என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 7மணிமுதல் மழை பெய்து வருகிறது.
- நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 7மணிமுதல் மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மற்றும் வடசென்னை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த சில மணிநேரங்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த திடீர் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளையும் உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






