என் மலர்

  நீங்கள் தேடியது "Kids"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆன்லைன் வகுப்பில் படிக்கும் போது வரக்கூடிய வீடியோ கால்களை ஆன் செய்யக்கூடாது.
  • பெண்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு காவல்துறையின் உதவி மைய எண்களை தொடர்பு கொண்டு உதவி பெற்றுக் கொள்ளலாம்.

  நீடாமங்கலம்:

  வலங்கைமான் தாலுகா ஆலங்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் மற்றும் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான தடுப்பு பிரிவினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

  இதில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மணிமேகலை மாணவ -மாணவிகளிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசினார் .

  அப்போது ஆன்லைன் வகுப்பில் படிக்கும் போது வரக்கூடிய வீடியோ கால்களை ஆன் செய்யக்கூடாது.இதன் மூலம் உங்களது புகைப்படங்களை மாற்றி தவறான வழியில் மற்றவர்கள் பயன்படுத்தக்கூடும். அதேபோல் முகநூல், வாட்ஸ் அப்பில் உங்களது முகப்பு படத்தை வைக்க கூடாது. பெண்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு காவல்துறையின் உதவி மைய எண் 1098, 1930 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு எப்போது வேண்டுமானாலும் உதவி பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

  மேலும் சைபர் கிரைம் சப்- இன்ஸ்பெக்டர் கணபதி பேசும்போது:-வங்கி மோசடி அதிகமாக நடக்கிறது. ஆன்லைன் மூலம் வங்கி மோசடி அதிகம் நடக்கிறது. ஓ.டிபி.வருவதை யாரிடமும் பகிரக்கூடாது .அதேபோல் தற்கொலை எண்ணங்களை தவிர்த்து விட வேண்டும் என்றார்.முடிவில் தலைமை ஆசிரியர் (பொ) ஆனந்தன் நன்றி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 43 பள்ளி நிறுவனங்களுக்கு சொந்தமான 120 பள்ளி வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
  • அரசு ஆணைப்படி முதலுதவி பெட்டி, தீயணைப்பு உபகரணங்கள், அவசர கதவு, வேக கட்டுப்பாட்டு கருவி, சிசிடிவி கேமரா, மற்ற வசதிகளும் இருக்க வேண்டும்.

  நாகப்பட்டினம்:

  நாகை மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் வரும் 21ம் தேதி மாவட்டத்திலுள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலரும் சேர்ந்து 43 பள்ளி நிறுவனங்களுக்கு சொந்தமான 120 பள்ளி வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆணைப்படி ஆண்டுதோறும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

  இந்த ஆய்வு பணியில் ஆர்.டி.ஓ, மாவட்ட காவல் துணை சூப்பிரண்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். அரசு ஆணைப்படி மஞ்சள் நிறத்திலும், முதலுதவிப் பெட்டி, படிக்கட்டு வசதி, தீயணைப்பு உபகரணங்கள், அவசர கதவு, குழந்தைகள் அமர்வது, பேக்குகள் வைக்க இடம், வேக கட்டுப்பாட்டு கருவி, சிசிடிவி கேமரா, மற்ற வசதிகளும் இருக்க வேண்டும்.

  இவை இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மோட்டார் வாகன அலுவலர் பழனிச்சாமி தெரிவித்தார். ஆய்வு பணிக்கு வராத பள்ளி வாகனங்கள் பொது சாலையில் பள்ளிக் குழந்தைகளை வைத்து இயக்கினால் வாகனம் சிறை பிடிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஃபாஸ்ட் ஃபுட் ஆரோக்கியத்தின் எதிரி... இது தெரிந்திருந்தாலும் குழந்தைகளின் அடம் பெற்றோரைப் பணிய வைக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  இன்றைய பெற்றோர் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்க அதிகம் மெனக்கெடுகிறார்கள். அதே நேரத்தில், உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. குழந்தைகளை ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட அனுமதிக்கிறார்கள். அதனால் குழந்தைகள் வகுப்பறையில் கவனச் சிதறலுக்கு ஆளாகிறார்கள். பாடங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள அவர்களால் முடிவதில்லை. வீட்டுப் பாடம் எழுத ஆர்வம் இல்லாமல் தவிர்க்கிறார்கள். இந்தப் பிரசனை சம்பந்தப்பட்ட குழந்தையை ‘முட்டாள்’ என அடையாளப்படுத்துகிறது.

