search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election Incharge"

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் 28 பேரை நியமனம் செய்து பாஜக தலைவர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். #BJP #TNElectionIncharge
    சென்னை:

    பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதைத்தொடர்ந்து, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    தமிழகத்திலும் அ.தி.மு.க., தி.மு.க, அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் 28 பேரை நியமனம் செய்து பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியின் துறை வாரியாக 28 பேர் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    வானதி ஸ்ரீனிவாசன், மோகன் ராஜுலு, நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர்.சேகர், கே.டி.ராகவன், ஏ.பி.முருகானந்தம், கரு.நாகராஜன், கனக சபாபதி, ஜி.கே.நாகராஜ் உள்பட 28 பேரை நியமனம் செய்து உத்தரவிட்டார். #BJP #TNElectionIncharge
    பாராளுமன்ற தேர்தலுக்கான தமிழக பாஜக பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமனம் செய்து பாஜக தலைமை இன்று அறிவித்துள்ளது. #BJP #TNElectionIncharge #PiyushGoyal
    புதுடெல்லி:

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என தீவிரமாக அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், பாஜக தலைமை இன்று வெளியிட்ட அறிக்கையில், பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளது.



    அதன்படி, தமிழகத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி பியூஷ் கோயல், புதுச்சேரிக்கு சி.டி.ரவி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதேபோல், கர்நாடகா, டெல்லி, திரிபுரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், அந்தமான், உ.பி. உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #BJP #TNElectionIncharge #PiyushGoyal
    ×