என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Voter List Special Camp"

    • நாளை முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
    • அ.தி.மு.க. வழக்கறிஞர் விநாயகம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

    சென்னை தியாகராய நகர், தாம்பரம் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெறுள்ள இறந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்கள் மற்றும் இரட்டை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ, சத்திய நாரணயன், மற்றும் தாம்பரம் தொகுதியை சேர்ந்த அ.தி.மு.க. வழக்கறிஞர் விநாயகம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா, மற்றும் அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான நிரஞ்சன் ராஜ கோபால், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வாக்களார் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் நடைப்பெறும். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்களார் சிறப்பு திருத்தப்பணிகள் நடைபெறும்.

    தற்போது தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு திருத்த தீவிர பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அக்டோபர் 27-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், நாளை முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    இப்பணிகள் முழுமையான வாக்காளர் பட்டியலை மாற்றியமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்காளருக்கும் படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை சரிபார்த்து டிசம்பர் மாதம் 9-ந்தேதி சிறப்பு தீவிர திருத்த பணிகள் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது வரைவு பட்டியலுக்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம். அதை முழுமையாக பரிசீலித்த பிறகே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    1950-ம் ஆண்டுக்கு பிறகு 10 முறை சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2005-ம் ஆண்டிற்கு பின் 20 ஆண்டுகளுக்கு பின் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. இப்பணிகள் எதிர்ப்பார்த்ததைவிட சிறப்பாக மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கிறேன்" என்று கூறினார்.

    இதுபோல கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ள இறந்தவர்களின் பெயர்களை நீக்க கோரி முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தேர்தல் ஆணைய தரப்பு வக்கீல் சுட்டிக்காட்டினார்.

    இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வருகிற 13-ந்தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழகத்தின் உரிமைக்கு பேராபத்து விளைவிக்கும். தமிழ்நாட்டின் நலன், உரிமைகளை பாதுகாப்பதற்காக S.I.R.-க்கு எதிராக ஒன்றிணைந்துள்ளோம்.

    ஜனநாயகத்தின் ஆணி வேரையே அறுக்கும் செயலில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6.50 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக தமிழகத்தில் வந்து தங்கியுள்ளனர்.

    S.I.R. காரணமாக வடமாநிலத்தைச் சேர்ந்த 75 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்களிக்கும் அபாயகரமான நிலை ஏற்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குறைந்தபட்ச நியாயம் கூட இல்லாமல் தேர்தல் ஆணையம் மோசடியாக செயல்படுகிறது.

    பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து நவீன முறையில் வாக்குத் திருட்டை செயல்படுத்துகிறது.

    நியாயமான முறையில் வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் வெற்றி பெற பாஜக முயற்சிக்கிறது.

    குடியுரிமை சான்றிதழை கொடு என்றால் என்னால் கூட தற்போது கொடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 4 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.
    • கட்சியின் பொதுச் செயலாளரான அபிஷேக் பானர்ஜியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    பீகாரை தொடர்ந்து 2-ம் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) பணிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இந்த 4 மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    எஸ்.ஐ.ஆருக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் வருகிற 4-ந்தேதி கொல்கத்தாவில் போராட்டம் நடக்கிறது.

    கட்சியின் பொதுச் செயலாளரான அபிஷேக் பானர்ஜியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    இதற்கிடையே மேற்கு வங்காள தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

    மேற்கு வங்காள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.க தலைவருமான சுவேந்து, பூத் நிலை அதிகாரிகளுக்கு (பி.எல்.ஒ.) மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

    எட்டயபுரம் அருகே உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகளை உதவி கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    எட்டயபுரம்:

    விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் புதிய பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் 2-ம் கட்டமாக நேற்று நடைபெற்றது. கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா எட்டயபுரத்தில் உள்ள 11 வாக்குச்சாவடிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

    இதேபோல் எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தாசில்தார் வதனாள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். 
    ×