  அதிக அளவு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் குழந்தைகள் சோம்பலையே வெளிப்படுத்துகிறார்கள். யோசிக்கவே சிரமப்படுகிறார்கள். நேர்மறை சிந்தனைகள் குறைகின்றன. உளவியல் சிக்கல்கள் மனதில் மையம் கொள்கின்றன. பாக்கெட் சிப்ஸுகளில் சோடியமும் பொட்டாசியமும் அதிக அளவு உள்ளன. இவை உடலில் அதிகமாகத் தேங்கும்போது ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்படுகிறது. அதிலுள்ள அதிகக் காரமும் ஆரோக்கியத்துக்கு எதிரியே! இந்தச் சுவைக்கு நாக்குப் பழகி விடுவதால் சத்தான உணவுகளை குழந்தைகள் விரும்புவதில்லை. கசப்பு, உவர்ப்பு, புளிப்பு உள்ளிட்ட சுவைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகின்றன.

  கீரை, காய்கறிகளைத் தவிர்ப்பதால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. உடல் மட்டுமின்றி மனரீதியான அபாயங்களையும் உருவாக்கும் ஃபாஸ்ட் ஃபுட், குழந்தைகளை ஒரு கட்டத்தில் அடிமைப்படுத்தி விடுகிறது. உறுப்புகளையும் ஹார்மோன்களையும் பாதிக்கிறது. சிந்திக்கும் திறனைக் குறைத்து அறிவுத் தேடலுக்கு தடை போடுகிறது.  அடம் பிடிக்கும் குழந்தைகள் பொறுப்புகளை தட்டிக் கழிக்கும் மனப்பக்குவத்தை அடைகிறார்கள். இந்த உணவுக் கலாசாரம் குழந்தைகளின் நிகழ்காலத்தை மட்டுமின்றி, எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்குகிறது. உணவின் உளவியலைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வீட்டில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

  எந்த மாற்றத்தையும் மனதில் இருந்து தொடங்க வேண்டும். குழந்தைகளிடம் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கு பெற்றோரே ரோல் மாடல்! ஃபாஸ்ட் ஃபுட் விளைவுகளை குழந்தைகளுக்கு மெல்லச் சொல்லி புரிய வைக்கலாம். ஆசிரியர், மருத்துவர், நண்பர்கள் மூலம் குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்லலாம். சமைக்கத் திட்டமிடும் போது, குழந்தைகளை இணைத்துக் கொள்ளலாம். இன்றைய சமையல் என்ன, எந்த காய் சமையலுக்கு, என்ன பொரியல் என்பதிலும் சுட்டிகளின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கலாம். வீட்டில் நன்கு சமைத்துச் சாப்பிடும் போது ஃபாஸ்ட் ஃபுட் தேவை குறையும்.

  சத்தான தானிய வகைகளில் குழந்தைகளுக்குப் பிடித்த சுவையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். சர்க்கரைக்கு பதிலாக பனைவெல்லம் பயன்படுத்தலாம். அது, ரத்தசோகையை கட்டுப்படுத்தி, புத்திக்கூர்மையை அதிகரிக்கும். இயற்கை சார்ந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இவற்றைச் சாப்பிடுவதால் என்னென்ன சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன என்பதைப் புரிய வைக்கலாம். உணவை ரசித்து, சுவைத்து சாப்பிடப் பழக்க வேண்டும். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குறிப்பிட்ட வயதை அடையும் வரையிலுமே குழந்தைகளுக்கு பொம்மைகள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட பொம்மைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
  பொம்மை என்பது பெரியவர்களுக்குத்தான் உயிரற்ற ஒரு விளையாட்டு பொருள். ஆனால், குழந்தைகளைப் பொறுத்தவரை அதுவும் ஓர் உறவுதான். அதனோடு பேசுவது, விளையாடுவது, தான் சாப்பிடும் உணவை அதற்கு ஊட்டுவது, குளிப்பாட்டுவது, அழகுபடுத்துவது எனபொம்மையைச் சுற்றியே அவர்களின் உலகமும் இயங்கும். பெரியவர்கள் சமயங்களில் அலட்சியமாக பொம்மையைக் கையாண்டால்கூட குழந்தையின் முகமே வாடிவிடும். குறிப்பிட்ட வயதை அடையும் வரையிலுமே குழந்தைகளுக்கு பொம்மைகள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட பொம்மைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

