என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை"
- சூடான் மற்றும் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சென்னை மாநகர போலீசார் போதை பொருட்களை தடுப்பதற்கு தொடர் நடவடிக்கை.
சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் நடவடிக்கையால் வானகரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களோடு தொடர்பில் இருந்த சூடான் மற்றும் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, இதுவரை போதைப்பொருள் வழக்குகளில் 29 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னை மாநகர போலீசார் போதை பொருட்களை தடுப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
- பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 04) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு தெற்கே கரையை கடந்தது.
இதனால் இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
இதனையடுத்து சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
- முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது.
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையில் நிலைக்கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கான விடுமுறை உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் 30ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை ஆறிக்கை குறித்து வானிலை மைய இயக்குநர் அமுதா பேட்டி அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
குமரி கடல் பகுதியில் உள்ள சுழற்சியால் நமக்கு மழை கிடைக்க அதிக வாய்ப்பு.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 29ம் தேதி மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 30ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.
டிசம்பர் மாதத்தில் எந்த அளவுக்கு மழை இருக்கும் என நவம்பர் 30-ல் அறிக்கை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கே.கே.நகரில் சேட் என்கிற தங்க நகை வியாபாரி இல்லத்தில் சோதனை நடைபெறுகிறது.
- தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, சைதாப்பேட்டை, கே.கே.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகரில் சேட் என்கிற தங்க நகை வியாபாரி இல்லத்தில் சோதனை நடைபெறுகிறது. கோடம்பாக்கத்தில் சுகாலி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
- Electors Help Desk செயல்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.
- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
சென்னை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களிலும் 18.11.2025 முதல் 25.11.2025 வரை வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் உதவி மையங்கள் (Electors Help Desk) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ஜெ.குமரகுருபரன் இதை அறிவித்துள்ளார்.
கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும் எனவும் சம்மந்தப்பட்ட பகுதி வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மகளிர் உலக கோப்பையை முதல் முறையாக இந்திய அணி கைப்பற்றியது.
- ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக ஒருநாள் உலக கோப்பையை கைப்பற்றி வராலாறு படைத்தது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணிக்கு நாடு முழுவதும் பாரட்டுக்கள் குவிந்தன. இந்திய அணியில் விளையாடிய வீராங்கனைகளுக்கு அந்த அந்த மாநில அரசுகள் பரிசுத்தொகை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திய ஹர்மன்பிரீத் கவுர் சென்னைக்கு வருகை தந்துள்ளார். அவர் பிரபல கல்வி நிறுவனங்களின் அழைப்பை ஏற்று இன்று சென்னைக்கு வந்துள்ளார்.
அவருக்கு மேலதாளங்கள் முழுங்க பிரம்மாண்ட வரவேற்று வழங்கப்பட்டது. மேலும் ஜூனியர் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை நடனமாடியும் வரவேற்றனர். இது தொடர்பான புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.
அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை, சென்னை மாநகரங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரயில்வே போலீசார், ஆர்.பி.எப் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தூய்மைப் பணியாளர் அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் அடித்து விரட்டினார்.
- இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அடையாறு மேம்பாலத்தில் 50 வயது மதிக்க தக்க பெண் தூய்மைப் பணியாளிடம் இளைஞர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனை கண்டு கோவமடைந்த பெண் தூய்மைப் பணியாளர் அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் அடித்து விரட்டினார். இதனையடுத்து அந்த இளைஞர் அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடினார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த விவகாரம் விசாரணை நடத்திய போலீசார், ஆந்திராவைச் சேர்ந்த பச்சூ சாய் தேஜா (25) என்பவரை கைது செய்துள்ளனர்
- உழவன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தஞ்சாவூர் தாம்பரம் இடையே இயக்கப்படும்
- குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்
பராமரிப்பு காரணமாக சென்னை எழும்பூருக்கு கீழ்கண்ட ரெயில்கள் செல்லாது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
1. உழவன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தஞ்சாவூர் தாம்பரம் இடையே இயக்கப்படும்
2. கொல்லம் - சென்னை அனந்தபுரி அதிவிரைவு ரெயிலும் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
3. ராமேஸ்வரம் - சென்னை சேது அதிவிரைவு ரெயிலும் இயக்கப்படும்10 முதல் 29 வரை தாம்பரம் மட்டுமே இயக்கப்படும்.
4. ராமேஸ்வரத்தில் இரவு 8.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.35 மணிக்கு வரும்
5. ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரெயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
6. ராமேஸ்வரத்தில் மாலை 17.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.45 மணிக்கு வரும்
7. மறு அறிவிப்பு வரும் வரை குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்
8. சென்னை எழும்பூர் மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரெயில் எழும்பூருக்கு பதில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்
- காலையில் சென்னையில் வெயில் வாட்டி வைத்தது
- இரவில் மழை பெய்து வருவதால் சென்னையில் குளிச்சியான சூழல் நிலவுகிறது.
தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் எழும்பூர், எண்ணூர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது.
காலையில் வெயில் வாட்டி வைத்தது வந்த நிலையில், இரவில் மழை பெய்து வருவதால் சென்னையில் குளிச்சியான சூழல் நிலவுகிறது.
- கோயம்பேட்டில் வசித்து வரும் தொழில் அதிபர் லோகநாதன் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
- சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
சென்னை:
சென்னையில் இன்று தொழில் அதிபர்கள் 5 பேருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சவுரி முடி மற்றும் விக் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோயம்பேட்டில் வசித்து வரும் தொழில் அதிபர் லோகநாதன் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை கோடம்பாக்கம் வெள்ளாளர் 2-வது தெருவில் வசித்து வரும் தொழில் அதிபர் வீடு, தெற்கு சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவரின் வீடு ஆகியவற்றிலும் 5-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னையில் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
இது தொடர்பாக தொழில் அதிபர்களின் வீடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்து அதிகாரிகள் ஆவணங்களை திரட்டி உள்ளனர். இதன் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.






