என் மலர்
நீங்கள் தேடியது "Apple Watch"
- ஆப்பிள் நிறுவனம் அதன் வாட்ச் 8 சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்களை வருகிற செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
- அந்த ஸ்மார்ட்வாட்ச் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஆப்பிள் நிறுவனம் அதன் வாட்ச் 8 சீரிஸ் ஸ்மார்ட்வாட்சை அடுத்ததாக அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச், 3 விதமான வேரியண்ட்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாக இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அண்மையில் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்காணிக்கும் டெம்பரேச்சர் சென்சாரும் இடம்பெற்று இருக்கும் என கூறப்பட்டது. இந்த அம்சம் மூலம் உடல் வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி ஒருவேளை பயனர்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருந்து அவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மருத்துவரை அணுகச் சொல்லி அலர்ட் செய்யும் அம்சமும் இந்த ஸ்மார்ட்வாட்சில் இடம்பெற்று உள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது இதன் டிஸ்ப்ளே பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்ட ஸ்மார்ட்வாட்ச்களை விட இந்த ஸ்மார்வாட்சில் தான் பெரிய அளவு டிஸ்ப்ளே இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாட்ச் 7 சீரிஸை விட வாட்ச் 8 சீரிஸில் உள்ள டிஸ்ப்ளே 7 சதவீதம் பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
- ஆப்பிள் கடிகாரத்தை பயன்படுத்துபவர்கள் அதன் ஓ.எஸ்.சை அந்த நிறுவனத்தின் சமீபத்தைய பாதுகாப்பு பதிப்புகளுக்கு புதுப்பிக்க வேண்டும்.
- இதன்மூலம் தகவல் திருட்டை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் சைபர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று ஆப்பிள் கை கடிகாரத்தை கையில் கட்டினால் தகவல்கள் திருடப்படும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளது.
அதேநேரத்தில் இந்த கடிகாரத்தை பயன்படுத்துபவர்கள் அதன் ஓ.எஸ்.சை அந்த நிறுவனத்தின் சமீபத்தைய பாதுகாப்பு பதிப்புகளுக்கு புதுப்பிக்க வேண்டும்.
இதன்மூலம் தகவல் திருட்டை தடுக்க முடியும் என்று கூறி உள்ளது.


ஆப்பிள் இந்தியா மற்றும் சிட்டிபேங்க் இணைந்து ஆப்பிள் சாதனங்களை வாங்குவோருக்கு கேஷ்பேக் வழங்குகின்றன.
அந்த வகையில் ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் பென்சில் மற்றும் பேக்புக் சாதனங்களை வாங்குவோருக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இன்று (ஜூன் 11) துவங்கும் இந்த சலுகை ஜூலை 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. சிட்டி கார்ப்பரேட் கார்டுகளை தவிர இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து சிட்டிபேங்க் கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தி இந்த சலுகையை பெற முடியும்.
கேஷ்பேக் சலுகை ஒரு கிரெடிட் கார்டுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் மாத தவணை முறையை (EMI) தேர்வு செய்தாலும் பெற முடியும். கேஷ்பேக் தொகை பரிமாற்றம் செய்தது முதல் 90 நாட்களுக்குள் கிரெடிட் கார்டு கணக்கில் சேர்க்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கேஷ்பேக் சலுகையின் கீழ் ரூ.10,000 கேஷ்பேக் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மேக்புக் வேரியன்ட்கள், அனைத்து வித ஐபேட் சாதனங்களுக்கும் ரூ.5,000 வரை கேஷ்பேக், அனைத்து வித ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கும் ரூ.5,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று ஆப்பிள் பென்சில் வாங்குவோருக்கு ரூ.1,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
கேஷ்பேக் சலுகையை சேர்த்தால் என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர் விலை ரூ.67,200, ஐந்தாம் தலைமுறை என்ட்ரி லெவல் ஐபேட் விலை ரூ.23,000-க்கு பெற முடியும். இதே போன்று ஆப்பிள் வாட்ச் 1 சாதனத்தை ரூ.18,950, ஆப்பிள் பென்சில் ரூ.6,600 விலையில் வாங்கிட முடியும்.
புதிய சலுகை ஆப்பிள் அதிகாரப்பூர்வ ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கான பரிமாற்றங்கள் ப்ளூடஸ் / பைன் லேப்ஸ் பிஓஎஸ் டெர்மினல்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இத்துடன் மற்ற சிட்டிபேங்க் சலுகைகளை சேர்க்க முடியாது.