  ‘‘குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் பெரிய அளவிலான வண்ணமயமான பொம்மைகள், சுழலக்கூடிய அல்லது இசை பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம். கீச்சொலிஎழுப்புகிற அல்லது கண்ணாடியில் பிரதிபலிக்கிற பொம்மைகள் அவர்களை அதிகம் வசீகரிக்கிறது. 3-லிருந்து 6 மாத குழந்தைகள் தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்தையும்கற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள். அதனால் கிலுகிலுப்பை, ரப்பரால் செய்த பொம்மைகள் குழந்தைகள் பிடிக்க, கைகளில் அழுத்த சுலபமாக இருக்கும். குழந்தைகளின் தொட்டில் (அ)படுக்கைக்கு மேலே அவர்கள் கண்களில் படும் வகையில் சுழலும் வண்ணமயமான பொம்மைகளை தொங்கவிடுவதாலும் அவர்கள் உற்சாகமடைவார்கள்.

  6-லிருந்து 9 மாதங்களில் குழந்தைகள் உட்கார, தவழ முயற்சிப்பார்கள். தொடுவது, பிடிப்பது, எறிவது, தள்ளுவது என எல்லா விளையாட்டையும் இந்த வயதில் செய்வார்கள். இந்தப் பருவத்தில் அவர்களுக்கு நகரும்படியான பொம்மைகள் வாங்கி தருவது நல்லது. உதாரணமாக கார், பஸ்கள், ரயில்கள், நடனமிடும் வாத்து, விலங்குகள் போன்ற பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

  பல வண்ணங்களிலும், வடிவங்களிலும், மிக எளிதாகக் கையாளக்கூடிய வகையில் இந்தப் பருவத்தில் இருக்கும் பொம்மைகளைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். 9-லிருந்து 12 மாதங்களில் குழந்தை எழுந்து சிறிது தூரம் நடக்கவும், நகரவும் செய்யும். பற்கள் முளைக்கும் இந்த வயதுகளில் எல்லாவற்றையும் கடித்து இழுத்து முயற்சிப்பார்கள். அதனால் மரத்தால் ஆன நடை வண்டி போன்றவை பழகவிட வேண்டும்.
   
  ஒரு வயது குழந்தைகளுக்கு பொம்மைகளை வைத்து செயல்முறை விளையாட்டுகளைக் கற்றுக் கொடுக்கலாம். பந்து, மட்டை பந்து விளையாடுவது, வாத்து, சமையல் பொருட்கள் மற்றும் கட்டிட பொம்மைகள். இவைகள் உணர்ச்சி திறன்களை மேம்படுத்தும். பொதுவாக, குழந்தைகளுக்குபாதுகாப்பான பொம்மைகளை கொடுக்க வேண்டும்.சிறியபேட்டரிகள் கொண்டஎலெக்ட்ரானிக் பொம்மைகளை குழந்தைகள் விழுங்கிவிடக்கூடிய அபாயம் உண்டு. அதேபோல கூர்மையான பொம்மைகள், நச்சு பெயின்டிலான பொம்மைகளும் ஆபத்தானவை.

  வெல்வெட்டால் செய்த மென்மையான வழுவழுப்பான பொம்மைகளால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த வகை பொம்மைகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்.முக்கியமாக ஒரு நல்ல பொம்மை பார்க்க புதுமையாக அல்லது விலை அதிகமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தவறான பின்விளைவுகள் அல்லது வன்முறை எண்ணங்களைக் குழந்தைகளின் மூளையில் திணித்துவிடக் கூடாதுஎன்பதே மிக முக்கியம்!’’
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலவசமாக மழலையர் கல்வி கிடைக்கும் என்பது நடுத்தர பெற்றோருக்கும், நமது குழந்தைகளும் மழலையர் பள்ளிக்கு செல்லுமே என்கிற மகிழ்ச்சி ஏழை பெற்றோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
  படிப்படியாக உயர்ந்து வருகிறது தமிழக கல்வித்துறை. தனியார் வசம் இருந்த கிண்டர்கார்டன் எனப்படும் மழலையர் பள்ளிக்கூடங்களை சொந்தமாக்கி சாத்தியமாக்கி இருக்கிறது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. தனியார் பள்ளிகள் வசம் இருந்த தூண்டில் இந்த கே.ஜி. வகுப்புகள். 5 வயது நிறைவடைந்த பின்னர்தான் அரசு பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க முடியும் என்ற நிலை இருந்ததால், 3 வயதில் இருந்தே சமாளிக்க முடியாத குழந்தைகளை கே.ஜி. வகுப்புகளில் சேர்க்க வேண்டிய கட்டாயம் எல்லா வீடுகளையும் எட்டிப்பார்க்க, அந்த நுழைவு வாயில் தனியார் பள்ளிகளின் முக்கிய வாயிலாகவே உள்ளது.

