமரேசன், சசி வெங்கடசாமி, கேசவமூர்த்தி, நகராட்சி துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் நன்றி கூறினார்.

    • முஸ்லிம் நிர்வாக சபையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.
    • முடிவில் செயலாளர் கரீம் கனி நன்றி கூறினார்.

    பனைக்குளம்

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் கிழக்கு பகுதி முஸ்லிம் நிர்வாக சபையின் நிர்வாகி கள் பதவிக்காலம் முடிவ டைந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டு பதவி ஏற்பு விழா நேற்று மாலை மதரஸா கட்டிடத்தில் நடந்தது.

    முன்னதாக பனைக்குளம் ஜூம்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.இதில் முஸ் லிம் நிர்வாக சபை முன்னாள் நிர்வாகிகள், வாலிப முஸ்லீம் சங்க

    தலைவர் சீனி அன்வர் அலி, செயலாளர் சீனி ரிசாஸ் கான் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை தலைவரும், முன்னாள் ஊராட்சி தலைவருமான ஜெய்னுல் அஸ்ஸலாம், செயலாளர் ரோஸ்சுல்தான், பனைக் குளம் ஊராட்சி தலைவர் பவுசியா பானு, ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் காதர் முகைதீன், செயலாளர் தாகிர் உசேன், ஜமாத்-சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பனைக்குளம் முஸ்லிம் நிர்வாகசபையின் தலைவராக பாரமபரியமிக்க சீ.கு.என்ற குடும்பத்தை சேர்ந்த ஹம்சத் அலி 7-வது முறையாக ஜமாத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டார். உதவி தலைவராக ஏ.முகைதீன் அலி, செயலாளராக ஏ.கரீம் கனி, உதவி செயலாளராக நூருல் மன்னான், பொரு ளாளராக எம்.பி.எம்.சாகுல் ஹமீது உள்பட உறுப்பி னர்களாக 15 பேர் தேர்வு செய்யப்பட்டு, தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் முன்னிலையில் பதவி ஏற்ற னர். பின்னர் முஸ்லிம் பரிபாலன சபை தலை வர் ஜெய்னுல் அஸ்லலாம் பேசுகையில், புதிய நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுக்க ளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

    புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட அனைவரும் கிராமத்தின் வளர்ச்சிக்கும், ஒற் றுமைக்கும் உறுதுணையாக இருந்து நமது ஊருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார். முன்னதாக வாலிப முஸ்லிம் சங்கதலை வர் சீனி அன்வர்அலி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தார். முடிவில் செயலாளர் கரீம் கனி நன்றி கூறினார்.

    • சிவகங்கை மருத்துவ கல்லூரி புதிய முதல்வர் பதவியேற்றார்.
    • 32 ஆண்டுகள் மருத்துவ துறையில் பணியாற்றி வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை தலைமை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய முதல்வராக சத்தியபாமா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 32 ஆண்டுகள் மருத்துவ துறையில் பணியாற்றி வருகிறார். அவர் முதல் முறையாக சிவகங்கை தலைமை அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் இதற்கு முன்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை பேராசிரியராக பணியாற்றி வந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி வந்துள்ளார்.

    ×