என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜனநாயகத்தின் ஆணி வேரையே அறுக்கும் செயலில் இந்திய தேர்தல் ஆணையம்- வைகோ
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழகத்தின் உரிமைக்கு பேராபத்து விளைவிக்கும். தமிழ்நாட்டின் நலன், உரிமைகளை பாதுகாப்பதற்காக S.I.R.-க்கு எதிராக ஒன்றிணைந்துள்ளோம்.
ஜனநாயகத்தின் ஆணி வேரையே அறுக்கும் செயலில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6.50 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக தமிழகத்தில் வந்து தங்கியுள்ளனர்.
S.I.R. காரணமாக வடமாநிலத்தைச் சேர்ந்த 75 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்களிக்கும் அபாயகரமான நிலை ஏற்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