  ஏற்கனவே மழலையர்களுக்காக அங்கன்வாடி மையங்கள் சமூக நலத்துறை மூலம் இயங்கி வந்தாலும், அதில் தனியார் ஆங்கிலப்பள்ளிகளுக்கு நிகரான கல்வி வாய்ப்பு இல்லாமல் இருந்ததால் அதில் குழந்தைகளை சேர்க்க பொதுமக்கள் விரும்பவில்லை என்பதே உண்மையாக இருந்தது.

  ஆனால், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்ககோட்டையன் எடுத்த பல்வேறு திட்டங்கள் பள்ளிக்கல்வித் துறையை புது எழுச்சி கொள்ள வைத்தது. அவரால் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்று, அங்கன்வாடி மையங்களை மழலையர் வகுப்புகளாக மாற்றுவது.

  இந்த திட்டம் பொதுமக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை கடந்த விஜயதசமி நாள் வெளிக்காட்டியது. மாதிரி பள்ளிக்கூடங்களில் தொடங்கப்பட்ட எல்கே.ஜி. வகுப்புகளை பொதுமக்கள் பலரும் வந்து பார்த்து, அடுத்த ஆண்டு சேர்க்கைக்காக முன்பதிவு செய்து வரும் வேளையில், அரசு நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிக்கூடங்களுடன் இணைந்து இருக்கும் அங்கன்வாடி மையங்களை மழலையர் பள்ளிகளாக மாற்றி, வகுப்புகளையும் தொடங்கி இருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை.

  கடந்த 21-ந்தேதி வகுப்புகள் தொடங்கிய அன்று மாணவர் சேர்க்கை பரவலாக நன்றாகவே இருந்தது என்கிறது அதிகாரிகளின் புள்ளிவிவரங்கள். பெற்றோர் பலரும் பள்ளிக்கூடங்களுக்கு வந்து மழலையர் வகுப்புகள் செயல்பாடுகள் குறித்து கேட்டு செல்கிறார்கள்.

  இனி இலவசமாக மழலையர் கல்வி கிடைக்கும் என்பது நடுத்தர பெற்றோருக்கும், நமது குழந்தைகளும் மழலையர் பள்ளிக்கு செல்லுமே என்கிற மகிழ்ச்சி ஏழை பெற்றோருக்கும்...

  ஆனால், ஆசிரியர்கள் மத்தியில் இன்னொரு வடிவில் பிரச்சினை எழும்பி உள்ளது.

  தொடக்கத்தில் அங்கன்வாடி மையங்கள் மழலையர் பள்ளிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, சமூக நலத்துறை மூலம் பணியில் சேர்ந்து தற்போது அங்கன்வாடி அமைப்பாளர்களாக இருக்கும் பணியாளர்கள் தங்களுக்கு ஆசிரியை பணி வர வாய்ப்பு உள்ளது என்று கருதினார்கள். காரணம், கடந்த சில ஆண்டுகளாக அங்கன்வாடி பணியாளர்களாக தேர்வு பெற்றிருப்பவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்கள். ஆசிரியை பயிற்சி முடித்தவர்களும் இருக்கிறார்கள். எனவே கல்வித்தகுதி அடிப்படையில் தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தார்கள்.

  ஆனால், மழலையர் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் என்ற முடிவு, அவர்களுக்கு மட்டுமின்றி பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. மழலையர் பள்ளிகளுக்கு பணிநிரவல் முறையில் தற்போது ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 30 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம் உள்ளது.

  இந்த விகிதாச்சாரத்தின் படி உபரியாக இருக்கும் ஆசிரியைகளை மழலையர் பள்ளிகளுக்கு அனுப்ப முடிவு செய்து, பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் அவர்களுக்கு ஊதிய பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால், மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு பாடம் எடுக்க செல்வதன் மூலம் தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத நிலை வந்து விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த வாரமே பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கியும் யாரும் உத்தரவை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் 21-ந்தேதி மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டபோது அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியைகள் யாரும் பணிக்கு வரவில்லை.

  எனவே மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டு இருப்பது சாதகமா? பாதகமா? என்கிற கேள்வி மக்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும், அங்கன்வாடி பணியாளர்கள் மத்தியிலும் ஏற்பட்டு இருக்கிறது.

  மழலையர் வகுப்புகளுக்கு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தை அளிக்கிறது. ஆனால், அங்கன்வாடி மையங்கள் மூலம் உணவு, சத்துமாவு, முட்டை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. 1-ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு 14 வகையான இலவச திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி இருக்கிறது. புதிதாக தொடங்கப்பட்ட மழலையர் பள்ளிகளுக்கு இந்த இலவசங்கள் கிடைக்குமா? என்பது பெற்றோரின் கேள்வி.

  பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் குழந்தைகள் சென்றுவிட்டால், அங்குள்ள அங்கன்வாடி மையங்களில் எங்களுக்கு என்ன வேலை? நாங்கள் என்ன செய்வது? என்பது அங்கன்வாடி மைய பணியாளர்களின் கேள்வி.

  மழலையர் பள்ளிகளுக்கு என்று நியமிக்கப்பட்டு இருக்கும் ஆசிரியைகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குவார்கள்?. அவர்களை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் கட்டுப்படுத்த முடியுமா? அவர்களை வேறு வகுப்புகள் எடுக்க பயன்படுத்த முடியுமா? என்பது பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களின் கேள்வி.

  இதுவரை 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்றுத்தந்து விட்டு, உபரி என்கிற காரணத்தால் மழலையர் பள்ளிகளுக்கு செல்பவர்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு விடுமுறை எடுத்தால், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள் குழந்தைகளை கவனிப்பார்களா?. இனி வரும் ஆண்டுகளில் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்தால் மீண்டும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரையான பள்ளிக்கூடங்களில் பாடம் எடுக்க அனுமதிக்கப்படுவார்களா?. அங்கன்வாடி மையங்கள் சமூகநலத்துறை கட்டுப்பாட்டில் இயங்குவதால், மழலையர் பள்ளிகளில் பணிக்கு சேரும் ஆசிரியைகளும் பள்ளிக்கல்வித் துறையில் இருந்து சமூக நலத்துறைக்கு சென்று விட வேண்டுமா? என்ற கேள்வி ஆசிரியர்களுக்கு. ஒன்றிய வாரியாக, பள்ளிக்கூடங்கள் வாரியாக இளையோராக இருக்கும் ஆசிரியர்களுக்கு அடுத்து அங்கன்வாடி மையங்கள் மழலையர் பள்ளிகளாக மாற்றப்படும்போது நமக்கும் இதே நிலைதானா? என்ற கேள்வி.

  இப்படி கேள்விகளால் தங்களுக்கு பாதகமாக இருப்பதாக ஒருதரப்பு இருக்கிறது. எனவே தற்போது மழலையர் பள்ளிக் கூடங்கள் வெற்றிகரமாக இயங்க, அரசின் சார்பில் சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும். மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு என்று புதிதாக ஆசிரியைகளை தேர்வு செய்து பணியில் நியமித்து குழந்தைகளுக்கு சிறப்பான அடித்தளத்தை உருவாக்க வேண்டும்.

  -முடிவேல் மரியா
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தமபாளையம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண்ணை காரில் கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

  உத்தமபாளையம்:

  உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் தெற்குதெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது35). இவரது மனைவி சாந்தி(32). இவர்களுக்கு சருஷா, வினோஷா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

  அதேபகுதியில் உள்ள பிரைமரி பள்ளியில் சருஷா படித்து வருகிறார். அவரை அழைப்பதற்காக தனது தாய் செல்வி மற்றும் வினோஷாவுடன் சாந்தி சென்றார்.

  மகளை அழைத்துக் கொண்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த ரினோஷ் என்ற வாலிபர் காரில் வேகமாக வந்து சாந்தி மற்றும் குழந்தைகளை கடத்திக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒட்டிப்பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ராயல் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் டாக்டர் ஜோ கிராமெரி தலைமையில் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக பிரித்தனர். #MelbourneHospital #ConjoinedTwins
  சிட்னி :

  பூடான் நாட்டை சேர்ந்தவர் பூம்சு ஜாங்மோ. இந்த பெண்ணுக்கு 15 மாதங்களுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவை வயிற்றால் ஒட்டிப்பிறந்தன. நிமா, தவா என்று பெயரிட்டு வளர்க்கப்பட்டு வந்த இந்தக் குழந்தைகள், எதைச்செய்தாலும் சேர்ந்தே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

  இதனால் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், ஒரு தொண்டு அமைப்பின் உதவியுடன் அந்தக் குழந்தைகள் தங்களது தாயுடன், அறுவை சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள ராயல் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அவர்கள் சேர்க்கப்பட்டனர்.  அவர்களுக்கு டாக்டர் ஜோ கிராமெரி தலைமையில் 18 மருத்துவ நிபுணர்கள் 2 குழுவினராக பிரிந்து 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். முடிவில் குழந்தைகள் இருவரும் வெற்றிகரமாக தனித்தனியே பிரித்தெடுக்கப்பட்டனர். இந்த குழந்தைகள் வயிறு ஒட்டிப்பிறந்ததுடன், கல்லீரலும் இணைந்தே இருந்தது குறிப்பிடத்தக்கது.

  அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தைகள் நலம் அடைந்து வருகின்றனர். அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஜோ கிராமெரி கூறும்போது, ‘‘ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்து விட்டோம் என்று அவர்களின் தாயாருக்கு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். நம்பிக்கையுடன்தான் இந்த அறுவை சிகிச்சையை செய்தோம். இப்போது அது வெற்றி பெற்றிருக்கிறது. அவர்கள் முழுமையாக குணம் அடைவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது’’ என்று குறிப்பிட்டார். #MelbourneHospital #ConjoinedTwins
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மட்டுமின்றி நம்மில் பலருக்கும் கணிதம் என்ற சொல்லே வேப்பங்காயாக கசக்கும் நிலையே நீண்டகாலமாக இருந்து வருகிறது.
  பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மட்டுமின்றி நம்மில் பலருக்கும் கணிதம் என்ற சொல்லே வேப்பங்காயாக கசக்கும் நிலையே நீண்டகாலமாக இருந்து வருகிறது. கணிதம் என்பது பிறவி ஞானம் இருப்பவர்களுக்குத் மட்டும் தான் வசப்படும் மற்றவர்களுக்கு அது எட்டாக்கனியா என்றால் நிச்சயமாக இல்லை.

  நம்மால் இது முடியுமா? என்று வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கும்.அனால் அதையே பழகிக் கொள்ளும் போது,அதில் உள்ள நுட்பங்களை கற்றுத் தேறும் போது அச்செயல் எளிதாகிவிடும்.கணிதத்திற்கும் இது பொருந்தும்.மனோதிடமும் இடைவிடாத பயிற்சியும் இருந்தால் கணிதத்தை வெற்றிக் கொள்வது மிகச் சுலபமாகிவிடும்.ஒவ்வொரு வருடமும் பள்ளி இறுதித் தேர்வுகளில் கணிதப் பாடத்தில் தான் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.

  மற்ற எல்லாப் பாடங்களையும் விட கணிதமே கடினமானது என்று உருவாக்கப்பட்ட பிம்பமே இதற்கு காரணமாகும். உண்மையிலேயே மாணவர்கள் கணிதப் பாடத்தை வெறுப்பதில்லை. புரியாமல் ஏற்படும் பயமும் குழப்பமுமே வெறுப்புக்கும் அவநம்பிக்கைக்கும் உள்ளாக்குகிறது. சரியாக அறிந்து கொள்வதால் ஆர்வமும் அதன் பயனாக ஆற்றலும் வெளிப்படும்.

  நல்ல அறிவாளி மட்டுமே நன்றாக கணக்குப் போட முடியும் என்பது நம்மிடையே இருந்து வரும் மூடநம்பிக்கைகளில் ஒன்றாகும்.நன்றாக கணக்குப் பயிற்சி செய்வதால் நமது வலது மூளைத் தூண்டப்பட்டு சிந்திக்கும் திறன் மேம்படுகிறது.ஜப்பானியர்களின் சோடோக்கு புதிர் கணக்குகளை தொடர்ந்து முயற்சி செய்து வந்தால் மந்த நிலை மாறி நாளடைவில் புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் மாறுவதை நாம் உணர முடியும்.

  சிறுவயதிலேயே கணக்கின் அடிப்படைகளான கூட்டல்,கழித்தல்,வகுத்தல்,பெருக்கல் ஆகியவற்றை நடைமுறை விஷயங்களின் மூலம் மனக்கணக்காக போடும் பயிற்சியை பெற்றோர் அளித்து வர வேண்டும். கடைகளில் சரியாக சில்லறை வாங்குவது,மொத்த விலையில் இருந்து ஒரு பொருளின் விலையை கணக்கிடச் செய்வது, அவர்களின் சேமிப்புத் தொகையை அவ்வப்போது எண்ணச் சொல்வது என்று அவர்களுடைய மூளைக்கு வேலைக் கொடுத்து வரவேண்டும்.

  வாய்ப்பாடுகளை எளிய முறையில் கற்க தரையில் கட்டங்கள் வரைந்து குதிக்கச் செய்தோ அல்லது பொருட்களை பிரித்து அடுக்கிக் காண்பித்தோ கற்றுக் கொடுக்கலாம்.மனப்பாடம் செய்வதைக் காட்டிலும் இது போன்ற செயல்முறை விளக்கங்கள் மூலம் அவர்களுக்கு இயல்பாகவே கணிதத்தின் மீது ஆர்வம் ஏற்படும்.பெற்றோர் இவ் விஷயத்தில் கொஞ்சம் சிரத்தை எடுத்து வந்தால் பிள்ளைகளுக்கு கணிதத்தின் மீதான அச்சம் குறையும்.  ஒரு கட்டிடம் கட்ட அடித்தளம் பலமானதாகவும் உறுதியானதாகவும் அமைவது அவசியம்.அதே போல கணிதத்தின் அடிப்படை விதிகளையும், சூத்திரங்களையும் தெளிவாக தெரிந்து வைத்துக் கொண்டால் உயர்கல்வி வகுப்புகளில் தடுமாற வேண்டி இருக்காது.அல்ஜீப்ரா,கால்குலஸ் போன்ற கணிதப்பிரிவுகள் சில அடிப்படை கோட்பாடுகள் மற்றும் தேற்றங்களைக் கொண்டே அமைக்கப்பட்டிருக்கும். இந்த முக்கிய விதிகளை சரியாக கவனிக்கவோ, கற்கவோ தவறவிட்டு கணக்கைப் போட முயற்சித்தால் ஒன்றுமே புரியாமல் குழப்பத்தில் ஆழ்த்தி விடும்.

  கணித வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது மிகுந்த சிரத்தையுடன் கவனச் சிதைவின்றி இருத்தல் அவசியம்.சந்தேகம் இருப்பின் அவ்வப்போது நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.பள்ளியில் நடத்தப்படும் முறை புரியவில்லை எனில் எளிமையாக சொல்லித் தரக்கூடிய பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம்.

  ‘பாடப் பாட ராகம்’ என்பது போல போட போடத் தான் கணக்கு சுலபமாகும்.வாயால் படிப்பதோ, மனதிற்குள் படிக்க முயற்சி செய்வதோ கணிதப் பாடத்தை பொறுத்தவரை ஒத்துவராது.அன்றாடம் பள்ளியில் நடத்தப்படும் பாடத்தை அன்றே போட்டுப் பார்த்து விடுவது நல்லது.

  மாணவர்கள் ஒரே மாதிரியாக படிக்காமல் சில மாற்று முறைகளை கையாளலாம்.குழுக்கள் அமைத்து ஒவ்வொருவருக்கும் தனித் தனி பகுதிகளாக பிரித்துக் கொடுத்து தங்களுக்குள்ளேயே பாடம் நடத்துவது போல் செய்தால் சுவாரசியம் அதிகரிக்கும்.

  கணிதத் தேர்வில் பெரும்பாலும் நிகழ்பவை கவனக்குறைவான தவறுகள் தான். ஒவ்வொரு கணக்கையும் முடித்துவிட்டு ஓரிரு நிமிடங்கள் சரிபார்த்தால் இந்த பிரச்சினையை போக்கலாம்.அடிப்படைகளை கற்றல்,வழிமுறைகளை சரியாக புரிந்துகொள்ளுதல்,பயிற்சி செய்தல்,கவனக்குறை தவறுகளை சரி செய்தல் இதுவே கணக்கு கற்றலின் சூட்சமம்.இதனை அறிந்தால் கணக்கு கண்கட்டிவித்தையாக தோன்றாது. உயர்நிலை வகுப்பு மாணவர்கள் ‘ப்ளூ பிரிண்ட்‘ படி அதாவது ஒரு பாடத்திற்கு இத்தனை வினாக்கள் தான் கேட்கப்படும் என்ற அட்டவணைத் திட்டத்தின் படி படித்தால் தேர்வில் தோற்காமல் தப்பிக்க முடியும். இம்முறை நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கும் வழிவகுக்கும்.

  இன்றைய தொழில்நுட்பக் கருவிகளும் , செயற்கைகோள்களும், ரோபோக்களும் செயலாற்றுவதை கண்டு நாம் பிரமித்துப் போகிறோம்.ஆனால் அவற்றை உருவாக்கும் பொறி மனித மூளையில் இருந்தே உருவாகிறது. எனவே மாணவச் செல்வங்களே, நமது மூளையின் மகத்தான சக்தியால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  எழுத்தாளர் விஷ்வசாந்தி சரவணகுமார்
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் ஆயிரத்து 991 அனாதை குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களை தத்தெடுக்க சுமார் 20 ஆயிரம் பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. #AdoptionKids #Parents #CentralAdoptionResourceAuthority
  புதுடெல்லி:

  பல்வேறு காரணங்களினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் அனாதைகளாக காப்பகங்களிலும், கருணை இல்லங்களிலும் வளர்ந்து வருகிறார்கள். அவர்களை தங்களது சொந்த பிள்ளைகளாக வளர்க்க குழந்தை பெற இயலா பெற்றோர்கள் பலர் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

  இந்நிலையில், இந்தியாவில் அனாதை குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட காப்பகங்களில் மட்டும் ஆயிரத்து 991 குழந்தைகள் பராமரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெண் குழந்தைகள் மட்டும் ஆயிரத்து 322 பேர் உள்ளனர்.  அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 376 குழந்தைகளும், ஒடிசாவில் 299 குழந்தைகளும் வளர்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இந்நிலையில், இவர்களை தத்தெடுக்க 20 ஆயிரம் பெற்றோர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயிரத்து 991 குழந்தைகளின் எண்ணிக்கை என்பது மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட காப்பகங்களில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.

  மேலும், குழந்தைகளை தத்தெடுக்க 20 ஆயிரம் பெற்றோர்கள் காத்திருப்பதாகவும், அதன்படி, 1 குழந்தைக்காக சுமார் 10 பெற்றோர்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். #AdoptionKids #Parents #CentralAdoptionResourceAuthority 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘நிபா’ வைரஸ் தாக்கியதில் பலியான கேரள நர்சின் 2 குழந்தைகளின் படிப்பு செலவை அபுதாபியில் வசித்து வரும் தொழிலதிபர்கள் தாங்கள் ஏற்பதாக அறிவித்துள்ளனர். #Lini #Nipahvirus
  அபுதாபி:

  கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பெரம்பாவில் வசித்து வந்தவர் லினி (வயது 28). இவருடைய கணவர் சஜீஸ் பக்ரைன் நாட்டில் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு ஹிர்துல் (7) மற்றும் சித்தார்த் (2) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். லினி அங்குள்ள தாலுகா அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.  இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘நிபா’ வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போது, நர்சு லினிக்கும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தொற்றியது. பின்னர் அவர் கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

  ‘நிபா’ வைரஸ் காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்ததால் தான் இறப்பது உறுதி என்பதை உணர்ந்த லினி, தனது கணவர் சஜீசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதன் பின்னர் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இதற்கிடையே லினி அவருடைய கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் பத்திரிகை மற்றும் நாளிதழ்களில் வெளியானது.

  இந்த செய்தியை அறிந்த, அபுதாபியில் வசித்து வரும் சாந்தி பிரமோத் மற்றும் ஜோதி பாலத் ஆகிய 2 தொழிலதிபர்கள் நர்சு லினியின் குழந்தைகளுக்கான படிப்பு செலவுகள் முழுவதையும் தாங்கள் ஏற்பதாக அறிவித்துள்ளனர்.

  இவர்கள் இருவரும் கேரள மாநிலம் பாலக்காட்டில் அவிட்டிஸ் மருத்துவ அறிவியல் மையத்தின் செயல் இயக்குனர்களாக உள்ளனர்.  #Lini #UAEExpats #Nipahvirus
  ×